சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Feb 2013

மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமல்படுத்த படுமா?




மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமல்படுத்த படுமா? என்று இப்போது விவாதம் நடைபெறுகிறது.இதை வலியுறுத்தி  பாமக பல வருடங்களாக பிரச்சாரம் செய்கிறது.தற்போது வைகோ அவர்களும் ,தமிழ்நாடு காங்கிரசும்  இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளன.வைகோ தன் வழியில் நடை  பயணத்தை தொடங்கியுள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளது.இதற்க்கு கட்சி சாரதா பொதுமக்களின் ஆதரவு அதுவும் குறிப்பாக பெண்களின் ஆதரவு மிக அதிகமாக உள்ளது.
 
இந்த இரண்டு கட்சிகளும் திமுக அல்லது அதிமுகவின் கூட்டணியில் இருந்துள்ளன.அப்போதெல்லாம் ஆட்சியில் பங்கு பெற்று இருந்த போது  ஆளுங்கட்சியை மதுவிலக்கு அமல்படுத்த கோராமல் இப்போது கூறுவது ஓட்டு அரசியல் என சிலரால் பார்க்கபடுகிறது.
 
சரி தமிழ் நாட்டில் மதுவிலக்கு எப்போது ரத்து செய்யப்பட்டது?
சுதந்திரம் பெற்றபின் நீதிக்கட்சி,மற்றும் காங்கிரஸ் ஆட்சியின் போது மது விளக்கு தமிழ்நாட்டில் அமலில் இருந்தது.பின் திமுக ஆட்சியை கைப்பற்றியது.அப்போது அண்ணா இருந்த வரை மதுவிலக்கு  அமலில் இருந்தது.அண்ணாவின் மறைவிற்க்கு  பிறகு எம்ஜிஆரின் ஆதரவில் முதல்வரான  கருணாநிதி  மதுவிலக்கை ரத்து செய்தார்.இதை ராஜாஜி போன்றவர்கள் வேண்டாம் என அறிவுறுத்தியும் 
கூட அரசிற்கு அதிக வருமானம் வரும் என கூறி மதுவிலக்கை ரத்து செய்து  சாராய கடைகளை திறந்தார்.பின்னர் சில பிரச்சனைகளால் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்ததும் மதுவிலக்கை அமல்படுத்த நினைத்தார். ஆனாலும் அவரையும்  வருமானத்திற்காக மதுவிலக்கை அமல்படுத்த விடவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் சாராயக்கடை ஒயின்ஷாப் ஆனது.பின் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆன  ஜெயலலிதா இதையே தொடர்ந்தார்

ஜெயலிதா ஒரு படிமேலே போய் கடந்த ஆட்சியில்  அரசாங்கமே மதுவை விற்கும் என டாஸ்மாகில்  மதுபானங்களை விற்க உத்தரவிட்டார்.இது நடந்தது  2002 ஆம் வருடம்.அப்போது அரசுக்கு ஆண்டு வருவாய் 2800 கோடி மட்டுமே. ஆட்சிகள் மாறியது. இப்போது 2013ல் டாஸ்மாக்கின் ஆண்டு வருவாய் 25000 கோடி. மக்களின் மேல் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு என்ன ஒரு அக்கறை.!மக்களை மிக   அதிகமாக ஊக்கப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். இந்த வருமானத்தில் தன வீட்டுக்கு வீடு வண்ணத்தொலைக்காட்சி பெட்டி கொடுத்தார் கருணாநிதி.அதனாலேயே ஆட்சி போனது வேறு விஷயம். இப்போது இதே வருமானத்தை வைத்து தான் அனைத்து இலவசங்களும் மன்னிக்கவும் விலையில்லா பொருட்களும் வழங்கபடுகின்றன.

அடுத்து மதுவிலக்கு மீண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுமா? சத்தியமாக இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு அமல்படுத்த மாட்டார்கள்.இதற்க்கு காரணமாக  சொல்லப்படும் விஷயங்கள்  1)கள்ளசாராய சாவு திகரிக்கும்.  2) பக்கத்து மாநிலங்களில் கேரளா ,கர்நாடகா,மற்றும் ஆந்திர மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லை.எனவே தமிழர்கள்  அங்கே சென்று குடிப்பதால் அந்த மாநிலங்களுக்கு வருமானம் போகும். என சொல்லப்படுகிறது.இதை தவிரவும் வேறு காரணங்கள் உள்ளன. திமுக சார்பாக அவர்கள் குடும்பத்திற்கு ஜெகத்ரட்சகன்,மற்றும் மத்திய அமைச்சராக உள்ள டி.ஆர்.பாலு இருவருக்கும் சொந்தமாக மதுபான தொழிற்சாலை உள்ளது. அதே போல் அதிமுக சார்பாக சசிகலாவின் மிடாஸ் மதுபான தொழிற்சாலை உள்ளது. திமுக அல்லது அதிமுக யார் ஆட்சியிலிருந்தாலும்  இருவரின் சரக்கும் டாஸ்மாக்கிற்கு அனுப்பபடுகிறது. இதை யாரும் மறுக்க முடியாது.இந்த 25000 கோடியில் இவர்கள் வருமானமும் உள்ளது. மேலும் கட்சி தொண்டர்கள் அதவாது அந்தந்த பகுதிகளின் எம். எல்.  அல்லது கவுன்சிலர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் "முன்னேற" டாஸ்மாக்கின்  பார் உரிமை டெண்டர் மூலம்  கட்சி விசுவாசிகளுக்கு விடப்படுகிறது.டெண்டர் விடும் முறைகளை நாளிதழ்களில் படித்து இருப்பீர்கள்ஆனால் அடிமட்ட தொண்டனுக்கு 90 கட்டிங் கூட ஓசியில் கிடைக்காது என்பது வேறு கதை. இப்படி முதல்வர் முதல் ஏரியா கவுன்சிலர் வரை நேரடியாகவும்,மறைமுகமாகவும் மதுவினால் பயன் பெறும்போது தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்துவது என்பது நடக்காத விஷயம்.

இதையெல்லாம் மீறியும் அனைத்து கட்சிகளும் இணைந்து போராடினாலும் விஜய்மல்லையா போன்றவர்கள் கோடிகணக்கில் "கட்சி நிதி " என்ற பெயரில் லஞ்சம் கொடுத்து  காரியம் சாதித்து விடுவர். தமிழக அரசாங்கம்  எப்போதும் "குடி"மக்களுக்கு தீமை செய்யாது.
மதுவிலக்கை அமல்படுத்தும் தைரியம்,துணிச்சல் ஜெயலலிதாவிற்கு மட்டுமே உள்ளது என நான் நினைக்கிறேன்.அப்படி செய்துவிட்டால் ரத்தத்தின் ரத்தங்கள் சொல்வது போல் தமிழகத்தின்  நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்பதை மாற்ற முடியாது.
 
 விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment