சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Feb 2013

15 நாளில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூறி


நாராயணசாமி என்னும் துறவி இமயமலையில் ஒரு உயரமான இடத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார்.

ஒரு சமயம் மலையேறும் குழுவில் வந்தவர்கள் அவரிடம்,

"சுவாமி, இங்குள்ள குளிரை எங்களாலேயே தாங்க முடியவில்லையே!...தாங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?"என்று கேட்டனர்.


"
துளசியும், சுக்குக் கசாயமும் இருக்கும் போதுகுளிர் ஒன்றும் செய்யாது...சரி,நீங்கள் சுக்குக் கசாயம் சாப்பிடுகிறீர்களா?" என்று அவர்களைப் பார்த்து கேட்டார்.

"
சாப்பிடுகிறோம்" என்றனர் வந்தவர்கள்.

"
சரி...இதோ பாரும்மா துளசி...இவர்களுக்கு சுக்குக் கசாயம் போட்டுக் கொண்டு வா," என்றார் துறவி நாராயணசாமி.


நான் பார்க்க அசிங்கமா இருக்கானா???

நண்பர்கள் : அதுல என்ன டவுட்டு காட்டு குரங்கு மாதிரி இருக்க....

காதலி: ச்சே ச்சே அசிங்கமில்லை, லைட் சில சேன்ஞ் பண்ணினா இன்னும் அழகா இருப்பாய்

அப்பா: ரொம்ப முக்கியம் போய் படிக்கிற வேலையைப் பாரு எருமைமாடு.....

அம்மா: எந்த குருட்டு நாய் சொன்னது, நீ ராஜா/ ராணி மாதிரி இருக்க, என் தங்கம் .....

இதுல இருந்து என்ன தெரியுது ????

(
அம்மா எப்போவுமே தன் பிள்ளைய விட்டுக் குடுக்கமாட்டா)


நாராயணசாமி ஒரு மிகச்சிறந்த அறிவாளி... தத்துவஞானி.

ஒரு நாள் நண்பன் ஒருத்தன் அவர் வீட்டுக்கு போய், அவர் காலடியில 15000 ரூபாயை வச்சிட்டு " இது எனது நன்றிக்கடன்" அப்படின்னு சொல்லிட்டு வந்தான்.

எனக்கோ பெருங்கோபம் அவன்மீது.

"
ஏண்டா...15000 ரூபாயை என்கிட்ட கொடுத்தா ஒரு மாசம் நிம்மதியா வாழ்க்கையை ஓட்டுவேனே...எதுக்குடா தேவையில்லாம அவர்கிட்ட போய் கொடுத்த?"

"
அப்படியில்லடா... நான் இன்னைக்கு இந்த மாதிரி நல்ல நிலைமையில இருக்குறதுக்கு அவர்தான் காரணம்.... நான் ஏற்கனவே ஒரு தடவை அவர்கிட்ட அறிவுரை கேட்க போனேன்... உனக்கெல்லாம் அறிவுரை சொல்லமுடியாதுன்னுட்டார்"

சற்று நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்,

"
அன்னைக்கு மட்டும் அவர் எனக்கு அறிவுரை சொல்லியிருந்து அதுபடி நான் நடந்திருந்தேன்னா வாழ்க்கையில வீணாப் போயிருப்பேன்... அதுக்கான நன்றிக்கடன்தாண்டா இது"

இதுக்கு மேல்  நான் எப்படி பேசமுடியும்???


நாராயணசாமி அவர் வசித்த ஊரின் மிகப்பெரியபணக்காரர்.

தன் வேலைக்காரர் யாராக இருந்தாலும் அவர்களை சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவரது வழக்கம்.

ஒரு நாள் ஒரு வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.

வேலைக்காரனும் கடைவீதிக்குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். 

வேர்த்து விறுவிறுத்து வீட்டிற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த நாராயணசாமி, 

"
ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய்" என்று கேட்டுவிட்டி எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. 

"
ஏன் எண்ணேய் குறைவாக இருக்கிறது?" என்று கேட்டார். 

அதற்கு வேலைக்காரன், 

"
டின் அடியில் ஓட்டை இருந்தது அதனால் கீழே வழிந்து விட்டது" என்று கூறினான். 

நாராயணசாமி அவனைக் கேட்டார், 

"
கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது


வக்கீல் நாராயணசாமி மரணப்படுக்கையில் இருந்தார். 

இன்னும் 15 நாள்தான் தாங்கும் என்று மருத்துவரும் சொல்லிவிட்டார். 

மருத்துவர் போனபின்பு நாராயணசாமி தனது மனைவியை அழைத்து பைபிளை எடுத்துச் சொன்னார். 

"
கடைசி நேரத்திலாவது நல்ல புத்தி வந்ததேஎன்று மனைவி வேகவேகமாக பைபிளை எடுத்துவந்தார். 

நாராயணசாமி பைபிளை அங்கே இங்கே என்று புரட்டிக் கொண்டிருந்தார்.

மனைவி கேட்டார்,

"
என்ன செய்கிறீர்கள்?"

நாராயணசாமி சொன்னார்,

"
இறுதித் தீர்ப்பு நாள் வருமல்லவா? அதிலிருந்து தப்புவதற்கு, பைபிளில் ஏதாவது "ஓட்டை" இருக்கிறத்தா என்று பார்க்கிறேன்"


நாராயணசாமி சின்ன சின்ன திருட்டு மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டு அவ்வப்போது நீதிமன்ற வாசலை மிதித்து வரும் நபர்.

அன்றும் அப்படித்தான்...15 நாளில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கு.

அடிக்கடி வழக்குக்காக வந்து போகும் நாராயணசாமியைப் பார்த்து கோபமானார் நீதிபதி

"
இனியொரு முறை இங்கு உன்னை பார்க்க விரும்பவில்லை என்று போன தடவையே கூறினேன் இல்லையா...பிறகு ஏன் மீண்டும் இங்கு வந்தாய்?"

அதற்கு நாராயணசாமி அமைதியாக பதில் சொன்னார்,

"
இதைத்தான் எஜமான், காலையிலிருந்து நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்... இந்தப் போலீஸ்காரங்க அதை கேட்காமல் உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாங்க
!!"


No comments:

Post a Comment