ஆண்டவனாலும் தமிழ்நாட்டை
காப்பற்ற முடியாது - ரஜினிகாந்த் 1996 ல்
கடவுள்தான் இந்தியாவை
காப்பாற்ற வேண்டும் - அஜித் 2013 ல்
சேவை வரிவிதிப்பு குறித்து நடிகர்
அஜீத்திடம் கேட்ட போது...
ரயில் கட்டணம் தற்போது
உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. நான் திரை உலகினர்
மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. கட்டண உயர்வு, வரி விதிப்புக்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள ஊழல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த
பணத்தை நம் நாட்டு அடிப்படைத் தேவைகள் வளர்ச்சிக்காக செலவு செய்ய முன்வந்தாலே
போதும். நமது நாடு வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவோ, ‘டாப் டென்’ பணக்கார
நாடுகளில் ஒன்றாகவோ மாறும்.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு
இங்கிருந்து மொத்த வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றனர். இந்த உண்மையை
நாம் மக்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள்.
ஆனால் ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள
ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர்.
கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற
வேண்டும். 1947-ல் இங்கிலாந்தின்
பாராளுமன்றத்தில் இந்தியா,பாகிஸ்தானுக்கான
சுதந்திரம் வழங்குவது பற்றி பேச்சவார்த்தை நடந்த போது,ஒரு அரசியல் வல்லுநர், இது நடந்தால், அதிகாரம் அனைத்தும் அயோக்கியர்கள் கையில் போகும்.
மக்களுக்கு பயனற்ற தலைவர்கள் உருவாகும் நிலைதான் ஏற்படும். அந்த மாதிரி தலைவர்கள்
இனிப்பான நாவையும், காட்டமான இதயத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதிகாரத்துக்காக அவர்கள்
தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்வார்கள். இவர்கள் உண்டாக்கும் குழப்பமான
அரசியல் கூச்சலில் இரண்டு நாடுகளுமே தொலைந்து போகும் என்றாராம்.
நாட்டில் இப்போது உள்ள நிலையைப்
பார்த்தால் சுவாசிக்கிற காற்றுக்கும், குடிக்கிற நீருக்கும் வரி விதிக்கும் நாள் நிச்சயம் இங்கே
வரும்.
இவ்வாறு அஜீத்குமார் கூறினார்.
எனெக்கென்ன
சந்தேகம் என்றால் உங்களுக்கு ( சினிமாவிற்கு ) வரிவிதிக்கும் போதுதான் அதன் கஷ்டம்
புரியமா? பால் விலை,பஸ் கட்டணம் பட்டு ஏழை
மக்கள் கஷ்ட பட்டபோது நீங்கள் எங்கடா பொய் தொலைந்தீர்கள்? இப்பவும்
தமிழக அரசை எதிர்த்து பேச தைரியம் இல்லை.மத்திய அரசு சம்பந்தப்பட்ட இரயில் கட்டண உயர்வை பற்றி
பேசுகிறார்கள்? பெட்ரோல்,டீஸல் விலை ஏறினால் கவலை இல்லை.அதை சார்ந்த காய்கறி,மளிகை பொருட்களின்
விலை ஏறினால் கவலை இல்லை.பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ்
பண்ணியா குப்பையன் இரண்டு ரூபாய் சேவை வரி
கட்டுறான்.நீங்க என்னடா சேவை செய்யுரிங்க? ஒரு கல்யாணத்த பண்ணிட்டு சினிமாங்கற
பேர்ல அடுத்தவன் மகள்,அக்கா,தங்கை, ஏன்
பொண்டாட்டிய கூட தொடுரிங்க,தடவுரிங்க,இதுதான் உங்க சேவையா?வெக்கமா
இல்லியாடா உங்களுக்கு நாதாரிகளா? ஒருத்தன் சொல்றான் சினிமால நடிக்கிறதுக்கு எருமை
மேய்க்க போகலாம்னு?அதென்ன அவ்வளவு கேவலமா? கேக்கிறேன்.இவனுகளுக்கு எல்லாம் அரசாங்கம்
தரும் மானியம் அனைத்தையும் கட் பண்ணனும்.நல்லவேளை ஐயா தமிழினத் தலைவர் இப்போ ஆட்சியில இல்லை.இல்லீனா ஒரு
பாராட்டு விழா எடுத்து மண்டைய குளிர வச்சு எல்லாத்தையும் சாதிச்சுருப்பிங்க.இப்போ இந்த அம்மாகிட்ட
இதெல்லாம் எடுபடாதில்ல....நான்
அஜித்தை மட்டும் குறை கூறவில்லை.ஒட்டு மொத்த திரையுலகத்தினரையும் சேர்த்துதான்.
இனிமேல் எவனாவது என் படம் வருது, தயவு செய்து தியேட்டரில் போய் படம் பாருங்கன்னு மட்டும் சொல்லுங்க கொய்யாலே
மூஞ்சியிலேயே அறையணும்.
No comments:
Post a Comment