சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Jan 2013

சென்சார் போர்ட் என்பது இருக்கிறதா




ஒவ்வொரு சமூக அவலங்களுக்கு குரல் கொடுக்கும் மக்கள் சினிமாத்துறைக்கு எதிர்த்து குரல் கொடுக்க மறக்கிறார்கள் இல்லை பலவீனப்பட்டு போகிறார்கள்.எல்லா சமூக அவலங்களுக்கும் மிக பெரிய விளம்பர மீடியாவாக சினிமாத்துறை மாறிவிட்டது. சென்சார் போர்ட் என்பது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. மக்களை பார்க்க வைக்க வேண்டும் பணத்தை அள்ள வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே உள்ளது. 

பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் குடிப்பது என்பது மிக கொடிய செயல் போல் இருந்தது, ஆனால் இன்று சிறுவர்களும் குடிக்கும் அளவு சகஜபடுத்தபட்டுள்ளது. ஆபாசமும் வன்முறையும் கற்றுகொடுக்கும் இடமே சினிமா தான். சென்னை ஆசிரியை கொலை வழக்கு ஒரு நேரடி உதாரணம். நடிகைகள் சிலரின் விபசார வழக்குக்காக வக்காலத்து வாங்கிய சினிமா இதுவரை ஒருமுறைகூட சமூக விரோத கருத்துக்களை எடுக்க வேண்டாம் என்று சொல்ல கூட்டம் போட்டதில்லை!

இதை கேட்டால், சமூகத்தில் நடக்காததையா நாங்கள் காட்டுகிறோம் என்கிறார்கள். சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்ததை விளம்பரம் செய்தது போல் எல்லோரும் செய்யும்படி மிக சாதாரண விசயமாக தவறே இல்லை என்னும் படியான சூழலை உண்டாக்கி விட்டார்கள். ஹீரோவை குடிக்க வைத்து, குடிப்பவன் எல்லாம் கெட்டவன் இல்லை அது ஒன்றும் தவறில்லை என்ற மாயையை உண்டாக்கி விட்டார்கள். பள்ளிபருவ காதல், கள்ள காதல், போதை-பீடி, வன்முறை போன்றவற்றை ஹீரோயிசத்தின் அடையாளமாக மாற்றி விட்டார்கள். சினிமாவில் இருந்து வாழ்வின்/நாட்டின் தலைவர்களை தேடும் மாநிலத்தில் இந்த ஹீரோயிசதுக்கு மக்கள் மயங்கி பின்பற்றுவது யதார்த்த உண்மை. போதை ஒழிப்புக்கு ராமதாசும் வைகோவும் சேர்ந்து முதலில் சினிமாகாரர்களை பிடித்து உதைக்க வேண்டும். 

இவர்கள் எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் சினிமா காரர்கள் மீண்டும் தூண்டி விடுவார்கள். மீடியாக்கள் கட்டுபடுத்தபடாமல் குடிப்பவர்களையோ விற்பவர்களையோ மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை.

கவர்ச்சி ஆடைகளின் விளம்பர தூதுவர்களே இந்த சினிமா நடிகர்கள்தான். ரசிகர்கள் கிறங்க வேண்டும் என்பதற்காக ஆடைகளில் எவ்வளவோ குறைத்து இறங்கி வந்துவிட்டார்கள். இதற்கும் ஆபாச நடனத்தின் போது கொஞ்சம் கொஞ்சமாக குனிந்து ரசிகர்கள் ஆரவாரத்தை பெரும் ஆட்டகாரிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இவர்கள் ஏற்றி விடும் கிறக்கத்தால் வாய்ப்பு கிடைக்கும் போது எங்கோ ஒரு பெண் கற்பழிக்கபடுகிறாள். இந்திய கற்பழிப்புக்களில் சினிமாவுக்கு சீரிய பங்கு நிச்சயம் உண்டு!

சினிமாத்துறை மாற வேண்டும். இவ்வளவு நாள் செய்த பாவங்களுக்கு பிராயசித்தம் தேட வேண்டும்..!
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment