சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Feb 2013

எனக்கிருப்பது ஒரு ஒரு அன்பான மனைவி


நாராயணசாமி ஒரு புது மாப்பிள்ளை.

ஒரு நாள் திடுதிப்புன்னு மாமனார் வீட்ல போய் நின்னாரு.

மருமகன் திடீர்னு வந்ததால மாமனாருக்கு என்ன பண்றதுன்னு தெரியல.

மருமகன்கிட்ட முறைப்படி நலம் விசாரிச்சிட்டு,

"
மருமகனே... நீங்க இப்படி திடீர்னு வந்துட்டதால எந்த ஏற்பாடும் நாங்க பண்ணி வைக்கல...பழைய சோறுதான் இருக்கு...அதை வேணும்னா சாப்பிடுறீங்களா... இல்லைன்னா பலகாரங்கள் கூட இருக்கு... அதை வேணும்னாலும் சாப்பிடுங்க ... அதுவும் இல்லைன்னா கொஞ்சம் பொறுங்க... சுடச்சுட சமைச்சி விருந்து வச்சிடுறோம்" அப்படின்னார்.

அதுக்கு மருமகன் நாராயணசாமி சொன்னாரு,

"
பரவாயில்லை மாமா... முதல்ல பழைய சோறு கொடுங்க சாப்பிடுறேன்... அப்புறமா சுடு சோறு தயாராகிர வரைக்கும் இந்த பலகாரங்களை எல்லாம் தின்னுகிட்டு இருக்கேன்... சமையல் முடிஞ்சதும் விருந்து சாப்பிட்டுக்குறேன்... இதுக்கு ஏன் நீங்க வருத்தப்படுறீங்க?"


நாராயணசாமி தன்னை "பன்றி" என்று அழைத்துவிட்டதாக குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமிக்கு 15000 ரூபாய் அபராதம் விதித்தார். 

தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் நாராயணசாமி கேட்டார்:

"
அப்போ நான் குமாரை பன்றி என்று இனி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே?"

"
ஆமாம்"

"
ஆனால் ஒரு பன்றியை குமர் என்று அழைக்கலாமா?"

"
அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை!"

மகிழ்ச்சியுடன் திரும்பிய நாராயணசாமி தன் மீது வழக்கு தொடுத்தவரைப் பார்த்து சொன்னார், 

"
குட்மார்னிங் குமார்"



நாராயணசாமி காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண் SCOOTY ல் அவரை முந்திச் செல்கிறாள்.

நாராயணசாமி அந்த பெண்ணைப் பார்த்து சொன்னார்,

"
ஏய்...எருமை"

அந்தப் பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது.

"
நீதான்டா எருமை...நாய்...குரங்கு...பன்னி எல்லாம்" என்று அவரைப் பார்த்து திட்டிக் கொண்டே செல்கிறாள்.

திடீரென சாலையைக் கடந்து கொண்டிருந்த எருமை மீது மோதி காயமடைந்து விடுகிறாள்.

=====
நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.


ஒரு மாதமாக நாராயணசாமிக்கும் அவர் மனைவிக்கும் கடுமையான சண்டை.

உடைகள் அங்கங்கே சிதறி வீடு குப்பைக்காடாக இருந்தது. 

திடீரென ஒரு நாள் மனைவி எல்லாவற்றையும் சுத்தம் செய்து நாராயணசாமியிடம் அன்பாய் நடந்துகொண்டாள். 

இதைக் கவனித்த அவன் நண்பன்,

"
என்னடா செய்தாய்? உன் மனைவி இப்படி கனிவாய் நடந்து கொள்கிறாள்?" என்றான். 

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
ஒன்றுமில்லை ஒருநாள் உறக்கத்தில், என்னைத் தொடாதே, எனக்கிருப்பது ஒரு ஒரு அன்பான மனைவி.... அவளைத் தவிர யாரையும் தொடமாட்டேன் என்னைத்தொடாதே என்று கத்தினேன்....அன்றுமுதல் இப்படி மாறிவிட்டாள். 
என்ன செய்வது பொய் சொன்னால்தான் பெண்களுக்குப் பிடிக்கிறது."


நம்ம நாராயணசாமியோட பசங்க ரெண்டு பேர் ஒரே க்ளாஸ்ல படிச்சிட்டு இருந்தானுங்க.

மேடம் சொன்னாங்க எல்லாரும் அவங்க அவங்க அப்பா பெயர எழுதி கொண்டு வாங்கனு....

ஆனா இந்த ரெண்டு பேரும் வேற வேற பெயர எழுதி கொண்டு போய் காமிச்சானுகள்.....

மேடம் கேட்டாங்க, ஏண்டா ரெண்டு பேருக்குமே ஒரே அப்பா தானே பின்ன எதுக்கு இப்படி எழுதிட்டு வந்திருக்கிங்கனு....

அதுக்கு நம்ம நாராயணசாமியோடபசங்க என்ன சொன்னானுங்கன்னு தெரியுமா..........??

"
நாங்க ரெண்டு பேரும் காப்பியடிச்சு எழுதிருக்கோமுன்னு யா

நம்ம நாராயணசாமி ஒரு மெண்ட்டல் ஹாஸ்ப்பிட்டலுக்கு வேற ஒரு வேலையா போயிருந்தார்.

திடீர்னு அவருக்கு ஒரு சந்தேகம். எப்படி பேசண்ட்டுகளை கரெக்ட்டா கண்டுபுடிச்சி அட்மிட் பண்றாங்கன்னு. 

டாக்டர்கிட்டயே போய் கேட்டார்.அதுக்கு அவர் சொன்னார்,

"
குளிக்கிற தண்ணிர் தொட்டியில தண்ணிய புல் பண்ணி ஒரு ஸ்பூன், மக், பக்கெட் கொடுத்து தண்ணிய காலி பண்ண சொல்லுவோம்...."

"
அப்போ நார்மலா இருக்கறவங்க பக்கெட்டவெச்சி தண்ணிய அள்ளி ஊத்தி காலி பண்ணிடுவாங்க அதானே.......?"

"
நோ... நோ.... நர்ஸ்.....நாராயணசாமியஉடனே அட்மிட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க....."

"
அய்யய்யோ.... ஏன் டாக்டர்.......?"
.
.
.
.
.
.
.
"
ஏன்னா....நார்மலா இருக்கறவங்க தண்ணி தொட்டிய கீழே திறந்து விட்டு தண்ணிய காலி பண்ணுவாங்க.....ஆனால் நீங்க நார்மல் இல்லையே"


தனது 50 வது திருமண நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார் நம்ம் நாராயணசாமி.

அவரிடம் ஒரு நண்பர் கேட்டார்,

"
ஆமாம்....உங்கள் 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?"

"
என் மனைவியை அந்தமான் தீவிற்கு அழைத்துப் போனேன்"

கேட்டவருக்கோ ஆச்சரியம்... "மனைவியிடம் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டிருக்கிறார்... நாமும் தான் இருக்கிறோமே" என்று மனதுக்குள் நினைத்தபடி,

"
சரி...வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"25
வருடங்களுக்கு முன் அந்தாமானில் தொலைத்துவிட்டு வந்தவளை மீண்டும் அழைத்து வருவது ற்றியோசித்துக் கொண்டிருக்கிறேன்
"


No comments:

Post a Comment