சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Feb 2013

எருமை என்ன கொடுக்கும் - "ஹோம் வொர்க்"!


 
நாராயணசாமிக்கும் அவர் மனைவிக்கும் கடும் சண்டை.

இவர் வாயில் வந்த வார்த்தைகளால் மனைவியை திட்ட, பொறுக்க மாட்டாத அவர் மனைவி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னாலேயே நாராயணசாமியும் சென்றார்.பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி,இனிப்பு ,காரம்,டீ கொடுத்து அனுப்பினர்.

வீட்டிற்கு வந்த நாராயணசாமி மறுபடியும் அதிகமாக சண்டை போட ஆரம்பித்தார்.

மனைவி வெளியே செல்ல கதவைத் திறந்தார்.

அப்போது நாராயணசாமி
சொன்னார்,

"
இப்போது 15வது வீட்டுக்கு போ...அவங்க வீட்ல இன்னைக்கு நல்ல குட்டி ஆடா பார்த்து வெட்டி சமைக்கிறாங்க"
 
 
 
நாராயணசாமிக்கு 15வது திருமண நாள்.

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவியில் சாமி தரிசனம்.

அனைத்தும் முடித்துவிட்டு வெளியில் வரும்பொழுது வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்கள் மீது இரக்கம் வந்துவிட்டது நாராயணசாமியின் மனைவிக்கு.

தன் கைப்பையை திறந்து கண் தெரியாத ஒரு பிச்சைக்காரருக்கு காசு போட்டார் அவர்.

இது நாராயணசாமிக்கு பிடிக்கவில்லை.

"
நம்ம நா(வீ)டு இருக்குற நிலமையில இதெல்லாம் தேவையா"

"
கோபப்படாதீங்க... நான் ஒண்ணும் அதிகமா போடலை... என்கிட்ட இருந்த செல்லாத ஒரு ரூபாய் நாணயத்தைத்தான் போட்டேன்"

"
உனக்கு எப்பவுமே சமர்த்து பத்தாதுடி...செல்லாத ஐம்பது காசு நாணயம் ஒன்று இருந்ததே,அதைப் போட்டிருக்கலாமே
?"
 
 
 
நம்ம நாராயணசாமி ஒரு பல் மருத்துவர்கிட்ட போனார்.

"
ஒரு பல் புடுங்க எவ்வளவுங்க?"

"
நானூறு ரூபாய் ....ஆனால் வலிக்காமல் இருக்க ஒரு ஊசி போடுவோம்...அதுக்கு முன்னூறு ரூபா எக்ஸ்ட்ரா" என்றார் மருத்துவர்.

"
ஊசியெல்லாம் வேண்டாம்...அப்படியே எடுத்துருங்க....முன்னூறு ருபாய் மிச்சம்"

"
கிராமத்து மக்கள் வலிமையானவர்கள் என்று கேட்டிருக்கிறேன்...நீங்க ரொம்ப தைரியமானவர்...உங்கள் வலிமையை பாராட்டுகிறேன்" என்றார் மருத்துவர்.

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
ரொம்ப புகழ்றீங்க டாக்டர்....அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்....பல் புடுங்க வேண்டியது எனக்கல்ல...என் மனைவிக்கு
"
 

நம்ம நாராயணசாமி,

ஒரு நாள் ஒரு வீட்டின் கதவை தட்டி...

"
என்னங்க நேத்து இங்க நடந்த பார்ட்டிக்கு என் சிநேகிதன் வந்திருந்தானா?" என்று கேட்டார்.

"
ஆமாம்"

"
குடித்து விட்டு எல்லாரையும் ரகளை செய்தானா?"

"
ஆமாம்"

"
பெண்கள் மீது இடித்தானா?"

"
ஆமாம்"

"
சத்தம் போட்டு சாமானெல்லாம் உடைத்தானா?"

"
ஆமாம்"

"
அப்புறம் கடைசி கேள்வி..."

"
கேளுங்க"
*
*
*
*
*
*
*
*
*
*
""
அவன் கூட நானும் இருந்தேனா
?"
 
 
நாராயணசாமி ஒரு சுட்டி பையன்.

ஒரு நாள் பள்ளி ஆசிரியை,

"
கோழி என்ன கொடுக்கும்?" என்று கேட்டார்.

நாராயணசாமி எழுந்து "முட்டை" என்றான் .

"
வெரி குட்" என்ற ஆசிரியை,

"
செம்மறி ஆடு என்ன கொடுக்கும்" என்றார்.

நாராயணசாமி எழுந்து "கம்பளி" என்றான்.

"
வெரி குட்" என்ற ஆசிரியை,

"
எருமை என்ன கொடுக்கும்" என்றார்.

நாராயணசாமி எழுந்து சொன்னான்,

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"
ஹோம் வொர்க்"!
 

No comments:

Post a Comment