சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Feb 2013

சூப்பர் ஸ்டாரின் பேட்டி - பகுதி 2


ரஜினியின் அழகே அவரது ரசனைதான்! சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட ஆச்சர்யம் காட்டுகிறார். ஏராளமான புத்தகங்கள் வாசிக்கிறார். நிறைய இசை கேட்கிறார். ரகளையான வாழ்க்கை கொட்டிக் கொடுத்த அனுபவங்களால் நிறையவே பக்குவப்பட்டிருக்கிறார் என்பது அவர் பேச்சிலேயே புரிகிறது. சினிமா காட்டும் ஸ்டைல் ஹீரோவுக்கும், எதிரில் அமர்ந்திருக்கிற நிஜ ரஜினிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்!



‘‘கோபதாபமான, கொந்தளிப் பான ஒரு அதிரடி ரஜினியை ஆரம்ப காலம் முதல் தமிழ்நாட் டுக்கு தெரியும். ஆனால், போகப் போக ரொம்பப் பக்குவப்பட்ட மனிதரா தெரியறீங்க...’’

‘‘அடி மேல அடி விழுந்தா அம்மியும் நகரும்னு சொல்வாங்கள்ல... அப்படித்தான் வந்துச்சு... ஹாஹ் ஹாஹ் ஹா!’’
உரக்கச் சிரிக்கிற ரஜினி, அதன் பிறகு சொல்கிற விளக்கத்தில் அவரது வெற்றியின் ரகசியம் ஒளிந்திருக்கிறது!

காலம்ங்கிற ஒரு சிற்பி இருக்கான்ல... அவன் சும்மா டிங்கு டிங்குனு நம்மளச் செதுக்கிருவான். அம்பத்தஞ்சு வருஷ வாழ்க்கை கத்துக் குடுத்த அனுபவத்தில் எல்லாம் பாத்தாச்சு. நல்லது... கெட்டது... எல்லாம் பாத்தாச்சு!
சரசர சரசரனு தூக்கிட்டு வந்து இங்க உக்கார வெச்ச வாழ்க்கை... இந்த சினிமா, பேர், பணம், புகழ் எல்லாத்தையும் தூக்கித் தூர வெச்சிட்டு, ஒரு நிமிஷம் தனியா உக்காந்து பாத்தா, சம்பாதிச்ச ஒரே விஷயம்- & இந்தத் தமிழ் மக்களின் அன்பும், நல்ல நல்ல மனிதர்களின் நட்பும்தான். அதுதான் கிரேட் கிஃப்ட்... சொத்து!

அதனால மனசு செட்டாகிருச்சு... எல்லாத்துக்கும் பழகிருச்சு!தெரிஞ்சோ, தெரியாமலோ யாராச்சும் துன்பம் குடுத்தாலும் சரி... அவங்களுக்கும் சேர்த்து சந்தோஷம் தர ஆரம்பிச்சேன். Ôடூ யுவர் டியூட்டி. கிவ் தி பெஸ்ட்அந்த வகையில் எம் ஹேப்பி!’’

நட்புக்கு, நண்பர்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிற மனிதர் ரஜினி. ஒரு நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி... கொஞ்சம் சொல்லுங்களேன்?

‘‘ஃப்ரெண்ட்ஷிப் இஸ் லைஃப்! அதுக்குத் தனியா ஒரு கிராமர் கிடையாது. ஒரு நல்ல நண்பன் அமையறதே வரம். ஏன்னா, யார்கிட்டேயும் பழகிப் பழகித்தான் புரிஞ்சுக்க முடியும். கஷ்டத்தில்தான் நமக்கு நண்பன் யார், பகைவன் யார்னு தெரியும். நம்மோட பழகறவன் எதுக்காகப் பழகறான்... அவன்ஆப்பர் சூனிஸ்ட்டா, செல்ஃபிஷ்ஷா..? அவன் நிஜமாவே நண்பனா, இல்லே பகைவனா அப்படிங்கிறதெல்லாம் காலப்போக்கில் தான் தெரியும்.

நண்பர்கள் ஏன் முக்கியம்னா, நாம நண்பர்களோடதான் வளர்றோம். சொல்லப்போனா, நல்ல நண்பர்களால் தான் வளர்றோம்! கெட்ட பழக்கங் களோ, இல்லே நல்ல பழக்கங்களோ... எது வர்றதும் நட்பினால்தான்! அதனால ஒருத்தன் நல்லவனா இருக்கிறதுக்கும் கெட்டவனா மாறுறதுக்குமே நட்புதான் காரணம். அதனால்தான் யார்கிட்ட பழகும்போதும், அவங்களை நண்பனா ஏத்துக்கிறதுக்கு முன்னால யோசிக்கணும். ஏத்துக்கிட்டா, அந்த நட்பைக் கடைசி வரைக்கும் காப்பாத்தணும்! நான் அப்படித்தான்... டூ இஸட் நண்பர்கள்தான் எனக்கு!’’ |செல்போன் சிணுங்க, எடுத்துப் பார்க்கிற ரஜினி, பதில் சொல்லி முடித்த இடத்தை மனசுக்குள் ஓட்டிப் பார்த்து, ‘‘நண்பன்!’’ எனச் சிரிக்கிறார்.

தமிழ்நாட்டுல எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் நீங்க... அதனாலயே உங்களுக்கு பிரைவஸி கிடையாது. நினைச்ச மாதிரி வெளியே நடமாட முடியாது. இது உங்களுக்குக் கஷ்டமா இருக்குமா?

‘‘கஷ்டம்தான். அதுவும் என்னை மாதிரி ஒருத்தனுக்கு ரொம்பக் கஷ்டம். Ôஇந்த உலகத்தில் எதுவும் ஃப்ரீ கிடையாது கண்ணா. ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை இருக்குஅதைக் குடுத்தே ஆகணும். எனக்கு பயம், பாதுகாப்பு பற்றியெல் லாம் கவலை இல்லை. இது அன்புக்குக் கொடுக்கிற விலை!
அதனால இதுவும் பழகிருச்சு. இதோ, இப்போ சமீபத்துல ஒரு நாள்... சும்மா தோணுச்சு... என் ஃப்ரெண்டு ஒருத்தரைப் பார்க்க சர்ப்ரைஸா அவர் வீட்டுக்குப் போயிட்டேன். போன வேகத்துல கௌம்பி கார்ல ஏறும்போது பார்த்தா, பக்கத்து வீட்டுக்காரங்க, யு.எஸ்| இருந்து சம்மர் ஹாலிடேவுக்கு வந்தவங்களாம். குழந்தை, அவங்க அம்மா, அப்பா எல்லாரும் திக்குனு என்னை ஆச்சர்யமா பார்க்கிறாங்க. நின்னா கூட்டம் கூடிருமேனு, சிரிச்சுட்டே நான் காரை எடுத்து கியர் போட்டுக் கிளம்பினப்போ... அந்த லேடி வீட்டுக்குள்ள போய் ஒரு கேமரா வோட ஓடி வர்றதைப் பார்த்தேன். ஆனா, அதுக்குள்ள கார் கிளம்பிடுச்சு.
ரெண்டு தெரு தாண்டி போனப் புறம், ‘அடடா, ஆசை ஆசையா ஓடி வந்தவங்க அப்செட் ஆகியிருப்பாங் களே?’னு தோணுச்சு. ‘திருப்பு வண்டியை!’னு ஒரு யூ டர்ன் போட்டு, மறுபடியும் அங்கே போய், அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிட்டு, ஒரு போட்டோ எடுத்த பிறகு தான் வந்தேன். அவங் களுக்குச் சந்தோஷம். அந்த குட்டிக் குழந்தை க்யூட்டா அப்படி ஒரு சிரிப்பு சிரிக்குது. குட்... அது நல்ல விஷயம்!
ஆனா, எங்கியோ ஒரு ஃப்ரெண்டோட இறப் புக்குப் போய் நிக்கும் போதும் அங்கே என்னை Ôரஜினி, ரஜினிÕனு சுத்திச் சுத்தி வந்து பாத்தாங்கன்னா, தட்ஸ் ரியலி டிஸ்டர்பிங்!’’ என்கிறார் தலை உலுக்கி.

சரி, வெளியிலயே போறதில்லை. அப்படியிருக்கும்போது, இன்னிக்கு வெளியில் என்ன நடக்குது, எது ஃபேஷன், மக்கள் ரசனை என்ன, அரசியல் நிலவரம் என்ன... இதெல் லாம் எப்படித் தெரிஞ்சுக்குவீங்க?

‘‘அதுக்குத்தான் மீடியா இருக்கு... ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. அப்புறம், பிரைவஸி இல்லைனு சொல்லி, நான் ஒரே இடத்துல முடங்கிடற ஆள் கிடையாது. நிறையவே டிராவல் பண்றேனே!’’

சினிமாவில் உங்களுக்கும் இளையராஜாவுக்கும் ஆன்மிகம்னு இன்னொரு பரிமாணம் இருக்கு. இருவரும் உங்களுக்குள் அதுபற்றிப் பகிர்ந்துக்குவீங்களா?

‘‘ராஜா சாரை நான் கூப்பிடறதேசாமின்னுதான். இதோ, இப்போ பெங்களூர் கிளம்பி வர்றதுக்கு முன்னாடி ராஜாவைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். திருவாசகத்தைப் போற்றிப் பாடி ஒரு மியூஸிக் ஆல்பம் பண்ணி முடிச்சிருக்காரில்லையா... அந்த மியூஸிக் கேட்டேன்! அப்பிடியே மனசு மிதக்குது. அது சும்மா ஒரு வேலைனு நினைச்சுப் பண்ணியிருந்தா வந்திருக்காது. அதுல பிரமாதமான ஜீவன் இருக்கு... ஒரு தபஸ் மாதிரிதான் அதை செஞ்சிருக்காரு ராஜா!

அதுக்கான விழாவுக்கு நான் வரணும்னு கூப்பிட்டு இருந்தாங்க. ஆனா, விழா நேரத்துல நான் ஊரில் இருக்க மாட்டேன். அதான்,அவர் வீட்டுக்கு சந்திக்கப் போயிருந்தேன். எனக்கும் ராஜாவுக்கும் ஒரு நெருக்கம் உண்டு. அவர்தான் ரமண ரிஷியின் போட்டோ, புத்தகமெல்லாம் எனக்கு முதல்ல தந்தவர். அதுக்குப் பின்னாடிதான் நான் திருவண்ணாமலை போக ஆரம்பிச்சதெல்லாம்! சினிமாவைத் தாண்டி எங்களுக்குள்ள ஆழமான நட்பு எப்பவுமே இருக்கு!’’

இமயமலைப் பயணங்கள்தான் உங்க வாழ்க்கையை மாற்றி அமைச்ச முக்கியமான விஷயமா?

‘‘யெஸ்! என் வாழ்க்கையில் கடந்த 12 வருஷங்கள்தான் மிக முக்கியமான காலகட்டம். சொல்லப்போனா, இந்த 12 வருஷங்களாத்தான் நான் ஹிமாலயாஸ் போக ஆரம்பிச்சதும்!

அங்கே என்ன ஸ்பெஷல்னா, இயற்கை... பிரமாண்டமா விஸ்வரூபம் எடுத்து நிக்கிறப்போ அது முன்னால நாம குழந்தை ஆகிடுவோம். பொதுவா குழந்தைங்க மனசுல எதுவுமே இருக்காதுனு சொல்வாங்க. Ôபாஸ்ட், ஃபியூச்சர்Õனு எந்தக் கவலையும் குழப்பமும் இருக்காது. அது எப்பவுமே க்ளீன் சிலேட்! வெட்கம், அகங்காரம், போட்டி, பொறாமைனு எதுவுமே அவங்க மனசுல இருக்காது. அப்படியரு லேசான மனசு இமயமலைக்குப் போகும்போது நமக்கும் வாய்க்கும்!

எப்பவும் துறுதுறுனு இருக்குற நீங்க, அங்கே எப்படி பல மணி நேரம் ஒரே இடத்தில் அமைதியா இருக்கீங்க?
அங்கே இருக்கறது நேச்சுரல் வைப்ரேஷன், இங்க இருக்கறது ஹியூமன் வைப்ரேஷன். ரெண்டுக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.
பாபாஜி குகைக்குப் போறப்போ அந்த அமைதி தானா வந்துடும். யாரா இருந்தாலும் அப்படியரு அமைதிக்கு ஆளாகிடுவாங்க. அங்கே இருக்கிற செடி, மண்ணு, கல்லுனு ஒவ்வொண் ணும் ஒவ்வொரு செய்தி சொல்லும். சும்மா கரையோரமா உட்கார்ந்து கங்கா நதியைப் பார்த்துட்டிருந்தாலே போதும், நீங்க ஆசிர்வதிக்கப்படுவீங்க!’’

யோகாசனம், தியானம் பழகின பிறகு உங்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன... அதுபத்திக் கொஞ்சம் சொல்லுங்க?

‘‘நிறைய! அது வந்து... நேரடியா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணணும். அப்போதான் அந்த சக்தி... பவர் புரியும். சும்மா யோகா, தியானம்னு பேச ஆரம்பிச்சா, ‘அட போப்பா!’ன்னுட்டுப் போயிடுவாங்க. யோகா உடம்புக்கு... தியானம் மனசுக்கு!
எல்லோருக்கும் டென்ஷன், பிரச்னை, அவஸ்தை, தலைவலி இருக்கு. காலைல வெளியே கிளம்பறப்போ, ‘இன்னிக்குப் புதுசா பிறந்தோம்டா!’னு நினைச்சுக்கிட்டு கிளம்புங்க. ஈவினிங் வீட்டுக்கு வந்ததும் அப்பிடியே உட்காருங்க... சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் கண்ணு மூடி உட்காருங்க. இன்னிக்குக் காலையிலிருந்து சாயந்திரம் வீடு திரும்பற வரை என்னவெல்லாம் நடந்துதுனு நெனச்சுப் பாருங்க.

ஜஸ்ட் திங் அபௌட் இட்! நீங்க யாரையோ காயப்படுத்தி இருக்கலாம். உங்களை யாரோ சந்தோஷப்படுத்தி இருக்கலாம். ஒரு வேலை நல்லபடியா முடிஞ்சிருக்கும். செய்ய நினைச்ச எதையோ மறந்துபோயிருப்பீங்க. அது எல்லாத்தையும் மனசுக்குள் ஒரு ரீப்ளே பண்ணிப் பாருங்க.
முதல் நாள் இது நாலஞ்சு நிமிஷத்தில் முடிஞ்சுபோயிடும். அப்புறம், அதுவே இன்னும் டைம் கூடும். எங்கியோ ஒரு மொமண்ட்ல தடக்குனு நீங்க உங்களை மறந்து ஒரு சூன்யத்துக்குள் போய் வருவீங்க. அந்த அனுபவம் தனி எனர்ஜி தரும். கிரியா யோகாவை முறையா கத்துத் தர நல்ல மாஸ்டர்ஸ் இருக்காங்க. யோகுடா சத்சங்கில் போய்ப் பாருங்க. கத்துக்கிட்டா இன்னும் நல்லா இருப்பீங்க... இது என் எக்ஸ்பீரியன்ஸ்!’’

வாழ்க்கை உங்களுக்குக் கத்துக் கொடுத்த விஷயம் என்ன?

‘‘வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!’’

சினிமாவைத் தவிர, கொஞ்ச காலம் வெளியேயும் நடமாட ஆரம்பிச்சதில் நீங்க புரிஞ்சுக்கிட்ட விஷயம் என்ன?

‘‘அட, எல்லோருமே மனுஷங்கதானே! நம்மைச் சுத்தி ஏமாத்துறவன் நிறைய இருக்கான். அவங்ககிட்டே இருந்து நம்மளைக் காப்பாத்திக்கிட்டாலே போதும். வாழ்க்கையில ஜெயிச்சிட லாம்!’’ |கடகடவென ரசனையுடன் சிரிக்கிறார் ரஜினி.

இதோ, இப்போ Ôசந்திரமுகிÕ சக்சஸ§க்கு அப்புறம் மறுபடியும் ரஜினி ரசிகர்கள் கம்பீரமா நெஞ்சு நிமிர்த்தி நடமாடறாங்க. ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?

‘‘நான் அமிதாப்ஜிக்கு ஃபேன்! ரசிகன்னா... சும்மா இவ்ளோ, அவ்ளோனு இல்லை. அப்படி ஒரு ரசிகன் நான்... இப்பவும்!

எப்பவோ அவரிடம் இதுமாதிரி ஒரு கேள்வி கேட்டப்போ, அமிதாப்ஜி சொன்ன ஒரே பதில்... ‘ஃபாலோ தி சன்! சூரியனுக்கு முன்னாடி நீ எழுந்திருச்சுடுனு எங்க அப்பா சொன்னார். வாழ்க்கைல நான் இந்த இடத்தைத் தொட்டதுக்கான ஒரே காரணம் அதுதான். அதைச் செய்ய ஆரம்பிச்ச பிறகு, எனக்கு எல்லாமே நல்லவிதமா நடக்க ஆரம்பிச்சுது!’னு சொன்னாங்க. அது நூத்துக்கு நூறு கரெக்ட்!

இப்பிடி நிறைய சொல்றதுக்கு இருக்கு. முக்கியமான ஒரு விஷயம் சொல்லிடறேன்... ஒண்ணே ஒண்ணு... அதுவும் நான் ஏற்கெனவே சொன்னது தான்... குடும்பத்தைக் கவனிங்க. தாய், தகப்பனை, சகோதரன், சகோதரியை, குழந்தைகளைப் பாருங்க... உங்க குடும்பத்தைக் காப்பாத்துங்க.
அதை ஒழுங்கா செய்ய ஆரம்பிச்சுட் டாலே... எந்த மனுஷனுக்கும் தானா ஒரு பவர் வந்துடும். அந்தச் சக்தியை வெச்சு இன்னும் நாலு பேருக்கு நல்லது செய்யலாம். அப்படி வர்றப்போ, நானும் ஒரு சக்தியா இருப்பேன்!’’

தன் படங்கள் மூலமா தமிழ்நாட்டுக்கு ரஜினி தந்தது ஏராளமான சந்தோஷம். ரஜினிக்குத் தமிழ் மக்கள் திருப்பிக் கொடுத்தது அளவில்லாத அன்பு! யோசிச்சுப் பார்த்தால், இது உணர்வுரீதியான பந்தம். இதைத் தாண்டி உங்களை நேசிக்கிற தமிழ் மக்களின் நலனுக்கு ஆக்கப்பூர்வமா ஏதாவது செய்யணும்னு எப்போவாவது யோசிச்சது உண்டா? அப்படி ஏதாவது ஒரு திட்டம் இப்போ உங்க மனசில் இருக்கா?

ஓரிரு விநாடிகள் தீர்க்கமான மௌனம் காக்கிற ரஜினி, நம் கண்கள் பார்த்து அழுத்தமாகச் சொல்கிறார்...
‘‘இருக்கு!”

ஹவ்வீஸ் இட்!

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!



No comments:

Post a Comment