சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Feb 2013

கையெழுத்திட்டார் நாராயணசாமி.


ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் நம்ம நாராயணசாமி.

அந்த நிறுவனத்தில் ஓய்வூதியத் திட்டம் ஒன்றை செயல் படுத்த நினைத்தனர். திட்டத்தை செயல் படுத்த அனைத்து தொழிலாளர்களின் சம்மதமும் வேண்டும்.

சம்மதம் தெரிவித்து நாராயணசாமி தவிர மற்ற அனைவரும் கையெழுத்திட்டு விட்டனர்.அது ஒரு நல்ல திட்டம். ஆனால் நாராயணசாமி கையெழுத்து இடாததால் செயல் படுத்த முடியவில்லை.

அவரது சக நண்பர்களும்,மேற்பார்வையாளரும்,மேலாளரும் விளக்கிக் கூறியும் நாராயணசாமி ஏற்றுக் கொள்ளவில்லை.

முதலாளிக்குத் தகவல் தெரிந்ததும் நாராயணசாமியை அவர் அறைக்கு வரச்செய்து,

"
நாராயணசாமி.. இதோ பேனா...ஓய்வூதியத் திட்டத்திற்கான இந்தத் தாள்களில் ஒழுங்காகக் கையெழுத்திடு. நீ மறுத்தால் உன்னை வேலையை விட்டே நீக்க வேண்டியிருக்கும்"'என்று மிரட்டினார்.

மறு பேச்சு பேசாமல் உடனே கையெழுத்திட்டார் நாராயணசாமி.

முதலாளி,

"
இதை முதலிலேயே செய்திருக்கலாமே... ஏன் கையெழுத்து போடவில்லை"என்று கேட்டார்.

நாராயணசாமி சொன்னார்,

"
இந்தத் திட்டத்தைப் பற்றி, தங்களைப் போல யாரும் விளக்கமாகச் சொல்லவில்லையே"




அகில உலக விஞ்ஞானிகள் மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.

அதில் இந்தியா சார்பில் நாராயணசாமி கலந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொன்னார்,


"
நாங்கள் ஒரு கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளோம். அந்த கருவியின் முன்னால் யாரும் பொய் பேச முடியாது. உடனே கண்டுபிடித்துவிடும்"

உடனே நம்ம நாராயணசாமி சொன்னார்,

"
இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. இந்தியர்களாகிய நாங்கள் எல்லோரும் அந்த மாதிரிக் கருவியைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம்
"


1 comment: