சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Feb 2013

நாராயணசாமிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.நம்ம நாராயணசாமிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

அதனால தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனச்சி ஆற்றில் குதிக்கப் போனார்.

அந்த ஆற்றுல கரையோரமா ஒரு மீன் நீந்திகிட்டிடுந்துச்சி.

உடனே அதை கையில பிடிச்சி தரையில தூக்கி போட்டுட்டு அந்த மீனைப் பார்த்து சொன்னார்,

"
எனக்குதான் வாழ்க்கை வெறுத்துப்போச்சுன்னு சாகப் போறேன், நீயாவது பொழச்சிக்கோ"


அமெரிக்காவை கண்டுபிடிச்ச கொலம்பஸ்-க்கு ஒரு இந்தியப் பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தால் என்ன நடந்திருக்கும்???

ஏங்க எங்கே போறீங்க?

யார்கூட போறீங்க?

ஏன் போறீங்க?

எப்படி போறீங்க?

என்ன கண்டுபிடிக்க போறீங்க?

ஏன் நீங்க மட்டும் போறீங்க?

நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?

நானும் உங்ககூட வரட்டுமா?

எப்ப திரும்ப வருவீங்க?

எங்கே சாப்பிடுவீங்க?

எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?

பதில் சொல்லுங்க ஏன்?

நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?

நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.

ஏன் பேசமா இருக்கீங்க?

என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?

இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?

இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க??


நாராயணசாமி ஒரு நாடறிந்த ஆன்மீகப் பேச்சாளர்.

அவர் ஒரு நாள் தன் மனைவியிடம்,

"ராமாயண சொற்பொழிவுக்காக டெல்லிக்கு போறேன்... நீயும் வர்றியான்னு" கேட்டார்.


"
நான் வரல்ல.. நீங்க மட்டும் போயிட்டு வாங்க"ன்னாங்க அவங்க.

"
ஏண்டி நீ இப்படி இருக்குற...அன்னைக்கு ராமன் காட்டுக்கு போறேன்னதும்... கூடவே கிளம்பி போயிட்டா சீதை...ஆனால், நீ வரமாட்டேன்னு சொல்ற...இதுதான் என் மேல நீ வச்சியிருக்குற பக்தியா?"

"
அட...சீதை ஒண்ணும் விவரம் இல்லாம ராமன்கூட போகலை...வீட்டுல வயசான மாமனார், மாமியார், கொழுந்தனார்களெல்லாம் இருக்காங்க... அவங்களுக்கு சமைச்சிபோடுறதைவிட காட்டுக்கு போறதே நல்லதுன்னு நினைச்சித்தான், சீதை ராமன் கூட போனாங்க....அப்படி எந்த பிரச்சினையும் எனக்கு இல்லாதப்போ நான் எதுக்கு உங்ககூட வரணும்?"

நாராயணசாமியின் செக் புக் தொலைந்துவிட்டது. வங்கிக்குக்கு போய் புகார் கொடுத்தார்.

நாராயணசாமி: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..

மேனேஜர் : பார்த்து சார்...யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..!!!

நாராயணசாமி: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்ன்..!!!


No comments:

Post a Comment