சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Feb 2013

சர்தார்ஜியும்,நாராயணசாமியும்,


மரணப் படுக்கையில்  இருக்கும் மனைவி கனவனிடம்
மனைவி: நான் செத்துப்போயிட்ட வேறொரு கல்யாணம் பண்ணிப்பிங்களா?

கணவன்:ச்சே ச்சே அதெப்பிடிடா பண்ணுவேன்?

மனைவி: ம்ஹும் என்னய மறந்திட்டு வேறொரு கல்யாணம் பண்ணிக்கனும்

கணவன்:உன்ன எப்பிடா மறப்பேன் இனிமே இப்பிடிலாம் பேசக்கூடாது

மனைவி: அதெல்லாம் முடியாது நீங்கஇன்னொரு கல்யாணம் செய்துக்கனும்

கணவன்:ம் பண்ணிக்கிறேன்

மனைவி: கல்யாணத்துக்கு அப்பரம் நம்மளோட ரூம்ல தான் ரெண்டாவது மனைவியோட தூங்குவீங்களா?

கணவன்:கண்டிப்பா வேற எங்க தூங்கறது?

மனைவி: நம்ம கல்யாண போட்டாவ எடுத்திட்டு புது கல்யாண போட்டாவ வச்சுப்பீங்களா?

கணவன்:ஆமா இல்லனா உன் ஞாபகம் அடிக்கடி வருமே

மனைவி: அவளுக்கு புதுசு புதுசா பட்டுப்புடவ வாங்கி கொடுப்பிங்களா?

கணவன்:இல்ல அவளுக்கு சுடிதார் தான் பிடிக்கும்

மனைவி: ?????

கணவன்: (மனதிற்குள்) அடடா மாட்டிக்கிட்டியேடா வீரமணி ஓட்ட வாய்டா உனக்கு



கை,கால்களில் கட்டுடன் அமர்ந்திருந்தார் நாராயணசாமி.
"என்னடா... எப்படி அடிபட்டது?" கேட்டான் அவரது நண்பன்.

"
நேற்று உணவு விடுதியில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டது"

"
ஏன்...என்ன நடந்தது?"

"
என் மனைவியை அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்கு நேற்று இரவுசென்றேன்.சாப்பிடும்போது அவள் உணவில் ஒரு பூச்சி கிடந்தது.உடனே அவள் சர்வரைப் பார்த்து,'இந்தப் பூச்சியைத் தூக்கி வெளியே எறியுங்கள் என்று சொன்னாள் என்றாள்"

"
சரிதானே... அதற்கும் நீ அடிபட்டதற்கும் என்ன சம்பந்தம்?"

நாராயணசாமி சொன்னார்,

"
அந்த சர்வர் என்னைத்தூக்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்துவிட்டான்
"



 நம்ம நாராயணசாமியும், குஜராத்தியும்,சர்தார்ஜியும் ஒரு அலுவலகத்தில் சம பதவிகளில் வேலை செய்து வந்தனர்.

ஒரு நாள் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது,

குஜராத்தி சொன்னார்,

"
என் மனைவி தினமும் எனக்கு பிரியாணிதான் கொடுத்தனுப்புகிறார்.. நாளை மட்டும் அவள் பிரியாணி கொடுத்தனுப்பினால், நமது அலுவலகத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்"

சர்தார்ஜி சொன்னார்,

"
என் மனைவி தினமும் எனக்கு சப்பாத்திதான் கொடுத்தனுப்புகிறார்.. நாளை மட்டும் அவள் சப்பாத்தி கொடுத்தனுப்பினால், நமது அலுவலகத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்"

நாராயணசாமி சொன்னார்,

"
என் மனைவி தினமும் எனக்கு உப்புமாதான் கொடுத்தனுப்புகிறார்.. நாளை மட்டும் அவள் உப்புமா கொடுத்தனுப்பினால், நமது அலுவலகத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்"

மறு நாளும் வந்தது.. உணவு வேளையும் வந்தது... உணவில் எந்தவித மாற்றமும் இல்லை... உடனே மூவரும் அலுவலகத்தில் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

மூவரது மனைவியர்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் வந்த பிறகுதான், மூவரும் தற்கொலை செய்ததற்கானகாரணத்தை அறிந்தனர்.

"
இப்படித் தெரிந்திருந்தால் பிரியாணி கொடுத்திருக்க மாட்டேனே" குஜராத்தியின் மனைவியும்,

"
இப்படித் தெரிந்திருந்தால் சப்பாத்தி கொடுத்திருக்க மாட்டேனே" சர்தார்ஜியின் மனைவியும்,

நாராயணசாமி மனைவியின் அழுகையை மட்டும் நிறுத்தவே முடியவில்லை. நீண்ட நேர சமாதானப்படுத்ததலுக்குப் பின் சொன்னார்,

"
அய்யோ... இன்னைக்கு உப்புமா செஞ்சது மட்டுமில்லாம,அவரேதான டிபன் பாக்சிலயும் வச்சாரு!


மரணப் படுக்கையில் இருந்த நாராயணசாமி, தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"லதா, நான் இறந்தவுடன் நம்முடைய கடையை மூத்த மகன் ராமுக்குக் கொடுத்துவிடு"


"அதை அடுத்த மகன் ராஜாவுக்குக் கொடுத்து விடுவோம்.அவன் ஒரு புத்திசாலி"


"
சரி,நமது லாரியை மூன்றாவது மகன் முருகனுக்குக் கொடுத்துவிடு"

"
ஆனால் என் தம்பி தான் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் அவன் குடும்பத்துக்கு அது வேண்டுமே?"

"
சரி,சரி,கிராமத்திலிருக்கும் வீட்டை நம் மகள் சாந்திக்குக் கொடுத்து விடு"

"
உங்களுக்குத் தெரியுமா?சாந்திக்கு அந்த வீடு பிடிக்காது.எனவே அதை இளைய மகள் மீனாவுக்குக் கொடுத்து விடுவோம்"

கடும் கோபத்துடன் சொன்னார் நாராயணசாமி,

"
இப்போது செத்துக் கொண்டிருப்பது யார்? நீயா இல்லை நானா
?"



No comments:

Post a Comment