சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Feb 2013

நாராயணசாமி நீ கர்ப்பமாக இருக்கிறாய்"!!!



நாராயணசாமி கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

"
நாள் முழுவது நான் கடுமையாக உழைக்கிறேன். என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள். போதாக் குறைக்கு என்னிடம் வேறு குற்றம் காண்கிறாள்.எனவே என்னை பெண்ணாக்கி என் மனைவியை ஆணாக்கிவிடு.அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும்"

கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டார்.மனைவி ஆணானவுடன் வேலைக்கு சென்றாள்.பெண்ணான கணவன் காலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து,அடுப்படி வேலைகளை முடித்து பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு,கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து சமையல் முடித்து,இப்படியாக இரவு நெடு நேரம் வரை வேலை இருந்தது .

இப்படியாக சில நாள் கடந்ததும்,

"
ஐயோ கடவுளே! பெண்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருப்பதை உணராது இருந்து விட்டேனே! என்னால் இந்த பொறுப்புகளை சுமக்க முடியாது. தயவு செய்து என்னை மறுபடியும் ஆணாக்கி,என் மனைவியைப் பெண்ணாக்கிவிடு" என்று அழுது வேண்டினார் நாராயணசாமி.

அதற்கு கடவுள் சொன்னார்,

"
உன் வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு நீ நாற்பது வாரங்கள் காத்திருக்க வேண்டும்".

நாராயணசாமி ஒன்றும் புரியாமல் விழிக்க கடவுள் சொன்னார்,

"
இப்போது நீ கர்ப்பமாக இருக்கிறாய்"!!!


நாராயணசாமி ஒரு ஆசிரியர்.

ஒரு நாள் பாடம் நடத்திக்கொண்டிருந்த பொழுது,

"திமிங்கலத்தால மனுஷன முழுங்க முடியாது. அது பெரிசு தான். ஆனா வாய் சின்னது அதனால மனுஷன முழுசா முழுங்க முடியாது" 


உடனே ஒரு பையன் எழும்பி கேட்டான்,

"
இல்லையே எங்க பக்கத்து வீட்டு ஜானை ஆறு மாசம் முன்னாடி திமிங்கலம் முழுங்கிச்சே" 

நாராயணசாமிக்கு கடுப்பு. திரும்பவும் சொன்னார்,

"
இல்ல கண்டிப்பா திமிங்கலத்தால முழுங்க முடியாது" 

அந்தப் பையன், "சரி சொர்க்கத்துக்கு போனா நான் ஜான் கிட்ட கேப்பேன்" 

"
ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...."என்று இழுத்தார் நாராயணசாமி.

அதுக்கு அந்த பையன் சொன்னான்,

"
நீங்க கேளுங்க
"



நாராயணசாமியின் வீட்டில் ஒரு கழுதை இருந்தது.

அவை இரண்டும் ஒரு நாள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தன.

ஒரு கழுதை நன்றாகக் கொழுத்துஇருந்தது. மற்றது எலும்பும் தோலுமாக காணப்பட்டது. 

இளைத்த கழுதையைப் பார்த்து வலுத்த கழுதை கேட்டது,

"
எப்படி இருந்த நீ இப்படி ஆகிவிட்டாயே?"

மெலிந்த கழுதை சொன்னது,

"
என் முதலாளி கல் நெஞ்சன். நாள் முழுவதும் வேலை வாங்குவான்.ஆனால் ஒழுங்காகத் தீனி போட மாட்டான்.அடி உதை வேறு அவ்வப்போது கிடைக்கும்."

பலமான கழுதை,

"
பின் ஏன் அங்கேயே இருக்கிறாய்? ஓடி வந்து விட வேண்டியதுதானே?" என்று கேட்டது.

உடனே அந்த மெலிந்த கழுதை சொன்னது,

"
என் முதலாளிக்கு ஒரு அழகான பெண் இருக்கிறாள். அவள் ஒருவனை காதலிக்கிறாள். அது என் முதலாளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளையும் கண்டபடி அடிப்பான்"

வலுத்த கழுதை கேட்டது,

"
அந்தப் பெண்ணுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?"

அதற்கு அந்த மெலிந்த கழுதை சொன்னது,

"
ஒவ்வொரு முறை என் முதலாளி தன் பெண்ணை அடிக்கும்போதும், "உன்னை இந்தக் கழுதைக்குத்தான் கட்டி வைக்கப்போகிறேன்"என்பான். அதனால்தான் நானும் பொறுமையாய் காத்துக் கொண்டிருக்கிறேன்"



No comments:

Post a Comment