நாராயணசாமியின் வீட்டிற்கு வந்தார் ஒரு நண்பர்.
வீட்டில் ஒரு பன்றி இருந்தது. அதன் குணாதிசயங்களைப் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார் நாராயணசாமி,
"ஒரு முறை வீட்டில் ஒரு பகுதியில் தீப்பிடித்து விட்டது உடனே இந்த பன்றி அலாரம் அடித்து எல்லோரும் வந்து பெரும் சேதத்தைத் தவிர்க்க முடிந்தது. இன்னொரு முறை தொட்டியில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த என் பையனைக் காப்பாற்றியது. ஒரு முறை வந்த திருடனைக் கடித்ததில் அவன் ஓடியே விட்டான்"
"கேட்கவே மிக மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அது சரி அது ஏன் மூன்று கால்களுடன் இருக்கிறது?" என்று கேட்டார்.
நாராயணசாமி சொன்னார்,
"என்னதான் இருந்தாலும் ஒரு பன்றியை முழுதாக ஒரே நாளில் சாப்பிட முடியாதல்லவா... அதனால் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி சமைத்து சாப்பிடுகிறோம்?"

நாராயணசாமி ஒரு அசைவ ஹோட்டலுக்குச் சென்று, மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தார்.
பிரியாணி வந்ததும் சாப்பிட ஆரம்பித்ததும் தான் தெரிந்தது அதில் ஆட்டு இறைச்சியுடன், வேறு ஒன்றும் கலந்திருப்பது.
உடனே சர்வரை அழைத்து,
"இது ஆட்டுக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் மாட்டுக்கறி கலந்திருப்பது போல் தெரிகிறதே..." என்றான் நாராயணசாமி.
சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும்,
"ஆமாம் சார்! வாசனைக்காகக் ஆட்டுக்கறியுடன் கொஞ்சம் மாட்டுக்கறியும் சேர்ப்போம்"” என்றான்.
"எவ்வளவு கலப்பீர்கள்?" என்று சர்வரின் சட்டையைப் பிடித்தார் நாராயணசாமி.
"சம அளவு சார்!" என்றான் சர்வர்.
"சம அளவுன்னா... எவ்வளவுடா?..." அதட்டினார் நாராயணசாமி.
அதற்கு சர்வன் சொன்னான்,
"சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? சம அளவுன்னா ஒரு ஆட்டுக்கு ஒரு மாடு தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்"

நாராயணசாமியும், அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டு கடலுக்குள் போனார்கள்.
முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.
பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள். அங்கு நிறைய மீன் கிடைத்தது.
நாராயணசாமியின் நண்பன் சொன்னான்,
"நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்".
நாராயணசாமியும் சந்தோஷமாக ஒத்து கொண்டார். ஆனால், நாராயணாசாமியின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தை கிளப்பினான்.
"நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...?"
கொஞ்ச நேரம் யோசித்த நாராயணசாமி சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்ச நேரம் கழித்து மேலே வந்தான்.
"எங்கடா போயிட்டு வர்றே..? எனக் கேட்ட நண்பனுக்கு,
நாராயணசாமி பெருமையாக சொன்னான்.
"படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டு வந்தேன்.. நாளைக்கு அதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்".

No comments:
Post a Comment