சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2013

விடாமுயற்சி ! விஸ்வரூப வெற்றி !


அரசுத்தேர்வுக்கு இன்னும்மாதங்களே உள்ள நிலையில்............. மாணவகள் மிகுந்த பதட்டத்துடனும் பயத்துடனும் இருப்பார்கள். அதிலும் தனியார் பள்ளி மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.... ஒரு நாள் கூட விடுமுறை இன்றி . காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர் வகுப்புகள் வைத்து மாணவர்களை கஷ்டப்படுத்திவிடுவார்கள். 

இந்த நிலையில் பிள்ளைகள் வீட்டிலிருக்கும் சொற்ப நேரத்திலும்.... டீ.வி. பார்க்காதே, பாட்டு கேட்காதே, நண்பர்களோடு விளையாட செல்லாதே, போன் பேசாதே என்று நாம் கண்டிப்பது அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும். 

நாம்... நம் பிள்ளைகளிடம்......... இந்த தேர்வில் நீ குறைந்த மதிப்பெண் பெற்றால் உனக்கு இஞ்சினியரிங் சீட் கிடைக்காது, நீ டாக்டராக முடியாது, சையின்டிஸ்ட் ஆக முடியாது, இது தான் உன் வாழ்க்கை,,. இதுல போச்சுன்னா அவ்வளவு தான்..... என்று சொல்லி சொல்லி அவர்களின் மனதில் தேர்வு குறித்த ஒருவித அச்சத்தை உண்டு பண்ணிவிடுகிறோம். 

தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டோமே, தோல்வி அடைந்துவிட்டோமே, நம் வாழ்க்கையே போச்சே, பெற்றோர்கள் திட்டுவார்களே என்று பயந்து பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள இதுவே காரணியாகிறது. 

பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளின் பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு தைரியம் கொடுக்க வேண்டுமே தவிர எதிர்மறை விஷயங்களை பேசி அவர்களின் தன்னம்பிக்கையை குறையச் செய்யக்கூடாது.

அரசுத்தேர்வு என்பது பயப்படும் அளவுக்கு பெரிய பூதாகாரமாண விஷயமல்ல. மற்றத்தேர்வுகளைப்போலவே தான் இதுவும். ஆனால். விடைத்தாள்கள் மட்டும் பள்ளிக்கு வெளியே பிறரால் திருத்தப்படும்.
உன்னால் முடிந்தவரை படி, தெரிந்தவரை எழுது, இதில் தவறுவதாலோ மதிப்பெண் குறைவதாலோ ஒன்றும்குடி முழுகிப்போய்விடாது. ஆனால் நாம் நம் லட்சியத்தை அடைய இது ஒரு மிக முக்கியமான பாலம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படித்து இதை கடந்துவிட்டால் எளிதில் இலக்கை அடைந்து வெற்றி பெறலாம்.என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லி தெளிவாகப் புரிய வைப்பதன் மூலம் அவர்களின் பதட்டத்தை தணித்து தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம்..

மாணவர்களுக்கான குறிப்புகள்:

தேர்வுக்குத் தேவையான் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டோமா என்று கவனிக்கவேண்டும்

தேர்வு அறையில் இருக்கையில் அமர்ந்ததும்...... 30 வினாடிகள் கண்களை மூடி உடலை தளர்த்தி மனதை ஒருமுகப்படுத்திம் மூச்சை இழுத்து ஒரு முறை வெளிவிட்டு தனக்குப் பிடித்த விஷயங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்..... 

விடைத்தாளில்...... முதலில்.. உங்கள் தேர்வு எண்ணை குறிப்பிட்ட இடத்தில் நிறப்பவும்......பின் நீங்கள் விடை எழுதும் ஒவ்வொரு தாளிலும் எழுதத்துவங்கும்முன்.... ஒன்று இரண்டு என்று எண்களை குறிப்பிட மறக்க வேண்டாம்

கேள்வித்தாளை முழுமையாகப்படிக்காமல்.......ஒவ்வொரு பிரிவாகப் படித்து அதில் நன்கு தெரிந்தவைகளை மட்டும் முதலில் எழுதவும்...... (முழுவதும் படித்தால்....... நிறைய கேள்விகளுக்கு விடைதெரியாத நிலையில்.. பதட்டத்தில் தெரிந்ததும் மறந்து போகும் எனவே முழுவதும் படிப்பதை தவிர்த்தல் நல்லது.)

ஏதேனும் ஒரு கேள்விக்கு விடை மறந்து பாதியிலேயே யோசிக்க நேர்ந்தால், தயங்காமல் அதை விடுத்து மற்ற கேள்விக்கு விடை எழுதத்துவங்கவும்... மறந்து போனதையே நினைவுபடுத்திக் கொண்டிருந்தால் நேரமாகிவிடும். தெரிந்த விடை எழுதவும் நேரமில்லாமல் போய்விடும்.

இறுதியில் விடைத்தாளை கொடுக்கும் முன் , எழுதிய அனைத்திற்கும் சரியான கேள்வி எண் குறிப்பிட்டுள்ளோமா....... ஒவ்வொரு தாளிலும் தேர்வு எண்ணை சரியாக எழுதியுள்ளோமா என்று கவ்னித்துக் கொடுக்கவும்.

பொதுத்தேர்வு எழுதக்காத்திருக்கும் அனைத்து மாணவ மணவிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment