சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Feb 2013

நாராயணசாமி


நாராயணசாமி ஒரு நாடறிந்த ஆன்மீகப் பேச்சாளர்

அவர் ஒரு நாள் தன் மனைவியிடம்,

"
ராமாயண சொற்பொழிவுக்காக டெல்லிக்கு போறேன்... நீயும் வர்றியான்னு" கேட்டார்.

"
நான் வரல்ல.. நீங்க மட்டும் போயிட்டு வாங்க"ன்னாங்க அவங்க.

"
ஏண்டி நீ இப்படி இருக்குற...அன்னைக்கு ராமன் காட்டுக்கு போறேன்னதும்... கூடவே கிளம்பி போயிட்டா சீதை...ஆனால், நீ வரமாட்டேன்னு சொல்ற...இதுதான் என் மேல நீ வச்சியிருக்குற பக்தியா?"

"
அட...சீதை ஒண்ணும் விவரம் இல்லாம ராமன்கூட போகலை...வீட்டுல வயசான மாமனார், மாமியார், கொழுந்தனார்களெல்லாம் இருக்காங்க... அவங்களுக்கு சமைச்சிபோடுறதைவிட காட்டுக்கு போறதே நல்லதுன்னு நினைச்சித்தான், சீதை ராமன் கூட போனாங்க....அப்படி எந்த பிரச்சினையும் எனக்கு இல்லாதப்போ நான் எதுக்கு உங்ககூட வரணும்?"


TTR: டிக்கெட் கொடுங்க?

பயணி: இந்தாங்க.

TTR:
இது பழைய டிக்கெட்

பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?

TTR: ......... ????நாராயணசாமி vs பில்கேட்ஸ்
**************************

நாராயணசாமி: நீங்க தான் பில்கேட்ஸ்ஸா?

பில்கேட்ஸ்: yes what do you want?

நாராயணசாமி: computer company வச்சு நடத்துரது நீங்க தானே?

பில்கேட்ஸ்:yes thats true

நாராயணசாமி: நா இப்ப தான் கம்ப்யூட்டர் வாங்குனேன். "மை கம்ப்யூட்டர்" "மை பிக்சர்"ன்னு இருக்கு ஓப்பன் பண்ணுனா என் போட்டா ஒன்ன கூட காணோம். "வின்டோஸ்" ன்னு இருக்கு ஓப்பன் பண்ணுனா காத்தே வரமாட்டேங்குது. அதெல்லாம் விடு. ரொம்ப முக்கியமான விசயம் "மை டாக்குமெண்ட்"ன்னு இருக்கு என் சொத்து பத்திரம் ஒன்னகூட காணோம்.என்ன கம்பெனி நடத்துர. சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போட்டுருவேன் ஜாக்கிரதை. யாரை ஏமாத்த பாக்குற நீ?

பில்கேட்ஸ்:????????  


மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்
.


கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நம்ம நாராயணசாமி.

நாராயணசாமி : "மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ?" 

அழகிக்கு கோபம் வந்துவிட்டது. 

அழகி : "ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ?"

நாராயணசாமி : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி.... அதுக்காகச் சொன்னேன்"

No comments:

Post a Comment