சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Feb 2013

காந்தியவாதி ஜெகன்நாதன் மரணம்கிருஷ்ணம்மாள் - ஜெகன்நாதன் தம்பதியரின் மண்ணுரிமை, வாழ்வுரிமை போராட்டங்கள் தமிழகத்தில் வரலாறு படைத்தவை.

அத்தம்பதியரில் ஜெகன்நாதன் நேற்று ( FEB 11 )மரணமடைந்துள்ளார்.

அவரது நல்லடக்கம் இன்று திண்டுக்கல் காந்திகிராமத்தில் நடைபெறுகின்றது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் 1926 ம் ஆண்ட பிறந்தவரான கிருஷ்ணம்மாள்தான் தமிழக தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் பட்டதாரி.

கல்லூரியில் படிக்கும் போது காந்தியடிகளுக்கு உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதன் காரணமாக காந்தியத்தை கடைபிடிக்கத்துவங்கியவர்,பின்னர் சர்வோதய இயக்கத்தில் பணியாற்றி,காந்தியவாதியான ஜெகந்நாதனை திருமணம் செய்துகொண்டவர்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் கிருஷ்ணம்மாள், பிராமணர் சமூகத்தின் ஜெகன்நாதன் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.


1968
ல் நாகப்பட்டிணம் மாவட்டம் கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்ட விவசாயிகள் சாதி ஆதிக்க பண்ணையார்களால் எரித்துக்கொல்லப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற வேண்டி நாகையில் வந்து தங்கியவர்கள் பின்னர் நாகைவாசியாகவே மாறிவிட்டனர்.

அப்போது விநோபாவே நாடு முழுவதும் பூமிதான இயக்கத்தை நடத்திக்கொண்டு இருந்தார். இருப்பவரிடம் இருந்து நிலத்தைப் பெற்று இல்லாதவருக்கு வழங்கும் இந்த பூமிதான திட்டத்தை தமிழகத்தில் நடத்திச் சென்றவர் கிருஷ்ணம்மாளாவார். தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் நிலத்தை பெற்று ஏழைகளுக்கு வழங்கினார்.

நில மீட்பிற்காக 1981 ல் தொடங்கப்பட்ட "லாப்டி' இயக்கத்தை விரிவுபடுத்தி விவசாய தொழிலாளர்களின் குடும்பத்தினர் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுதல்,பாய் நெய்தல்,மேல்படிப்பு படித்தல் என்று வலுவான,வளமான வளர்ச்சிக்கு வழிவகுத்தனர்.

நாடி நரம்பு தளர்ந்து கயிற்றுக்கட்டிலில் எழுந்து உட்காரக்கூட ஆள் துணை தேடும் 82வயதில்தான் இவர்,விளைநிலங்களை உப்பளங்களாக மாற்றும் இறால் பண்ணைகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மேற்கொண்டார்.

இதற்காக இவர் குடியிருந்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டது,கூட இருந்தவர்கள் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள் இப்படி சொல்லமுடியாத சிரமங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்று போராடியவர்.

கத்தியின்றி,ரத்தமின்றி சாதிக்கமுடியும் என்பதன் அடையாளமே கிருஷ்ணம்மாள் தம்பதியர்.

No comments:

Post a Comment