சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jan 2013

அழகிரி, ஸ்டாலின்,கலைஞர் - செம காமெடி


      இது ரீமேக் சீஸன். ரீமேக் ஆனதில் ரஜினியின் படங்கள்தான் அதிகம். இன்னும் ரீமேக் பண்ண எவ்வளவோ ரஜினி படங்கள் உண்டு. அதிலும் 'பாட்ஷா’வை மறக்க முடியுமா? இதுவரை யாரும் 'பாட்ஷா’வை ரீமேக் செய்ய முன்வராததால் அழகிரி, ஸ்டாலின், கலைஞரை வைத்து நாமே ரீமேக் செய்துவிட்டோம். இதோ ஆன்டனி - பாட்ஷா, ஸாரி, அழகிரி - ஸ்டாலின் சந்திக்கும் ஹாட் மீட்டிங் காட்சி...

 அழகிரி: என்ன ஸ்டாலின், நல்லாருக்கியா?
ஸ்டாலின்: தளபதி... தளபதி ஸ்டாலின்...
அழகிரி: ஹே...ஹே...ஹே... அத நாங்க சொல்லணுமப்பு.
ஸ்டாலின்: ஹேய்... ஹேய்... ஹேய்... இங்கே பாருங்க, எனக்கும் உங்களுக்கும்தான் சண்டை. இந்த ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும்தான் சண்டை... ஒண்ணு நீங்க ஆளணும், இல்லை நான் ஆளணும்... லோக்கல்ல உங்க ஆளுங்க ஆளணும்... இல்லை என்னோட ஆளுங்க ஆளணும்... தொண்டர்கள் இல்லை... கட்சிக்கு உழைச்சவங்க இல்லை...
கலைஞர்: (மைண்ட் வாய்ஸ்) கடைசி வரைக்கும் நான்தான் ஆளுவேன். அது தலைவர் பதவியா இருந்தாலும் சரி... முதல்வர் நாற்காலியா இருந்தாலும் சரி...
ஸ்டாலின்: எம் மேல வழக்குப் போட்டப்ப எப்டி கமிஷனர் ஆபீஸுக்கே போய் நின்னேன். ஆனா, உங்க பையனை ஓடி ஒளிய வெச்சிட்டீங்களே... இப்படிப் பயப்படுறவங்ககூட சண்டை போடுறது எனக்குப் பிடிக்காது.... இந்த ஸ்டாலின்... தளபதி ஸ்டாலினுக்குப் பிடிக்காது... பிடிச்சுடுறேன்... பிடிச்சுடுறேன்... எண்ணி ஏழே நாளுக்குள்ள தலைவர் பதவியைப் பிடிச்சிடுறேன்...
அழகிரி: யப்பா ஸ்டாலின், என்ன சொன்னே? ஏழு நாள்ல பதவியைப் பிடிக்கிறியா? எண்ணி ஏழே செகண்ட்ல நான் தலைவர் சீட்ல உட்காரவா? புரியலையா? கொஞ்சம் இங்க பாரு... (என்று சொல்லிவிட்டு சட்டென்று கலைஞரின் காலி வீல் சேரில் உட்கார்ந்துகொள்கிறார் அழகிரி.)
ஸ்டாலின்: ஹே...ஹே...ஹே... கொஞ்சம் இங்கே பாரு கண்ணா... (மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த கலைஞரின் நாற்காலியைப் போட அதில் உட்கார்ந்துகொண்டு சுற்றியபடியே, பந்தாவாகச் சிரிக்கிறார் ஸ்டாலின்.) ஹே... ஹே... ஹே... ஒண்ணு சொல்றேன் நல்லாத் தெரிஞ்சுக்கோ நல்லவங்களை இயற்கை சோதிக்கும்... கைவிடாது. கெட்டவங்களுக்கு இயற்கை நிறையக் கொடுக்கும். ஆனா கைவிட்டுடும்...
அழகிரி அப்படியே ஷாக்காகிப் போய் நிற்க, கலைஞரைப் பார்க்கும் ஸ்டாலின், 'பார்த்தீங்களா என் புத்திசாலித்தனத்தை... ஆண்டவனுக்குப் பதிலா இயற்கைங்கிற வார்த்தையை எப்படிப் போட்டேன்னு' என்று சிரிக்கிறார்.
கலைஞர்: உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. கழகத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கி நீங்க. ராமன்- லட்சுமணன் மாதிரினு சொல்ல மாட்டேன். ஆரியர் படையெடுப்பை ஒழிக்க,ராவணன்- கும்பகர்ணன் போல ஒற்றுமையாக வாழ வாழ்த்துகிறேன்!
அழகிரி: (சிரித்தபடியே) பார்த்தீயா தம்பி, நான்தான் ராவணன். நீ அவன் தம்பி கும்பகர்ணன்... அப்பாவே சொல்லிட்டாரு.
ஸ்டாலின்: சரிண்ணே விடுங்க. கும்பகர்ணன் யாருன்னுதான் ஊருக்கே தெரியுமே. நமக்குள்ள எதுக்குச் சண்டை? (நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்)
விஷயம் புரியாமல் அழகிரி சமாதானமாக, கலைஞர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். இந்த களேபரத்துக்கு நடுவே கனிமொழியும், ராஜாத்தியம்மாளும் வருவதாக கலைஞரின் காரில் கிசுகிசுக்கிறார் சண்முகநாதன். காண்டாகிப் போன கலைஞர், 'ராவணன், கும்பகர்ணன் எல்லாம் இருக்கட்டும். இங்கே பேச்சுவார்த்தை நடக்கிற விஷயத்தை, சி.ஐ.டி. காலனிக்குச் சொன்ன விபீஷணன் யாருய்யா?' என்றபடி, சென்னைக்குக் கிளம்புகிறார் அவசரமாக!
நன்றி விகடன் 

No comments:

Post a Comment