சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Feb 2013

வாத்து நாராயணசாமி


நம்ம நாராயணசாமி புகை வண்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தார்.

அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.

அவரைப் பார்த்ததும் அவள்,

"
என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று கவலையோடு கேட்டாள்.

அதற்கு நாராயணசாமி,

"
ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன்.காற்று பலமாக முகத்தில் மோதியது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது" என்றார்.

"
அப்படியானால்... நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே... உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ?" என்றாள் அவர் மனைவி.

மனைவியின் கேள்விக்கு பதில் சொன்னார் நாராயணசாமி,

"
அது எனக்கு தெரியாதா...நான் அப்படித்தான் நினைத்தேன்... ஆனால் என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை..காலியாக இருந்தது... அப்படி இருக்கும்போது நான் யாரிடம் சென்று இருக்கையை மாற்றிக்கொள்ளக் கேட்பது?"


ஆசிரியர் தனது மாணவர்களிடம், 

"
யாரெல்லாம் சொர்க்கத்துக்கு போகணும்னு ஆசைபடுறிங்க"ன்னு கேட்டார்.

எல்லா மாணவர்களும் கைய தூக்குனாங்க ஒருவனை தவிர...

ஆசிரியர் அந்த மாணவனிடம் கேட்டார்,

"
எல்லாரும் சொர்க்கத்துக்கு போகணும்னு ஆசை படுறாங்க, உனக்கு மட்டும் ஆசை இல்லையா?"

அதுக்கு அந்த மாணவன் சொன்னான்.

"
எங்க அம்மா ஸ்கூல் விட்டதும் நேர வீட்டுக்கு தான் வரணும்னு சொல்லிருக்காங்க"

அந்த பச்ச மண்ணு வேற யாரும் இல்ல நம்ம நாராயணசாமி தான்.


ஒருவன் புதிய காரில் சென்று கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் தேங்கி இருந்ததைக் கண்டான்.

அருகில் வாத்து மேய்த்தபடி நின்று கொண்டிருந்தான் நம்ம நாராயணசாமி.

அவரிடம்,

"
இங்கு ஆழம் ஒன்றும் அதிகம் இல்லையே?''என்று கேட்டான் காரில் வந்தவன்.

அதற்கு "இல்லை" என்று சொன்னார் நாராயணசாமி.

ஆனால் காரைத் தண்ணீரில் விட்ட சிறிது நேரத்தில் கார் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது.

காரின் சொந்தக்காரன்,

"
மடையா,ஆழம் இல்லை என்று சொன்னாயே...இப்பொழுது என் காரே மூழ்கிவிடும் போலிருக்கிறதே?" என்று கத்தினான்.

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
அதுதான் எனக்கும் புரியவில்லை...என் வாத்துக்கள் இதைக் கடந்து வந்த போது பாதி தானே நனைந்திருந்தன!"நம்ம நாராயணசாமியும் , ஒரு டாக்டரும் ஒரே பொண்ணை காதலிச்சாங்க.

அப்போ நம்ம நாராயணசாமி அந்த பெண்ணுக்கு தினமும் ஒரு ஆப்பிள் வாங்கி தர ஆரபிச்சார்.

டாக்டருக்கு சந்தேகம்... நாராயணசாமியையே கூப்பிட்டு கேட்டார்.

"
ஏன் தினமும் அவளுக்கு ஆப்பிள் வாங்கி கொடுக்கிறே"

நாராயணசாமி சொன்னார்,

"
ஏன்னா An apple a day keeps the doctor away!" (தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்கள் டாக்டரை தேடிச் செல்ல வேண்டியதில்லை)

=============(
ஆஹா என்னஒரு வில்லத்தனம் நாராயணசாமிக்கு
)

No comments:

Post a Comment