சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Feb 2013

இது வெறும் ஸ்கூல் டெஸ்ட் அப்பா! DNA டெஸ்ட் இல்ல...:


மனைவி : என்னங்க..."சாம்பார்ல" அவ்வளவு நெறயாவா உப்பு போட்டுட்டேன்!!!.

கணவன் : ஆமாண்டி...காந்தி மட்டும் இப்ப உயிரோட யிருந்திருந்தா தண்டி யாத்திரையா நம்ம வீட்டுக்குதான் வந்துருப்பார்.


தந்தை : என்னடா ஸ்கூல்ல ஒழுங்கா படிக்கிறியா?

மகன் : என்ன கேள்வி இது? ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்யிறியான்னு உன்னைய என்னைக்காவது கேட்டுருக்கேனா
?


நாராயணசாமியின் மனைவி ஒரு டாக்டரிடம்,

"
டாக்டர்...என் கணவருக்கு ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டது போலிருக்கு... நான் என்ன சொன்னாலும் வெறுமனே உம்முன்னு உட்கார்ந்துகிட்டிருக்கார்"

"
இந்த வியாதி எப்போதிலிருந்து இருக்கு?"

"
ஒரு 15 மாசம் இருக்கும் டாக்டர்"

"
சரி இந்தாங்க...இந்த மாத்திரையை அவருக்கு குடுங்க....சரியாயிடும்"

"
எத்தனை நாள்ல சரியாகும் டாக்டர்"

"15
நாள்ல"

"
என்ன டாக்டர் நீங்களுமா!!!???"


மனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...

கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்
.


பையன் பள்ளிகூட டெஸ்டில் பெயில் மார்க் வாங்கியிருக்கான்....

அப்பா: இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாதே

பையன் : இது வெறும் ஸ்கூல் டெஸ்ட் அப்பா! DNA டெஸ்ட் இல்ல...:

No comments:

Post a Comment