சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Feb 2013

விஸ்வரூபம் ரகசியங்கள்
விஸ்வரூபம் படப்பிடிப்பு ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா? எங்கே நிஜமாக படம் பிடித்தார்கள்?

விஸ்வரூபம் படம் பல தடைகளையும் தாண்டி தமிழகத்திலும் ரிலீஸ் ஆகி, உத்தரவாதமான வெற்றிப்படம் என்ற பெயரையும் பெற்றுவிட்டது. சர்ச்சைகளையும் கடந்து, விஸ்வரூபம் படத்தின்மேக்கிங்மெச்சப்படுகிறது. படத்தின் சவுன்ட் ட்ராக் தமிழ் பேசாவிட்டால், உலக தரத்தில் ஒரு ஆங்கிலப்படம் என்றே சொல்லிவிடலாம் என்ற விமர்சனங்களும் உள்ளன.

படத்தின் கதை, ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலுமாக மாறிமாறி நடக்கிறது. விமர்சனங்களில்ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட காட்சிகள் சூப்பர், அமெரிக்க காட்சிகள் அட்டகாசம்என்றெல்லாம் எழுதப்படுகின்றன.

எத்தனை பேருக்கு தெரியும், படத்தின் ஒரு பிரேம்கூட ஆப்கானிஸ்தானில் படமாக்கப்படவில்லை என்பது?

எத்தனை பேருக்கு தெரியும், நியூயார்க் என்று படத்தில் காட்டப்படும் அனைத்துக் காட்சிகளும் நியூயார்க்கில் எடுக்கப்படவில்லை என்பது?
அதேபோல, எத்தனை பேருக்கு தெரியும், படத்தில் வரும் அமெரிக்க ராணுவத்தினர் பலர் அமெரிக்கர்கள் அல்ல என்பது?

அதுதான் சினிமா!

ஏப்ரல் மாதம், 20-ம் தேதி, 2011-ம் ஆண்டு, விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு, நியூயார்க்கில் தொடங்குவதாக ஏற்பாடு. துணை நடிகர்கள், ஷூட்டிங் முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்து, நியூயார்க்கில் எல்லாம் தயார் நிலையில் இருநதன. ஆனால், அன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை.

காரணம், விஸ்வரூபம் படப்பிடிப்பு டீமில் உள்ள சிலருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது.

உடனடியாக, புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்தார் கமல்ஹாசன்.

படத்தில் நியூயார்க்கில் நடப்பது போல காண்பிக்கப்படும் சில காட்சிகளில், நியூயார்க் லேன்ட்மார்க்குகள் வரும் காட்சிகள் மட்டுமே அங்கே எடுக்கப்பட வேண்டும். மற்றைய காட்சிகள் நியூயார்க் நகரில்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. ஏதாவது ஒரு வட அமெரிக்க நகரத்தில் எடுக்கப்படலாம்.

இதையடுத்து விஸ்வரூபம் டீம், தமது முதல் கட்ட படப்பிடிப்பை மூவ் பண்ணிய நாடு கனடா! 2011-ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நியூயார்க்கில் நடப்பதான சில காட்சிகள் கனடாவில் படம்பிடிக்கப்பட்டன. சில கனேடிய தமிழர்கள், இந்தக் காட்சிகளை சுலபமாக கண்டுபிடிப்பார்கள்.

அதேபோலத்தான் ஆப்கானிஸ்தான் காட்சிகளும். விஸ்வரூபம் டீமுக்கு ஆப்கானிஸ்தானில் படமாக்கும் யோசனையே வேண்டாம் என ஐடியா கொடுக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அது மிகவும் அபாயமான விவகாரம். ஆப்கானில் நடப்பதாக காண்பிக்கப்பட்ட காட்சிகள் எங்கே படமாக்கப்பட்டன தெரியுமா?

ஜோர்தான் நாட்டில்!

2011-
ம் ஆண்டு நவம்பரில் விஸ்வரூபம் படப்பிடிப்பு டீம், அமான் நாட்டுக்கு ஷிஃப்ட் ஆகியது.

ஜோர்தான் தலைநகர் அமான் முதல் ஸ்டாப். அங்கே சில காட்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ரியல் ஆப்கான் அட்மோஸ்ஃபியர் இங்கில்லை. அதையடுத்து அல்-பெத்ரா என்ற இடத்தில் ஆப்கான் போன்ற இடங்கள் இருப்பது தெரிய வந்தது. “A rose-red city half as old as time” என்று புகழ்பெற்ற நகரம் இது.

இங்குதான், ஆப்கானிஸ்தானில் நடைபெறுவதான பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தில் அமெரிக்க ராணுவத்தினராக காண்பிக்கப்படும் ஆட்கள், ரஷ்யா, ஈரான் மற்றும் ஆபிரிக்கர்கள்.

அதன்பின், அமெரிக்க விசா கிடைத்தது. 2011-ம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்கா சென்ற படப்பிடிப்பு குழு, நியூயார்க்கில் நடைபெறுவதான மீதிக் காட்சிகளை படமாக்கியது.

அமெரிக்காவிலும், நியூயார்க்கில் நடைபெறுவதாக காட்டப்படும் அனைத்து காட்சிகளும், நியூயார்க்கில் படமாக்கப்படவில்லை. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிரான்ட் ராப்பிட்ஸ் நகரிலும், படத்தில் நியூயார்க்கில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இங்கு படப்பிடிப்பு, 2011-ம் ஆண்டு கிருஸ்துமஸ் விடுமுறை காலத்தில் நடைபெற்றது.

ஆனால், படத்தில் பார்க்கும்போது, இந்த வித்தியாசங்கள் எதையும் நீங்கள் உணர மாட்டீர்கள். அநேக ஹாலிவூட் படங்கள்கூட, அமெரிக்காவில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகளை இப்போதெல்லாம் கனடாவில்தான் படமாக்குகிறார்கள்!

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment