சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Feb 2013

You tube பணம் சம்பாதிக்க



     நிறைய நண்பர்கள் இனையத்தில் தேடுவது you  tube  ல் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை தான். நானும் பல மாதங்களாக  முயற்சி செய்து  you tube ல்  account open பண்ணி கண்டுபிடித்தேன். you  tube  ல் வீடியோக்களை அப்லோட் செய்து அதில்  google adsense மூலம் விளம்பரங்களை பெற்று அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.உங்கள் வீடியோக்கள் 1000 முறை பார்த்தால் 3 டாலர் முதல் 10 டாலர் வரை சம்பாதிக்கலாம்.மேலும் உங்கள் வீடியோக்களில் வரும் விளம்பரங்களை சொடுக்குவதன் மூலமும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அதற்க்கு சில விதிமுறைகள் you tube  ஆல் கொடுக்கப்பட்டுள்ளது.

1) adsense account :
                  முதலில் நீங்கள்  google adsense account open செய்ய வேண்டும்.அப்போதுதான் வீடியோக்களை   நீங்கள் அப்லோட் செய்யும் போது விளம்பரங்கள் உங்கள் வீடியோக்களில் தோன்றும். முன்பே நீங்கள்  adsense account வைத்திருந்தாலும் இதற்காகவே தனியாக ஒரு  adsense account  open செய்து கொண்டால் நல்லது.

2) you tube ல் பார்வையாளர்கள் எண்ணிக்கை:
             you tube உங்கள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய பயன்படுத்தும் முக்கிய விதிகளில் ஒன்று  உங்கள் வீடியோக்களை பார்த்தவர்களின் எண்ணிக்கை தான்.அவர்கள் விரும்பிய வீடியோக்கள் உங்கள் பதிவில் இருக்க வேண்டும்.அதை நிறைய முறை பார்த்திருக்க வேண்டும்.
at least 1,000 subscribers
at least 1,000 views on all your videos
at least 10,000 channel views 
இது மிக குறைந்த அளவுதான் என்றாலும்  5000 சந்தாதாரர்கள் அல்லது 5000 சேனல் வியுக்கள் அல்லது 1,00,000 கமெண்ட்கள் என்பது ஏற்று கொள்ளக்கூடிய வரைமுறை.

3) வீடியோக்களை அப்லோட் செய்யும் முறை:
            நீங்கள் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது 1 அல்லது 2 வீடியோக்களை அப்லோட் செய்தால் உங்களுக்கான வாய்ப்பு குறைவு.தினமும் இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட வீடியோக்களை அப்லோட் செய்ய வேண்டும். அதுவே உங்களுக்கு நீண்ட காலத்திற்கான பயனை தரும். அடிக்கடி புதிய வீடியோக்களை அப்லோட் செய்வது உங்கள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும். நீங்கள் பங்குதாரர் ஆக 100 வீடியோக்களை அப்லோட் செய்ய வேண்டியது அவசியம்.சில பேர் 50 வீடியோக்கள் அப்லோட் செய்தால் போதுமென கூறுகிறார்கள்.

4) உங்கள் வணிகத்தையும் அதிகரிக்க வாய்ப்பு :
                நீங்கள் ஒரு ப்ராண்ட்  அல்லது ஒரு பொருளை பற்றிய வீடியோக்களையும் அப்லோட் செய்யலாம்.அது உங்களின் வியாபாரத்தையும் அதிகரிக்கும்.அதே போல  you tube லும் உங்கள் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மற்றும் உங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

5) உங்கள் வீடியோக்களின் தரம் :
           நீங்கள் அப்லோட் செய்யும் வீடியோக்கள் அடுத்தவரின் வீடியோவாகவோ அல்லது காப்புரிமை பெற்றதாகவோ இருத்தல் கூடாது.காப்புரிமை மீறல் இருந்தால் உங்களின் you tube  account  முடக்கப்படும். மேலும் இந்த படங்கள், கிராஃபிக்ஸ், லோகோக்கள், வீடியோ கிளிப்புகள் மற்றும் ஆடியோ அடங்கும்.

6)youtube partner ஆக தகுதி உடையவர்
          மேற்கூறிய அனைத்தையும்  நீங்கள் கடைபிடித்து வந்தால் நீங்கள் youtube partner ஆக தகுதி உடையவர்கள் ஆவீர்கள்.பின் youtube ன் அதிகாரபூர்வ பக்கங்களில் சென்று அதற்க்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்ததும் சிறிது காலம் கடந்தே உங்கள் அக்கௌன்ட் அலசி ஆராய்ந்து youtube உங்கள் விண்ணப்பத்தை approoved செய்யும்.ஒரு முறை அப்ப்ரூவேத் ஆகிவிட்டால் பின்னர் எந்த காலத்திலும் பிரச்சனை வராது.பிறகென்ன youtube  partner ஆகுங்கள்.நன்றாக சம்பாதியுங்கள். சந்தோசமாக இருங்கள்.வாழ்த்துக்கள்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!




3 comments:

  1. My web channel promo video
    https://m.youtube.com/watch?v=xTExhpC8nLY

    ReplyDelete
  2. My web channel promo video
    https://m.youtube.com/watch?v=xTExhpC8nLY

    ReplyDelete
  3. My web channel promo video...
    https://m.youtube.com/watch?v=xTExhpC8nLY

    ReplyDelete