சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jan 2013

கோழைத்தனமான மத்திய அரசு

                 இந்திய ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் ராணுவத்தினரை வெறும் வாய்பேச்சிலேயே  கண்டித்து வரும் மத்திய அரசுக்கு ( அது எப்போதும் இந்திய அரசல்ல என்பது என் எண்ணம் ) என் கணக்கில்லாத செருப்படிகள்.

              இதுவரை இப்படியொரு கோழைத்தனமான  மத்திய அரசை நான் பார்த்ததில்லை.ஆட்சிக்காக மாநில அரசுகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தட்டும்.காங்கிரஸ் மற்றும்  அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு எதிர் கட்சிகள் ஆளும்  மாநிலங்களுக்கு   ( தமிழ்நாடு உள்பட ) மத்திய அரசின் நிதி உதவி,மானியங்கள்,மண்ணெண்ணெய்,கோதுமை, அரிசி, மிக முக்கியமாக மின்சாரம் போன்றவற்றை பகிர்ந்து அளிப்பதில் மெத்தனமாக இருக்கிறது.

         மீனவர்கள் பிரச்சனை, ஆந்திராவில் தெலுங்கானா,ஜெகன்மோகன் ரெட்டி ,கல்மாடி ஊழல் , இலங்கை தமிழர்கள்  பிரச்சனை,ஸ்பெக்ட்ரம் முறைகேடு,
அந்நிய முதலீடு,லோக்பால் மசோதா என் எதிலும் சரியான நடவடிக்கை எடுக்காமல் பிரச்சனைகளை வளர்த்து கொண்டே செல்கிறது.இது இல்லாமல் 
வெளியுரவுகளிலும் அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணியும் நாடாக  ஆகிவிட்டது.சீனாவின்  வாலாட்டல்களுக்கு எந்த எதிர்ப்பு இல்லாமல் அடங்கி ஒடுங்கி இருக்கிறது.

          இதை எல்லாம் கண்டுதான் வாஜ்பாய் ஆட்சியின் போது "கார்கிலில் " அடி வாங்கிய பாகிஸ்தான் இப்போது துணிந்து தன் நிலைமையை மறந்து ஆட்டம் காண்பிக்கிறது.அப்போது கார்கில் பகுதியில் நுழைந்ததற்கே பாகிஸ்தான் படைகளை ஓட ஓட விரட்டியது இந்திய ராணுவம்.ஆனால் இப்போது இந்திய ராணுவ வீரர்கள் இருவரை சித்ரவதை செய்து தலையை துண்டித்து  கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.   "இது கண்டிக்கத்தக்கது " என டிவியில் பேட்டி கொடுக்கிறார் பிரதமர்,ராணுவ அமைச்சர் முதலானோர்.இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் நம் ராணுவ தளபதி  இறந்த ராணுவ வீரர்களுக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார். 

             அவரை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. ஏனென்றால் அதிகாரம் முழுவதும் அரசியல்வாதிகளின் கையில் அல்லவா இருக்கிறது! அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்காக அமரிக்கா ஆப்கானிஸ்தானை என்ன பாடுபடுத்தியது.அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எவ்வளவு தூர இடைவெளி. அங்கிருந்து படைகளை அனுப்பி ஆப்கானிஸ்தானை தாக்க உத்தரவிட்டார் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி.ஆனால் தினமும் எதோ ஒருவகையில் இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தானை நாம் ஒன்றும் செய்யக்கூடாதா?கேட்டால் "மகாத்மா" வின் அகிம்சை வழியில் செல்கிறோம் என்பர். காந்தி இருந்த அதே மண்ணில் தான் நேதாஜி,பகத்சிங் போன்றோரும் இருந்து உள்ளனர் என இந்த அரசியல்வியாதிகள் மறந்து விட்டனர்.காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை இந்தியா எல்லா பக்கமும் அடிவாங்கும் நிலைதான்.மதசார்பற்ற  அரசாங்கம் என இனியும் பூசி மெழுக முடியாது.காங்கிரசின் அழிவில் தான் இந்தியாவின் எழுச்சி ஆரம்பம் ஆகப்போகிறது.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment