சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Feb 2013

தொலைந்து போன வில்லன்கள்

தமிழகத்தின் சினிமா நடிகர்கள் புகழ்பெற அதிகம் காரணம் ஆனவர்கள் யார் தெரியுமா?ரசிகர்களோ,இயக்குனர்களோ,நாயகிகளோ,அல்ல.அவர்களிடம் ( சும்மனாச்சுக்கும் ) அடிவாங்கும் வில்லன்கள் தான்.சரிதானே. வில்லன்கள்  என்றதும்  புரட்சிதலைவர் எம்ஜிஆர் சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது."கதாநாயகன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், அவன் ஒரே நேரத்தில் பத்துபேரை அடித்து வீழ்த்துபவனாக இருந்தாலும்,வில்லன் பலமில்லாதவனாக இருந்தால் கதாநாயகன் என்ன சாகசம் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றாராம்.இதிலிருந்தே தெரிகிறதா வில்லன்களின் முக்கியத்துவம்.இப்படிப்பட்ட "நம்" வில்லன்கள் என்ன ஆனார்கள்?


தமிழ் சினிமாவின் ஆதிகாலம் முதல் இன்றைய அறிமுக நடிகர்கள் வரை வில்லன்களை அடித்து தான் பெரிய ஹீரோக்கள் ஆனார்கள்.எம்ஜிஆர், சிவாஜி  காலங்களில் சில படங்களில் மட்டுமே கதை வில்லனாக இருக்கும்.அப்போது பெரும்பாலான படங்களில் வில்லன் என்றால் நம்பியார் அவர்களும் , அசோகன் அவர்க்களுமாகத்தான் இருக்கும்.அதுவும் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களில் நம்பியார் தான் வில்லனாக வருவார்.அவரின் வசன உச்சரிப்பும்,கையை பிசையும் மேனரிசமும்,பார்ப்பவரை குலை நடுங்க வைக்கும் அப்போது.நாயகியிடம் வம்பு பண்ணி எம்ஜிஆரிடம் அடிவாங்குவார் நம்பியார்.அடுத்தடுத்த படங்களில் இதுவே தான் நடக்கும்.ஆனாலும் நம்பியாருக்கு பயபடதவர்கள் யாருமில்லை. இப்படி கொடூரமாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நம்பியார் அவர்கள் மிகவும் சாந்தமான மனிதர்.அவர் மூலம் மாலையணிந்து ஐயப்பனை தரிசித்தவர்கள் பல பேர்.பின் வயதான போது குணசித்திர வேடங்களிலும்  நடித்தார். பழைய நடிகர்களில் ஜெய்சங்கர, ரவிச்சந்திரன் மற்றும் நாகேஷ் இருவரும் பின் நாட்களில் வில்லனாக நடித்தனர்.
 ரஜினி - கமல் காலங்களில் அவர்களுக்கென்று சிலர் இருந்தனர்.அதில் முக்கியமானவர்கள் என்றால்  ரகுவரன்,நாசர்,ராதாரவி,ஆனந்தராஜ்,சரண்ராஜ்,விஜயகுமார்,பாபு ஆண்டனி என பல நடிகர்கள் இருந்தனர்.சில படங்களில் சத்தியராஜும்  வில்லனாக நடித்தார்ரஜினிசத்தியராஜ்சரத்குமார் மூவரும் வில்லனாக இருந்து ஹீரோவாக மாறினார்அவ்வப்போது வேறு மொழி நடிகர்களும் வில்லனாக நடித்தனர்.ஆனால் தற்போது அனைவருக்கும் வயதாகிவிட்டதுஇருந்தாலும் பிரகாஸ்ராஜ், மன்சூர் அலிகான்,பொன்னம்பலம்,ரியாஸ்கான்,மகாதேவன் ( பிதாமகன் ), சம்பத்,இயக்குனர்  மணிவண்ணன் ,சண்முகராஜன், போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களால் அனுஷ்கா,இலியானாவை கையை பிடித்து இழுக்க முடியாது.இதனாலோ என்னவோ இயக்குனர்கள் வெளி மாநில வில்லன் நடிகர்களை நடிக்க வைக்கின்றனர். சில ஹீரோக்களும் வில்லனாக நடிக்கின்றனர்.சிபிராஜ் ( நாணயம் ),பிரசன்னா(அஞ்சாதே ),நரேன் ( முகமூடி ), அஜ்மல் ( கோ ), இவர்கள் ஹீரோவாக இருந்து வில்லனாக மாறிவிட்டனர்.
ஆனால் கடந்தாண்டு வெளியான படங்களில்  எந்திரன்,பில்லா 2 , துப்பாக்கி,சுறா,நான் சுதிஷ்தாண்டவம் ஜெகபதிபாபு, விஸ்வரூபம்,சமர் மனோஜ் பாஜ்பாய் ,அலெக்ஸ்பாண்டியன் மிலிந்த் சோமன் போன்றோர் வெளி மாநில நடிகர்களே.இதெல்லாம் ஒருபடி மேலே போய் முருகதாஸ் ஏழாம் அறிவு படத்திற்கு சீன நடிகர் டாங் லீ யை தமிழ் திரையுலகிற்கு கூட்டி வந்தார். என்ன ஆனார்கள் நம் தமிழ் வில்லன்கள். ரகுவரன் ( மார்க் ஆண்டனி ), நாசர் ( மாயத்தேவன் ) ,ராதாரவி ( அண்ணாமலை பசுபதி ), பசுபதி ( தூள்,திருப்பாச்சி ) பிரகாஷ்ராஜ் ( கில்லி, சிவகாசி, அந்நியன்,சிங்கம்  என பல படங்கள் ) இவர்களின் நடிப்பை மறக்க முடியுமா?
இவர்களை எல்லாம் பார்த்து மக்களுக்கு பழகிவிட்டதோ?அல்லது கதை என்று ஒன்றும் இல்லாததால் முகங்களை மாற்றி வித்தை காட்டுகிறார்களோ என்னவோ? எல்லாம் இயக்குனர்களுக்கே வெளிச்சம்.

 விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment