சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Feb 2013

"கற்பனைத் திறம்" மிக்க ஆட்கள் தேவை  நம்ம நாராயணசாமி புதுசா ஒரு கம்பெனியிலவேலைக்கு சேர்ந்தார்....

ஒரு 15 நாட்கள்ள் கழித்து அவர் முதலாளி அவரை கூப்பிட்டார்....

"
நாராயணசாமி.. நீங்கள் இந்தத் துறையில் 15 வருடம் அனுபவம் இருப்பதாகச் சொல்லி வேலையில் சேர்ந்தீர்கள்...ஆனால் நீங்கள் இதற்கு முன் எந்த வேலையும் செய்யவில்லை என்று நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்....ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள் ?"

நாராயணசாமி சொன்னார்,

"
நீங்கதானே சார்..."கற்பனைத் திறம்" மிக்க ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்தீங்க?"


சமுதாயத்தில் இந்த 10 பேர்

பஸ் கண்டக்டர்நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு..முன்னேறு..என்று நம் முன்னேற்றத்தில் குறியாய் இருப்பவர்.
முடிவெட்டுபவர்-நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்
பால்காரர்-நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராது

ஆசிரியர்-தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்
அரசியல்வாதி-பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்
நண்பன்-தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்
டாக்டர்-நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்
மகன்/மகள்பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்
வேலைக்காரி-நம் ஏரியா செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி
மனைவிஅடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
 
 

100
வயதை தாண்டிய நாராயணசாமி செத்து நரகத்துக்குப் போனார்.

ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தார். 

முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் "இங்கே என்ன பண்ணுவார்கள் ? ' என்று கேட்டார். 

அதற்கு அவன் "இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும்" என்றான்.

கேட்கவே நன்றாக இல்லை. ஆகவே நாராயணசாமி அடுத்த நரகத்துக்குப் போனார். அடுத்தது அமெரிக்க நரகம். அடுத்தது ருஷ்ய நரகம்.. ஆக இப்படி. ஆனால் அவை எல்லாமே ஜெர்மானிய நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது. 

இறுதியில் இந்திய நரகம் இருந்தது. 

அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. சரி நம் ஆட்கள் தான் ஏராளமாயிற்றே அவர்கள் தான் நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், இந்தியர்களோடு ஜெர்மானியர்கள் அமெரிக்கர்கள் இன்னும் எல்லோரும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள். 

வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் கேட்டார் நாராயணசாமி. 

"
இங்கே என்ன பண்ணுவார்கள்?"

அதற்கு அவன் "இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு இந்தியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும்" என்றான்.


"
இதுவும் மற்ற நரகங்களைப் போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கிறது ?" என்று கேட்டார் நாராயணசாமி.

அதற்கு அவன் சொன்னான்,

"
ஏனென்றால், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப் பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும்
"

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment