சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Feb 2013

சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா?




உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா?
இல்லையேன்றால் இந்த பதிவப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.


காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள்.
அப்புறம் வாங்குங்கள்.

ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - எப்படி கண்டுபிடிப்பது?


படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.

முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.

இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D
இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.
A -
மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)

B -
ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)

C -
செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)

D -
டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

அது சரி இப்பவே 6 சிலிண்டர்,9 சிலிண்டர் தான் பீதிய கிளப்புறானுக,இதுல இப்படி எல்லாம் பாத்தா சமைக்க முடியாதுன்னு நீங்க என்ன திட்டுறது கேட்குது.இருந்தாலும் கொஞ்சம் சூதானமா இருந்துகோங்க.


No comments:

Post a Comment