சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Feb 2013

சூப்பர் ஸ்டாரின் பேட்டி - பகுதி 1



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி படத்தை முடித்து விட்டு இமயமலை சென்று வந்ததும் விகடனுக்கு அளித்த பேட்டி.அப்போது தலைவரின் இமயமலை பாபாஜியை தரிசிக்க சென்ற நிகழ்ச்சிகள் விகடனில் தொடராக வெளிவந்தது.அதை தவற விட்டவர்கள் என் வலைத்தளத்தில் படித்து கொள்ளவும்.

அனல் சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் ஏறினால், அரை மணி நேரத்தில் ச்சில்லென பெங்களூர்!

...சமீபத்தில் ஒரு நாள் சென்னையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினியுடன் பேசிக்கொண்டு இருந்தோம். விகடனில் வெளிவரும் தன் ஆன்மிக பயணத் தொடருக்குக் கிடைத்திருக்கிற வரவேற்பு பற்றி சிலிர்ப்புடன் இருந்தார்.

இமயமலைப் பயணம் பற்றி ஒரு ஆன்மிகத் தொடருக்கு இப்படி ஒரு வரவேற்புகிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலை. ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ். வெரிகுட்... பிரமாதம்!’’ என்றார். பாபாஜியின் மகத்துவங்கள் பற்றி நிறைய எடுத்துச் சொன்னார். ‘‘நாம ரிலாக்ஸ்டா பேசலாம். நிறைய பேசலாம்.

பெங்களூர்ல மீட் பண்ணலாமா?’’ என்று அழைத்தார். பொதுவாக ரஜினி, ஓய்வுக்கும் தனிமைக்கும் மட்டுமே பெங்களூரைத் தேர்ந்தெடுப்பார். முதல் முறையாக அங்கே நமக்கு அழைப்பு!

ஜூன் 10... பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ஏரியா...

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பிரபலங்கள் வசிக்கிற வசீகரமான பகுதி. ஏரியாவை இப்போது கூடுதல் முக்கியத்துவத்துடன் கவனிக்கிறது கர்நாடக அரசாங்கம். காரணம், ரஜினி!

‘‘ஹாய்!’’ கறுப்பு குர்தா, வெள்ளை பைஜாமாவில் துள்ளலாக வரவேற்கிற ரஜினியிடமிருந்து நமக்குள்ளும் பாய்கிறது உற்சாக மின்சாரம்!
‘‘வாங்க, இங்கே இதான் நம்ம வீடு!’’ என உள்ளே அழைத்துச் செல்கிறார். ‘‘சும்மா சிம்பிளா, நீட் அண்ட் ஸ்வீட் ஹோம்!’’ என வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார். எளிமையான டபுள் பெட்ரூம் ஃப்ளாட். ஏராளமான சினிமா, மியூஸிக் ஆல்பங்கள். ஒரு ஷெல்ஃப் நிறைய புத்தகங்கள். சுவரில் பாபாஜி படங்கள். ஒரே ஒரு உதவியாளர் மட்டும் உடனிருக் கிறார். ‘‘இங்கே நான் மட்டும்தான். திடீர்னு நினைச்சா பறந்து வந்துடுவேன்’’எனச்சிரிக்கிறார்ரஜினி.

தமிழ்நாட்டிலேயே பிரபலமான தலைமுடியைக் கோதும் விரல்கள். காற்றில் கபடி ஆடுகிற கைகளே பாதி பேசிவிடுகின்றன. புருவங்கள் வருடியபடி, ஒரு முறை இடம் வலம் நடக்கிற ரஜினி, ‘‘காபி ஆர் டீ..? என்ன சாப்பிட லாம்?’’ எனக் கேட்டு, ‘‘ஹலோவ்’’ என குரல் கொடுக்க, பெங்களூர் குளிருக்கு இதமான தேநீர் கோப்பைகள் இறக்குமதியா கின்றன.

‘‘ரஜினி சார், நீங்க ரொம்ப அபூர்வமான பொருளா ஆகிட் டீங்க... அதுவும் மீடியா முன் ரஜினி வர்றது அபூர்வத்திலும் அபூர்வமா ஆகிடுச்சு..’’ என்றதுமே சிரிக்கிறார்.

‘‘இது எப்படி ஆகிப் போச்சுன்னா... முதல்ல ¨ட்டிங் நடத்த வெளியே போகலாம்னா, ‘இல்ல சார்... கூட்டம் தாக்குப் பிடிக்க முடியாது. ஸ்டுடியோவிலேயே செட் போட்டு எடுத்திர லாம்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறம் மைசூர், பெங்களூர்னு ¨ட்டிங் போக வேண்டியதாச்சு. இது கொஞ்சங்கொஞ்சமா வளர்ந்து, ஒரு கட்டத்தில் சும்மா நான் வெளியே வர்றதே முடியாதுன்னு ஆகிப்போச்சு. ஆனா, எப்பவும் நான் அதே ஆளுதான்!’’

‘‘ஏன் மௌனத்தையே உங்க ஆயுதமா தேர்ந்தெடுத்தீங்க?’’

‘‘நத்திங் ஸ்பெஷல்! முன்னெல்லாம் பிரஸ்னா ஆறேழு பேர் வருவாங்க... ஆனா, இப்போ பிரஸ் மீட்னாலே, அது ஏதோ பப்ளிக் மீட்டிங் மாதிரி நடக்குது. இருநூறு பேரெல்லாம் வர்றாங்களே. பொதுவா பிரஸ்ல நிறைய நண்பர்கள் உண்டு. ஆனா ஒரு சிலர்... ஒரு சிலர் மட்டும் கொஞ்சம் குறும்பு பண்ணிடறாங்க. காயப்படுத்திடறாங்க!

என் மேரேஜ்ல ஆரம்பிச்சு, டாட்டர் மேரேஜ் வரைக்கும் என்னென்னவெல்லாம் எழுதிட்டாங்க. அது தப்பில்லையா! பட்.. ரெஸ்பெக்ட் பிரஸ்!’’

நீங்கஅபூர்வ ராகங்கள்படத்தில்இதுதான் பைரவி வீடானு சரேல்னு கதவைத் தள்ளிட்டு உள்ளே வருவீங்களே... அப்போ அந்த சினிமா பிரவே சத்தை ஒரு வாய்ப்புனு நினைச்சீங்களா, இல்லே, இதுதான் இனி வாழ்க்கைனு நம்பினீங்களா?

‘‘வாழ்க்கைனுதான்! எவ்வளவு நாள் கனவு, போராட்டத்துக்கு அப்புறம் எனக்குக் கிடைச்ச வாய்ப்பு அது! சினிமா டிராமானு சான்ஸ் தேடி திரிஞ்சதால், கண்டக்டர் வேலையிலிருந்து என்னை டிஸ்மிஸ் பண்ணின நேரம் அது (பெரிதாகச் சிரிக்கிறார்)! ஹைய்யோ... அது பெரிய கதை!
ஆனால், சினிமா எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தரும்னு நான் நினைச்சுக் கூடப் பார்த்ததே இல்லை... ரொம்ப தூரம் கடந்து வந்துட்டேன்!’’

‘‘இதோ இப்போ கோடை விடுமுறை முடிஞ்சு ஸ்கூலெல்லாம்கூடத் திறந் தாச்சு. ஆனாலும், ‘சந்திரமுகிஎல்லா ஷோவும் ஹவுஸ்ஃபுல் ஆகுது. இந்த வெற்றி உங்களுக்கு உணர்த்தியது என்ன?’’

என்றதும், விறுவிறுவென தலை கோதியபடி, நாலைந்து விநாடிகள் தீர்க்கமாக யோசிக்கிற ரஜினி பிரமாதமாகச் சிரிக்கிறார்.

‘‘டெஃபனிட்டா ஹிட்டாகும், நல்லா ஓடும்னு எனக்குத் தெரியும். ஆனா, இத்தனை பெரிய வெற்றி எதிர்பார்க்கலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழ் மக்கள் என் மேல் வெச்சிருக்கிற அன்பு ஒரு துளிகூடக் குறையலைனு உணர்ந்தேன்.’’

‘‘ஒரு பக்கம் கிளாமரான சினிமா லைஃப் ஸ்டைல்... இன்னொரு பக்கம் ஆன்மிகம். அதுவும் இமயமலைக்கெல்லாம் போய் தனிமையில் தன்னைத் தேடுகிற ஆன்மிகம்... ஒரே நேரத்தில் எப்படி இரண்டு வேறு தளங்களில் உங்களால் இயங்க முடியுது?’’

‘‘ம்ம்ம்... இதுதான் நிஜம். சினிமா தான் ரஜினி! ஆன்மிகம்... அது வந்து அப்பப்போ போயிட்டு வர்றது. கொஞ்சங்கொஞ்சமா மனசு அதில் லயிக்க ஆரம்பிச்சிருக்கு. ரெண்டும் கலந்ததுதான் நான்!

மனுஷனுக்கு முதல்ல ஆசைகள், கனவுகள்... ஒரு கற்பனை உலகத்தில் மிதப்பான். அப்புறம் தேவைகள்... அதுக்காக வொர்க்\அவுட் பண்ணுவான். அது கெடைச்சதும், தானாகவே ஒரு ஆடம்பரம் வந்துடும். நினைச்சதெல்லாம் செய்ய ஆரம்பிப்பான். அப்புறம் மலரும் நினைவுகள்! எங்கேயிருந்து வந்தோம்... எப்படி வளர்ந்தோம்னு நினைப்பு ஓடும். இப்படியே போறப்போ சட்டுனு மனசுக்குள் ஒருவேக்குவம்’ & வெறுமை... தனிமை வரும். நாம யாரு, என்ன பண்ணிட்டு இருக்கோம்னு இந்தப் பிறவிக்கு ஒரு அர்த்தம் தரத் தோணும்! எது செஞ்சாலும் சரி, நல்லது செய்யணும்னு ஒரு முடிவெடுத்து செயல்பட்டா நிச்சயம் அந்த வெற்றிடத்தை ஈடுகட்டிடலாம்!’’

‘‘ரஜினிக்கு அழகே சிம்ப்ளிசிட்டிதான். இதுதான் உங்க இயல்பா? இந்த லைஃப் ஸ்டைல் உங்களுக்கு அமைஞ்சது எப்படி?’’

‘‘தெரியலே... இப்படியே தான் இருக்கேன். பொதுவா எனக்குத் தேவைகள் பெரிசா இருந்ததில்லை. எனக்கு எப்பவுமே மன நிம்மதி மட்டும்தான் முக்கியம். மத்த எல்லாம் ரெண்டாம்பட்சம்தான். இப்படி இருக்கணும்... அப்படி இருக்கணும்னு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை. இதுக்குப் பேர் சிம்ப்ளிசிட்டின்னா, ஓகே! இதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!’’
எல்லாருக்கும் அம்மா & அப்பா சொல்லிக் கொடுத்து இறை நம்பிக்கை வரும். ரஜினி சாருக்கு எப்படி வந்தது?’’

‘‘நல்ல கேள்வி! இறை நம்பிக்கை முதல்ல எப்போ எப்படி வந்துச்சுனு சொல்லத் தெரியலை. ஆனா, ஒரு ஏழெட்டு வயசிலேயே எனக்கு மனசுக்குள் மூணு உருவங்கள் வந்துபோகும்... ஒண்ணு ஹிமாலயாஸ். இன்னொண்ணு ஸ்வான் & அன்னப் பறவை! அப்புறம் கமலம்... லோட்டஸ்... தாமரை! இறைவன் மேல ஆழமா எனக்கு நம்பிக்கை வந்ததுக்கு நிறையச் சம்பவங்கள் இருக்கு. அது ரொம்பப் பெரிய ஏரியா!
அப்புறம் என் பிரேயர்...

பொதுவா கடவுள் முன்னால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா நிப்பாங்க. சில பேரு, ‘சாமி எனக்கு அது வேணும்... இது வேணும்னு நிறைய கோரிக்கைகளை வெப்பாங்க. சிலருக்கு கோரிக்கையே இருக்காது. டோட்டலா சரண்டர் ஆகிடுவாங்க. இன்னும் சிலர், கடவுளுக்கு நன்றி சொல்லப் போவாங்க... Ôதாங்க்ஸ் கிவிங்Õ மட்டுமே அவங்க பிரார்த்தனையா இருக்கும்!

என் பிரேயர் ஒவ்வொரு கட்டத்திலேயும் ஒவ்வொரு விதமா இருந்திருக்கு. இப்ப என் பிரேயர் எல்லாம்இறைவா! உன் நினைவோட என்னை வெச்சிரு எப்போதும், அது போதும்!’ அவ்வளவுதான்!’’

‘‘நீங்க திட்டம் போட்டு, கணக்குப் போட்டுத்தான் எப்பவும் செயல்படுவீங்களா... இல்லை, உங்க இன்டியூஷன் உங்களை வழி நடத்துதா?’’

‘‘நிச்சயமா உள்ளுணர்வு தான்! எப்பவுமே நமக்குஆண்டவன் சொல்றான், நாம செய்றோம்தான். இந்தக் கணக்கு போட்டு காய் நகர்த்தற சமாசாரமே தெரியாது. மனசு என்ன சொல்லுதோ அப்படிப் போயிட்டே இருப்பேன்!’’
பர்சனலா ஒரு கேள்வி... ரஜினி சாருக்கு ரெண்டும் பெண் பிள்ளைகள். எப்போவாவதுஅடடா, நமக்கு ஒரு பையன் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?’னு யோசிச்சதுண்டா?

‘‘(துளியும் தயங்காமல்) நெவர்! ஆண் பிள்ளை இல்லியேனு யோசிச்சதே இல்லை. ரெண்டும் பெண் குழந்தைகள்னு சந்தோஷப்பட்ட நேரங்களே அதிகம். ஐஸ்வர்யா & சௌந்தர்யானு நான் ரெண்டு பெண்களுக்குத் தகப்பன். காலையில் எந்திரிச்சு வரும்போது, வீட்டில் ரெண்டு மகள்களும் கலகலனு நடமாடுறதைப் பார்த்தாலே ஒரு தனி சந்தோஷம் வரும். ஆமா, ஒரே ஒரு பொண்ணு இருந்தாக்கூட போதும்... அந்த வீட்டுக்கே உயிர் வந்துடும். ஏன்னா... பெண்தான் சக்தி... தாய்!

ஒரு வீட்ல ஆம்பள கெட்டுப் போயிட்டால், அந்தக் குடும்பத்தை பொண்ணு எப்படியாவது பொழைக்க வெச்சிடுவா. ஆனா, ஒரு பொண்ணு கெட்டுப் போயிட்டா, அந்தக் குடும்பமே அழிஞ்சுபோயிடும்னு சொல் வாங்க! தட்ஸ் வெரி ட்ரூ! பெண் அப்படியரு மகா சக்தி!’’

‘‘வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ரொம்ப கரடுமுரடான பாதையில் பயணம் வந்திருக்கீங்க. இந்த உயரத்துக்கு வர எவ்வளவோ விலை கொடுத்திருப்பீங்க... எங்கேயோ எதிர்பார்க்காத இடத்தில் காயப்பட்டு இருப்பீங்க... அவமானங்களைக்கூட சந்திக்க வேண்டி இருந்திருக்கும்... சில சமயம் எதிர்பார்க்காத தோல்விகள்... ஆனால், இது அத்தனையையும் தாண்டி நீங்க உங்களைக் காப்பாத்திக்கிட்டது எப்படி?’’

‘‘டியூட்டி! செய்ற வேலையில் நமக்கு இருக்குற கன்விக்ஷன்தான் எப்பவுமே நம்மைக் காப்பாத்தும்!

ஒரு சகோதரனா, ஒரு நண்பனா, நடிகனா, மகனா, அப்பனா, குடும்பத் தலைவனா நாம என்ன ரோல் எடுக்கிறோமோ, அதைக் கவனமா முழு மனசோட செய்துடணும்.

வாழ்க்கை ஒலிம்பிக்ஸ் மாதிரி... கிரவுண்ட்ல போய் நின்னுட்டோம்னா, எடுத்துக்கிட்ட வேலையைச் சரியா செஞ்சு, சரியா ஓடிப் போய் எல்லையைத் தொட்டுறணும். ‘கடமையைச் செய்!’ தான் என் பாலிசி! நிச்சயம் பலன் தானே பின்னால் வரும்.

ஏன், நான் சினிமா பண்றப்பகூட அப்படித் தான். சமயத்தில் அம்பது அறுபது சதவீதம் படம் நடக்கும்போதே, அது ஓடுமா ஓடாதானு தெளிவாத் தெரிஞ் சுடும். ரெடியான வரையில் அந்தப் படம் நமக்கு புடிக்கலைன்னே வெச்சுக்குங்க... அதுக்காக அதை விட்டுட்டு விலகிட மாட்டேன். என் ஆர்வத்தையும் குறைச்சுக்க மாட்டேன். அது கமிட்மென்ட். அங்கே நாலு பேர் நம்மை நம்பி இருப்பாங்க... அதனால அந்த வேலையை சின்ஸியரா முடிச்சுக் கொடுத்துருவேன். அப்படித்தான் இருந்திருக்கேன்... இருப்பேன். அந்த உறுதி மனசில் இருந்ததுன்னா ஒவ்வொண்ணா ஜெயிச்சிடலாம்!’’

‘‘முடிவுகள் எடுப்பதில் பொதுவா ரஜினிக்கு ஒரு தயக்கம் இருக்கிற மாதிரி தெரியுதே. உதாரணத்துக்கு, ஒரு படம் பண்றதுக்கே மூணு வருஷ இடைவெளி விட ஆரம்பிச்சுட்டீங்க. என்ன கதைனு முடிவெடுக்க அவ்வளவு டைம் எடுத்துக்கறீங்க... ஆனா, பூஜை போட்டுட்டா அடுத்த மூணாவது மாசம் படம் தியேட்டருக்கு வந்துடுது. ஒரு முடிவு எடுக்கிறதுக்கு ஏன் இந்த பெரிய இடைவெளி... முடிவெடுத்த பின் எப்படி இப்படியரு வேகம்?

‘‘அதுதான் சொன்னேனே... எடுத்துக்கற டியூட்டில நாம சின்ஸியரா இருக்கணும்னு! ஒரு விஷயத்தில் இறங்குறதுக்கு முன்னாடி நிறைய யோசிப்பேன். அது சரிதானா, சரியா வருமா, சரியாப் பண்ணணும்னா என்ன செய்யணும்னு யோசிச்சுட்டே இருப்பேன். எதிலும் இறங்கறதுக்கு முன்னால் அதுக்கு நான் என்னைத் தகுதியாக்கிக்கணும். இதோஇன்னிக்கு நாம சந்திக்கலாம்னு பேசி வெச்சோம். அப்போதிருந்து இதுவும் மனசுக்குள் ஓடிட்டே இருந்தது. சொன்ன நேரத்துக்கு ஒரு நிமிஷம் தள்ளி வந்தீங்கன்னாக்கூட, அது ஒரு நாள் மாதிரி இருக்கும் எனக்கு.

இப்போ சினிமா விஷயம்.. நாம என்ன பண்ணாலும் அது டிஃபரென்ட்டா இருக்கும்னு மக்கள்ட்ட ஒரு எதிர்பார்ப்பு வளர்ந்துருச்சு. அதனால்தான் டைம் எடுத்துக்கிறேன். இதோசந்திரமுகிபிச்சுக்கிச்சு... அப்படி ஒரு சாலிட் ரெஸ்பான்ஸ். குட்... சந்தோஷம். ஆனா, உடனே அடுத்த படம் என்னன்னு உட்கார்ந்துட மாட்டேன். அட்லீஸ்ட் ஆறு மாசத்துக்கு அந்த ஸ்விட்ச்சை ஆஃப் பண்ணிடுவேன். சுத்தமா அதிலேயிருந்து விலகிடுவேன்.

மனசை ஃப்ரீயா வெச்சுக்குவேன். அப்போதான் அடுத்து ஒரு வேலைக்கு படத்துக்கு உட்காரும்போது முழு சக்தியோட இறங்க முடியும்.
அடுத்த மாசம் ஒரு விழாவுக்கு வர்றேன்னு ஒப்புக்கிட்டா, இப்பவே ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அந்த நிகழ்ச்சி சம்பந்தமா நினைவுபடுத்திக்குவேன். அது அப்படியே மனசுக்குள் ஒரு பக்கம் ஓடிட்டே இருக்கும். அங்கே யாரைச் சந்திக்கணும், என்ன பேசணும்னு யோசனை துளைச்சுக்கிட்டே இருக்கும். அதுவே ஒரு பெரிய பொறுப்பா மாறிடும். அதனாலேயே பெரும்பாலும் எந்த நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கறது இல்லை.
சிலர் சொல்வாங்க... ‘நிகழ்ச்சின்னா அப்படியே நேரா போய் கலந்துக்குவேன்னு! என்னால அப்படியெல்லாம் முடியாதுங்க. நான் எந்தச் சின்ன நிகழ்ச்சியா இருந்தாலும், என்னைத் தயார் பண்ணிக்கிட்டுதான் போவேன். மத்தபடி மனசுக்குள் ஒரு கமிட்மென்ட் வந்துட்டா போதும், தடதடனு வேலையை முடிச்சுக் கொடுத்துடுவேன். அதான் என் கேரக்டர்!’’

No comments:

Post a Comment