சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Feb 2013

கமல்ஹாசன் சிக்கிய அரசியல்
             எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட்ட 21 இஸ்லாம் அமைப்புகள் இணைந்து ஸ்வரூபம் படத்தைத் தடை செய்துவிட்டனர் என்று நானும் நீங்களும் நம்பினால் அதுதான் தமிழ்நாட்டு அரசியல்.

       ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். 21 அமைப்புகள் அல்ல, 21000 அமைப்புகள் வந்தாலும் அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு தான் நினைத்ததைச் செய்யும் அதிகாரம் கொண்டவர் ஜெயலலிதா. மறக்கும் வியாதி கொண்ட தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள். அரசாங்க பணியாட்கள் அத்தனை பேரையும் ஒரேநாளில் தூக்குவார். உலகமே எதிர்த்தாலும் நூலகத்தை மருத்துவமனையாக்குவார். மருத்துவமனைக்கு சட்டமன்றத்தைப் போடுவார். அப்படிப்பட்டவர், முஸ்லீம்கள் திரண்டு வந்து புகார் அளித்ததும் பொங்கிவிட்டார் என்பது முழுக்க முழுக்க முட்டாள்தனம் நிரம்பிய அவதானிப்பு.


          சென்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு 200கோடி தருதாக ஆசைகாட்டி, அவரை அதிமுக பக்கம் இழுப்பதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாய் அத்தனைப் புலனாய்வு ஏடுகளும் சொன்னது. அப்போதைக்கு எஸ்கேப் ஆன கமல்ஹாசன் இப்போது மாட்டிக்கொண்டார்.

         ஜெயலலிதாவிற்கு ஆகவே ஆகாதவர் .சிதம்பரம். அப்படிப்பட்ட .சிதம்பரத்தின் புத்தக விழா அண்மையில் நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் கலைஞர், கமல்ஹசன், ரஜினி. அதிலும் கமல் பேசுகையில்வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும்’* என்று முத்தாய்ப்பு வைக்க, பிறகு பேசிய கலைஞரோ வேட்டி கட்டிய தமிழரே பிரதமர் என்று சொல்லி சேலை கட்டிய தமிழர் பிரதமர் கனவில் இருப்பதற்கு பதில் சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு வைத்த ஆப்பு விஸ்வருபத்துக்கு வந்து நிற்கிறது.


        ஜெயா டிவிக்கு விற்கப்பட்ட விஸ்வருபத்தின் தொலைக்காட்சி உரிமை, அதிக விலையின் காரணமாக சன்டிவிக்கு மாறியதாயும் சொல்கிறார்கள். சன் டிடிஎச் ஒளிபரப்பு செய்ய அனுமதியும் வாங்கி இருந்தது.


          முஸ்லீம்கள் அவருக்கு எப்போதும் நண்பர்களாய் இருந்ததேயில்லை. கலைஞர் கூட குல்லாய் போட்டு நோன்புக்கஞ்சி குடிப்பார். ஜெயலலிதா ம்ஹூம். மோடிக்கு நண்பராய் இருந்துகொண்டு முஸ்லீமிற்கு கைதூக்க அவர் அவ்வளவு நல்லவரல்ல. ஆனால் இந்த விஷயத்தில் ஏன் பொங்கினார், முஸ்லீம்களுக்காகவா? 2014ல் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள்.


          கமல்ஹாசனின் மீது ஜெயலலிதாவிற்கு எப்போதுமே பிரியம் இருந்ததில்லை. தன் சக கலைஞன் என்ற பார்வையிருந்தும் கூட, தான் அதே சினிமா இனம் என்று தெரிந்திருந்தும்கூட! கமல்ஹாசன் கலைஞரின் தமிழ் மீது பிரியம் கொண்டவர், அதனால் கமல் ஜெயலலிதாவிற்கு உள்ளூரப்பகையாகிப்போனவர்.


               ’
மாமனை அடிக்க முடியாதவர்கள் மச்சானை அடிப்பார்கள்என்பார்கள். படத்தைத் தணிக்கை செய்யும் சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் வருவது. ஏற்கனவே மத்திய அரசை எல்லாவிதத்திலும் தொடர்ந்து புறங்காட்டி அவமதிக்கிறார். டீசல் விலையை உயர்த்தியதற்காக மத்திய அரசின் மீது மாநில அரசு வழக்குத் தொடரப்போவது தனிக்கதை. இதில், இப்படி மத்திய அரசுக்குட்பட்ட ஒரு சென்சார்போர்டு அமைப்புக்கெதிரே, அதாவது மத்திய அரசு அனுமதித்தபிறகும் தன்னால் தடுக்கமுடியும் என்ற கர்வம்.. அதுதான் இது.


          விஸ்வரூபத்தை தணிக்கை செய்த குழுவில் இருந்த முகமதிய அதிகாரி, முகமது அலி ஜின்னா, சென்ற தேர்தலில் தி.மு.கவின் சட்டமன்ற வேட்பாளர். தி.மு. காரர். ஆக, தி.மு.கவுக்கும் ஒரு ஆப்பு வைத்தாகிவிட்டது. முஸ்லீம்களுக்கெதிராய் ஒரு முஸ்லீமே இருந்தார் என்று அறியப்படுத்தி, இனி முஸ்லீம்கள் இவருக்கு ஓட்டுப்போடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?


          விஸ்வருபத்தின் சேலம் ஏரியா பகுதி உரிமையை உதயநிதிஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கியிருந்தது. உதயநிதி தயாரித்தார் என்பதற்காகவே நீர்ப்பறவை படத்திற்கான வரிவிலக்கை எந்திவித முகாந்திரமும் இல்லாமல் தரமறுத்த அம்மையார், இப்படி ஒரே கல்லில் ஒன்பது ஸ்தானத்தையும் அடிக்க முடியும் என்றால் சும்மா விடுவாரா?


               விஸ்வரூபம் படம் வெளீயிட்ட மலேஷியா, NC 16 தணிக்கை அளித்து அனுமதியளித்திருந்த சிங்கப்பூர் நாடுகளும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களும் படத்தை, முஸ்லீகளின் போராட்டத்தாலோ எதிர்ப்பாலோ நிறுத்தவில்லை. உற்பத்தி இடமான தமிழ்நாட்டிலேயே ஒரு சரக்கை தடைசெய்தபின் இறக்குமதி செய்வது ஆபத்தாகலாம் என்பதால் தான். இது, ஜெயலலிதா தெரிந்தே ஒரு கலைஞனுக்கு, பால்ய நண்பனுக்கு, தனது சொந்த விருப்பு வெறுப்பின் மூலம் செய்த மிகப்பெரிய துரோகம்.


 
இத்தகைய தசாவதார வியூகத்தில் மாட்டிக்கொண்ட கமல், இனி என்ன செய்யப்போகிறார்?
எல்லாக் கதவுகளும் ஒரு சேர அடைபட்ட கமல்ஹாசன் ஒரு சினிமாப்பைத்தியம். சினிமாவை விட்டு அவரால் வெளிவரவே முடியாது. இத்தகைய சூழ்நிலையில் இனி, இரண்டு வழிகள் இருக்கின்றன, அவருக்கு.

       ஒன்று அதிமுக வில் சேரலாம். ராதாரவியைப்போல, ராமராஜனைப்போல, குண்டு கல்யணத்தைப்போல... மேடையேறலாம். பல கோடிகள் கிடைக்கும். அல்லது விஸ்வரூபமே 200 கோடிக்கு ஜெயா டிவியால் வாங்கப்படும். பிரச்சனை எல்லாம் தீரும். கனவுப்படங்களை எடுக்கலாம்.

        இரண்டாம் வழி, வா வா என்று இழுக்கப்பட்டும் ஒளிந்துகொண்டிருக்கின்ற ரஜினியை விலக்கி/இணைத்து, இத்தகைய அதிகார, கலாச்சார தீவிரவாதித்திற்கெதிரே, முதல்வன் படத்தில் அர்ஜூன் பொங்கும் காட்சியைப்போல (ஒரு சூழ்நிலையில் இப்போது இருப்பதால்) தீவிர அரசியலில் இறங்கலாம். ஆடு மாடு வழங்கிவிட்டு, முக்கியப்பிரச்சனைகளில் ஒளிந்துகொள்ளும் விஜயைவிட, தலைவனுக்கேற்ற தகைசால் குணம் சிறிதுமில்லாத விஜயகாந்தைவிட, வருமான வரி நேர்மையும் இடறுகளுக்கெதிரே கலங்காது நிற்கும் தைரியமும் இன்றைய இளைஞர்கள் தேடிக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்று கொண்ட ஒரு தலைவனும் நமக்குக் கிடைக்கலாம்.


No comments:

Post a Comment