சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jan 2013

15 நாள் நாராயணசாமி


திடீரென தன் நீண்ட நாளையநண்பரின் கன்னத்தில் "பளார்" "பளார்" என அறைந்து விட்டார் நாராயணசாமி.

அறை வாங்கியவருக்கோ பொறிகலங்கிவிட்டது. நாராயணசாமி ஏன் அடித்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

அப்போது ஒருவர் அவரிடம் வந்து,

"
ஏன் அந்த ஆளை போட்டு
இப்படி அடித்தீர்கள்?"

"
ஒரு 15 மாசத்துக்கு முன்னாடி அவன் என்னை "தேவாங்கு" என்று திட்டிவிட்டான்"

"
சரி...அதற்காக 15 மாதத்திற்கு முன்னதாக திட்டியதற்கு இப்போதா அடிப்பது?"

"
பிறகென்ன....இப்போதுதான் நான் தேவாங்கை பார்த்தேன்"



பொருமிக்கொண்டிருந்தார் நாராயணசாமியின் மாமனார்.

"
ஏன் என்ன ஆச்சு?" கேட்டார் நண்பர்.

"
நான் என் மருமகனை, இதை உங்க வீடா நினைச்சிக்கோங்கன்னு சொல்லி, என் வீட்டிலேயே தங்க வச்சிகிட்டேன்"

"
அதனால என்ன?"

"
இப்ப என்கிட்டேயே வாடகை கேட்கிறார்
"



என்ன நாராயணசாமி அண்ணே...உங்க வீட்ல இன்னைக்கு வெண்டைக்காய் சாம்பார் போலிருக்கு"?

ஆச்சரியப்பட்டுபோனார் நாராயணசாமி. எப்படி இதை கண்டுபிடித்தார்?

"
உங்களுக்கு எப்படி தம்பி தெரியும்?"

"
இதுல என்ன இருக்கு...எங்க வீட்டு கழனியில காய்த்திருந்த வெண்டைக்காய்களை காணோம்"



என்ன டாக்டர்.. வழக்கமா 100 ரூபாய் தானே "கன்சல்ட்டிங் பீஸ்" வாங்குவீங்க.. இன்னைக்கு 150 ரூபாய் கேட்கறீங்க..?"

"
வெளிலே உட்கார்ந்திருக்கும்போது நர்ஸ்கிட்டே புண்ணாக்கு(ம்) டாக்டர் எப்போ கூப்பிடுவார்ன்னு கேட்டீங்களாமே.. 
அதுக்கு "இன்சல்ட்டிங் பீஸ்" 50 ரூபாய் சேர்த்திருக்கேன்..!"


No comments:

Post a Comment