சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Feb 2013

நாராயணசாமியின் மகன்



நம்ம நாராயணசாமியின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். 

மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. 

அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..
"
கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

பையனுக்கு ஒன்றும் புரியவில்லை. தந்தை நாராயணசாமியைக் கேட்டான். அவர் சொன்னார்,

"
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"

நாராயணசாமியின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! 

திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"
என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

அதற்கு அவன் அம்மா சொன்னாள்,

"
ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!"


காவிரியில தண்ணீர் இல்லை.... வைகையிலும் தண்ணீர் இல்லை.... பெரியாறிலும் தண்ணீர் இல்லை... தாமிரபரணியிலும் தண்ணீர் இல்லை.

மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட நம்ம நாராயணசாமி ஒரு ஆற்றின் கரையில், மழை வேண்டி தவம் செய்ய ஆரம்பித்தார்.

முதல் நாள், காலை மணி எட்டு. 

அவரது தவத்தைக் கலைப்பதுபோல் ஒரு இளம் பெண் ஆற்றிலிருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து சென்றாள். 

நாராயணசாமியின் மனம் கலைந்தது... தவமும் கலைந்தது.

இரண்டாம் நாள்...கண்களை துணியால் இறுக கட்டிக்கொண்டு உட்கார்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார்.

காலை மணி எட்டு... "ஜல் ஜல் ஜல்" கொலுசின் ஓசை காதுகளில் ரீங்காரமிட்டது. 

நாராயணசாமியின் மனம் கலைந்தது... தவமும் கலைந்தது.

மூன்றாம் நாள்...கண்களுக்கு துணி...காதுகளில் பஞ்சு...

காலை மணி எட்டு... மூக்கில் நுழைந்தது மல்லிப்பூ வாசம்.

நாராயணசாமியின் மனம் கலைந்தது... தவமும் கலைந்தது.

நான்காம் நாள்...மூன்றாம் நாள்...கண்களுக்கு துணி...காதுகளில் பஞ்சு...கூடவே மூக்குக்கும்...மூச்சுகூட விடாத உண்மையான தவம்.

காலை மணி எட்டு....ஒன்பது...பத்து...பதினொன்னு

கண்ணு பாக்கல...காது கேக்கல...மூக்கும் சுவாசிக்கல...

"
தினமும் எட்டு மணிக்கு வந்துருவாளே...இன்னைக்கு ஏன் இன்னும் வரல்ல?"

கேட்டது நாராயணசாமியின் மனது
!!!

No comments:

Post a Comment