சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Feb 2013

இன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்லலாமே?நாராயணசாமி தனது நெருங்கிய உறவினர் வீட்டில் நீண்ட நாள் தங்கி ஓய்வு எடுத்தபின்,

ஒரு நாள் ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்தவரிடம் வழியனுப்ப வந்த உறவினரிடம் சொன்னார்,

"
இன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்லலாமே?"

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
நான் ரயிலுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணப்போனேன். அப்போதே சொல்லியிருக்கலாம். திரும்பி வந்து என் துணிகளை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன். அப்போது சொல்லியிருக்கலாம்.அப்புறம் குளித்துவிட்டு புறப்படுவதற்கு ட்ரெஸ் பண்ணினேன். அப்போதாவது சொல்லியிருக்கலாம் .அப்போதும் கம்முன்னு இருந்தீங்க. அப்புறம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும்,'போய்வருகிறேன்"என்று சொல்லி விடை பெற்றேன் .அப்போது கூட சொல்லியிருக்கலாம்.ஆனால் நீங்கள் வாயைத் திறக்கவே இல்லை.இப்போது ரயிலில் ஏறி ,வண்டி புறப்படக் கொடி அசைத்தவுடன்" இன்னும் இரண்டு நாள் நீங்கள் இருந்துட்டுப் போகலாமே" என்று சொல்கிறீர்களே,இது உங்களுக்கே நல்லாயிருக்கா?"வயதான மனிதர் ஒருவர் சிறு நகரத்தில் தனியாக வசித்து வந்தார். வருடா வருடம் தனது நிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து வந்தார். அதுவே அவர் வாழ்வின் மூலாதாரம். ஆனால் எப்போதும் அவரது ஒரே மகன்தான் நிலத்தை உழுது கொண்டிருப்பான்.

ஆனால் இந்த முறை அவனால் ழுது தர இயலாது. ஏனென்றால் அவன் சிறையிலிருந்தான். முதியவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

...
சிறையிலிருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார். ‘மகனே! இந்த முறை நீ இல்லாததால் நிலத்தை உழ முடியவில்லை. அதனால் உருளை பயிரிட முடியவில்லை. நான் எப்படி உயிரோடிருப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லைஎன்று எழுதினார்.

இரண்டு நாட்களிலேயே மகனிடமிருந்து பதில் வந்தது. அதில், ‘அப்பா தயவு செய்து நிலத்தை உழாதீர்கள். அங்குதான் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருக்கிறேன்என்றிருந்தது.

அதன் பொருள் விளங்குமுன்னே, ஒரு பெரிய காவல்படையும் உளவுத்துறையும் அவர் வீட்டில் வந்திறங்கின. அவரது நிலத்தைத் தோண்டி முழுதும் அலசிப் பார்த்து விட்டனர். எதுவும் கிடைக்காமல் சென்று விட்டனர்.

எதுவும் புரியாத முதியவர் நடந்ததை விளக்கி மகனுக்குக் கடிதம் எழுதினார். மகன் தனது பதிலில், ‘இப்போது உருளைக்கிழங்கு பயிரிடுங்கள். நிலம்தான் உழுதாகி விட்டதே. இதுதான் இங்கிருந்து என்னால் செய்ய முடிந்ததுஎன்று எழுதியிருந்தான்.


Wife: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
Husband:
கனவுல அனுஷ்க வந்தா..!
Wife:
அப்பறம் ஏன் கத்துனீங்க.?
Hus:
நடுவுல நீ வந்துட்ட.......நாராயணசாமி ஒரு கிராமத்து ஆசாமி.

ஒரு முறை சென்னை வந்திருந்தபோது கட்டிடம் அருகே பேருந்துக்காக ஒரு மஞ்சள் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த ஒரு முரட்டுத்தனமான ஆசாமி,

"
இங்கே என்ன பண்ணிகிட்டிருக்க?" என்று நாராயணசாமியைப் பார்த்து கேட்டான்.

"
இல்லை...இந்த கட்டிடம் இவ்வளவு உயரமா இருக்கே அதான் பார்த்துகிட்டிருக்கேன்"

"
அப்படியேல்லாம் சும்மா பார்க்கக்கூடாது... நீ எத்தனை மாடி பார்த்தியோ அத்தனை மாடிக்கும் ஒரு மாடிக்கு 15 ரூபாய் விதம் எனக்கு கொடு" 

நாராயணசாமியோ மறுபேச்சு பேசாமால்,

"
நான் 4வது மாடி வரைதான் பார்த்தேன்" என்று 1 மாடிக்கு 15 விதம் 60 ரூபாயைக் கொடுக்க, அவன் சென்று விட்டான்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவன் நாராயணசாமியிடம் வந்து சொன்னார்,

"
அவன் உங்களை ஏமாற்றி பணம் வாங்கி செல்கிறான்... ஏமாந்துவிட்டீர்களே" என்றான்.

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
நான் இல்லை... அவன் தான் என்னிடம் ஏமாந்து செல்கிறான்.

வந்தவன் புரியாமல் விழிக்க, 

"
நான் 10 மாடி வரை பார்த்தேன்... ஆனால் 4 மாடி பார்த்ததாக அவனை ஏமற்றிவிட்டேன்" என்றார் நாராயணசாமி.


No comments:

Post a Comment