சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Feb 2013

சப்தம் போட்டால் கட்டணம்


ஒருமுறை நாராயணாசாமி தனது மனைவியுடன் ஒரு டெல்லிக்கு சென்றார்.

ஒரு இடத்தில் டெல்லியை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.

நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.நாராயணாசாமிக்கும் அவர் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.

அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் "வேண்டாம்" என்றனர்.

அவரும் விடாமல்,

"
நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,''என்றார்.

உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.

குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. 

கீழே இறக்கியதும் விமானி அந்தக் நாராயணாசாமியிடம், 

"
எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு நாராயணசாமி பெருமையாக,

"
எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன்" என்றார்.

"
எந்த தருணத்தில்...?" என்று விமானி கேட்க,

நாராயணாசாமி சொன்னார்,

"
என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது"


நாராயணசாமி ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஏழை குடிமகன்.

அதனால் கழுதையில் ஏறித்தான் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்.ஆனால் எப்போதும் தாமதமாகவேவீடு திரும்புவது வழக்கம்.அவன் மனைவிக்கு அதனால் ஏகப்பட்ட கோபம்.

நாராயணசாமி தன் மனைவியிடம்,

"
என் பிரச்சினையைப் புரிந்து கொள்.தொழிற்சாலையில் கடைசிச்சங்கு ஊதியவுடன் என் கழுதை அங்கிருந்து உடனே புறப்பட்டு விடும்.இரண்டு மூன்று வினாடிகளுக்குக் கூட அது காத்திருக்காது.நான் அதன் மேல் ஏறினேனா இல்லையா என்றெல்லாம் பார்க்காது.அது பாட்டுக்குப் புறப்பட்டு விடும்.அப்படிப் பழகி விட்டது அது.தொழிற்சாலை விடும் வேளையில் ஏகப்பட்ட நெரிசல்.எல்லோரும் அடித்துப் பிடித்து வெளியேறிக் கொண்டிருப்பார்கள்.அந்தக் கூட்ட நெரிசலில் நான் வெளியே வரப் பல தடவை தாமதமாகி விடுகிறது.வந்து பார்த்தால் கழுதை இருக்காது.நான் என்ன செய்ய?நடந்தே வீடு வர வேண்டி இருக்கிறது.இது தான் என் பிரச்சினை"என்று சொன்னார்.

அவள் இதில் சமாதானம் அடைந்திருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.

"
இதனால் நீ அறியும் நீதி என்ன?''என்று மனைவியை கேட்டார் நாராயணசாமி.

அவர் மனைவி சொன்னாள்,

"
வீடு திரும்புவதற்கு சரியான நேரம் என்ன என்பது ஒரு கழுதைக்குக் கூடத் தெரிந்திருக்கிறது என்பது தான் நான் அறியும் நீதி
"


தொழில் விஷயமாக சென்னைக்கு வந்தார் நம்ம நாராயணசாமி.

அங்கே ஒரு தெருவிற்கு சென்றார். கையிலிருந்த விலாசத்தைக்காட்டி பலரிடம் விசாரித்து ஒரு வீட்டுக்கு வந்தார்.அந்த வீடு ஒரு விலைமகளிர் வசித்து வந்த வீடு.

ஒரு மனிதன் தனது வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தவுடன் அந்தப் பெண் மிக மகிழ்வுடன் நாராயணசாமியை வரவேற்று உபசரித்தாள்.

நாராயணசாமியும் அவளுடன் மகிழ்ச்சியாய் இருந்துவிட்டு புறப்படுகையில் பத்தாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்தார். 

அவளுக்கு மிகுந்த ஆச்சரியம்.அவள் அவனிடம் சொன்னாள்,

"
மிக்க நன்றி இதுவரை யாரும் பெருந்தன்மையுடன் இவ்வளவு பெருந்தொகையை எனக்குக் கொடுத்தது கிடையாது.ஆமாம்,நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?"

நாராயணசாமி சொன்னான், "பாண்டிச்சேரியிலிருந்து வருகிறேன்."

அவள் வியப்பைத் தனது முகத்தில் காட்டியவாறே,"

அடடே,நானும் மதுரைக்காரிதான்."என்றாள்.

நாராயணசாமியும்,"எனக்குத் தெரியும்"என்றார்.

அந்தப்பெண் எப்படித்தெரியும் என்று கேட்க,

நாராயணசாமி சொன்னார்,

"
நான் சென்னைக்கு ஒரு வேலையாய் வருவது தெரிந்து உன் தந்தைதான் என்னிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து உன் முகவரியையும் கொடுத்து உன்னிடம் கொடுக்கச் சொன்னார்."

மயங்கி விழுந்தாள் அந்தப் பெண் .


No comments:

Post a Comment