நாராயணசாமி மதிப்பு வாய்ந்த ஒரு நாட்டின் அமைச்சர்.
ஒரு முறை பக்கத்து நாட்டு அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.
அங்கு அவருக்குக் கிடைத்த ஆடம்பரமான வரவேற்பைப் பார்த்து அதிசயித்து,அந்த அமைச்சரால் தனிப்பட்ட முறையில் எப்படி அவ்வாறு செலவழிக்க முடிகிறது என்று கேட்டார்.
அதற்கு அந்த பக்கத்து நாட்டு அமைச்சர், ஜன்னலைத் திறந்து காட்டி ஒரு பாலத்தைக் காட்டினார்.
"அதோ ஒரு பாலம் இருக்கிறதே... அதை நான் தான் கட்டினேன்... அதில் தனக்கு பத்து சதவீதம் கிடைத்தது... அதில்தான் இந்த வசதி வாய்ப்புகளெல்லாம்"
விருந்து முடிந்து சொந்த நாட்டுக்கு நாராயணசாமி வந்தபின், சுமார் ஒரு வருடத்திற்குப் பின்,பக்கத்து நாட்டுக்காரரை தன் சொந்த விருந்தாளியாக அழைத்ததன் பேரில் அவரும் வந்தார்.
நாராயணசாமி கொடுத்த வரவேற்பைப் பார்த்து அவர் கதி கலங்கி விட்டார் பக்கத்து நாட்டு அமைச்சர். அவர் முகக் குறிப்பறிந்த நாராயணசாமி ஒரு ஜன்னலைத் திறந்து,
"அதோ பாலம் தெரிகிறதா?" எனக் கேட்டார்.
"கண் பார்வை தெரியும் தூரம் வரை பாலம் ஒன்றையும் காணவில்லையே?" எனச் சொன்னார் பக்கத்து நாட்டு அமைச்சர்.
அதற்கு நாராயணசாமி சிரித்துக் கொண்டேசொன்னார்,
"ஆமாம்,எனக்கு நூறு சதவீதம்"

நாராயணாசாமி வெட்டியாக ஊர் சுற்றுபவர்.
ஒருநாள் எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலையில் களைப்பாக வீடு திரும்பினார். வந்ததும் வராததுமாக, தொலைக்காட்சி ரிமோட்டை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, மனைவியை அதிகாரமாக அழைத்து,
"நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் நல்ல காஃபி போட்டு எடுத்து வா..!" என்று ஆணையிட்டார்.
மனைவியோ,தன் கணவரின் மீது கொலைவெறியில் இருந்தாலும், பேசாமல் போய் காபி போட்டுவந்து கொடுத்தார். காபியை கையில் கூட வாங்காத நாராயணாசாமி,
"காபின்னா.. வெறும் காபிதான் தருவியா..? ஓடு.. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு முன் கொறிக்க ஏதாவது எடுத்து வா.." என்று விரட்டினார்.
இம்முறையும் கணவரை மன்னித்துவிட்ட மனைவி, மறு பேச்சு பேசாமல் போய் மிக்சர் எடுத்து வந்தார்.
மிக்சரை கொஞ்சம் வாயில் போட்ட நாராயணாசாமி,
"சரி.. சரி.. மரம் போல நிற்காதே.. நிகழ்ச்சி ஆரம்பம் ஆகுமுன் மின்விசிறியை சுழல விடு.. அந்த டீபாயை நான் கால் வைத்துக்கொள்ள ஏதுவாக என் அருகே இழுத்துப்போடு. ம்ம்ம்ம் சீக்கிரம்..!" என்று ஆணையிட்டார்.
பொறுமை எல்லை மீறிய மனைவி ஆவி பறக்கும் காபியை நாராயணாசாமியின் தலையில் எடுத்து கொட்டினார்.
கூடவே...
"என்னாய்யா அதிகாரம் தூள் பறக்குது..? வெட்டிச் சோறு தின்னும்போதே இவ்வளவு சவடாலா..? என்னிக்காவது உருப்படியா ஒரு காரியம் செய்திருக்கியா..? அப்படி என்ன நிகழ்ச்சி கொள்ளை போகப்போகுது..? ஒரேயடியா ஆடறே.. ஒடம்பு எப்படி இருக்கு..?" என்று குதறினாள்.
தலையில் ஊற்றப்பட்ட காபியை வழித்து விட்ட நாராயணாசாமி முணுமுணுத்தார்.
"நிகழ்ச்சி ஆரம்பிச்சுருச்சு..!"

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும்
வாசித்துப் பயன் பெற்றுக்
கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
No comments:
Post a Comment