நாராயணாசாமி வேகமாக காவல் நிலையத்துக்குள் நுழைந்து,
"சார்...சற்று நேரத்துக்குமுன் ஒரு அயல் கிரக வாசியைப் பார்த்தேன்.அவன் எங்களைத் தாக்க வந்தான்" என்று படபடவென சொன்னார்.
அதிகாரி நடந்தவிஷயங்களை விளக்கமாகக் கூறச்சொன்னார்.
நாராயணாசாமி சொன்னார்,
"நான் என் மனைவியுடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். திடீரென அந்த அயல் கிரகவாசி என் மனைவியைப் பிடித்துக் கொண்டான்.எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இங்கு ஓடி வந்தேன்"
காவல் அதிகாரி,
"அடையாளம் ஏதேனும் சொல்ல முடியுமா?''என்று கேட்க
அவர் சொன்னார்,
"நல்ல கனத்த உருவம்.தலை முடி சடை சடையாக இருக்கும்.பல் மூன்று வெளியே துருத்திக் கொண்டிருக்கும்.கூன் விழுந்திருக்கும்..."
"அயல் கிரகவாசி அவ்வளவு பயங்கரமாகவா இருந்தான்?" என்றார் அதிகாரி.
அதற்கு நாராயணசாமி சொன்னார்,
"ஹி,ஹி....நான் சொன்னது என் மனைவியைப் பற்றி"

நாராயணசாமி ஒரு இயற்கை விஞ்ஞானி.
ஒரு சமயம் ஆய்வு செய்வதற்காக காட்டுக்குள் சென்றபோது நரமாமிசம் சாப்பிடும் கும்பலிடம் மாட்டிக்கொண்டார்.
நாராயணசாமி, இன்று நம்மை பலியிட்டு சாப்பிட்டுவிடுவார்கள் என்று நினைத்து உயிருக்கு பயந்து நடுங்கி கொண்டிருந்தார்.
அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.
அந்த கும்பலில் ஒருவன் தமிழில், "அவர் எங்கிருந்து வருகிறார்" என்ற விபரம் கேட்டான்.
நிம்மதி பெருமூச்சுவிட்ட நாராயணசாமி அவனிடம்
"உனக்கு தமிழ் எப்படித் தெரியும்" என்று கேட்க,
அவன், தான் சிறிது காலம் சென்னையில் இருந்து படித்ததாகக் கூறினான்.
ஆஹா...நாகரீகமான ஒருவன் இருக்கிறான்,நாம் தப்பினோம் என்று எண்ணிய நாராயணாசாமி,
"அப்படியானால் உங்கள் கூட்டத்திற்கு நல்ல நாகரீகம் கற்றுக் கொடுத்திருப்பாயே?"என்று கேட்டார்.
அவன் அமைதியாக சொன்னான்,
"ஆமாம்,இப்போதெல்லாம் எங்கள் ஆட்கள் நரமாமிசத்தை கையால் சாப்பிடுவதில்லை... ஸ்பூன்,முள் கரண்டி கொண்டுதான் சாப்பிடுகிறார்கள்"

நாராயணசாமி ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார்.
ஒரு நாள் ஒரு மாணவனை அழைத்து,
"கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…?" என்று கேட்டார்.
"என்னோட ரெண்டு றெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்.." என்றான் மாணவன்.
அவன் பதிலில் கடுப்பான நாராயணசாமி,
"டேய்...அறிவுகெட்டவனே...திடீர்னு உனக்கு ரெண்டு றெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?" என்றார்.
அதற்கு அந்த பையன் சொன்னான்,
"கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார்?...உங்க அப்பனா?"

நாராயணசாமிக்கும் உப்புமாவுக்கும் ரொம்ப தூரம்.
அன்றும் அப்படித்தான். நாராயணசாமியின் விருப்பத்திற்கு மாறாக வீட்டில் உப்புமா.
என்னசெய்வதென்று தெரியவில்லை.. சாப்பிடவும் பிடிக்கவில்லை.
வெளியில் சென்று சாப்பிடலாம் என நினைத்து ஒரு ஹோட்டலுக்கு சென்றார்.
அவர் இருக்கையின் எதிரில் ஒருவன் அல்வா சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
இவருக்கும் அல்வா சாப்பிட ஆசை.
மெனு கார்டை கொண்டு வைத்தார் சர்வர். மெனு கார்டு ஆங்கிலத்தில் இருந்தது. இவரோ ஆங்கிலத்தில் பூஜ்யம்.
வாய் திறந்து கேட்பதற்கோ தயக்கம். நம்மை பற்றி என்ன நினைப்பானோ என்று.
குத்துமதிப்பாக ஒரு இடத்தை சர்வரிடம் சுட்டிக் காட்ட,
சிறிது நேரத்தில் சர்வர் கொண்டு வைத்தான் "உப்புமா"
வேறு வழியில்லை... சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
இதற்கிடையில், எதிர்த்த இருக்கைக்காரன் முதலில் வைத்த அல்வாவை சாப்பிட்டு முடித்துவிட்டு "ரிபீட்" என்றான் சர்வரிடம்.
திரும்பவும் அவனுக்கு அல்வா வந்தது.
அதைக் கவனித்துக் கொண்டிருந்த நாராயணசாமி, "ரிபீட்" என்றால் அல்வா என்பதை அறிந்து கொண்டதால்,
உப்புமாவை முடித்ததும் "ரிபீட்" என்றார்.
சிறிது நேரத்தில்,
அவர் முன்னால் வைக்கப்பட்டது "உப்புமா"

No comments:
Post a Comment