சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Feb 2013

இன்றைய அரசியல்வாதிகளுக்கு........!!!





ஒரு நாட்டின் மன்னர் ஒருவர், தன் அரச வாழ்வில் நிம்மதி அற்று இருந்தார். எதிலும் பிடிப்பு இல்லை, ஏதோ ஒரு ஏக்கம், சோகம் அவரை சூழ்ந்து இருந்தது.

நிம்மதி இல்லையே என்று இருந்தவர் ஒரு மகானிடம்(சூபி) சென்று தன் நிலையைக் கூறினார்.

'
மன்னா! உனக்கென்று பல கடமைகள் இருக்கிறது, அவற்றையெல்லாம் செய்தாயா?' என அந்த மகான் கேட்டார்.

மகான்அவர்களே, இந்த நாட்டை நன்றாக செல்வா செழிப்புடன் வைத்துள்ளேன். அண்டை நாட்டுடன் நட்புறவு, மக்களுக்கு அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளன. மக்களுக்கு வரிச்சுமை கூட இல்லை, என்றார் மன்னர்.

"
சரி! இப்போதைக்கு ஒன்று செய்வோம், உனது நாட்டை என்னிடம் கொடுத்துவிடு!"

எடுத்துக்கொள்ளுங்கள்!

'
அதன் பிறகு நீ என்ன செய்வாய்?'

'
நான் வேறு எங்காவது சென்று வேறு வேலை செய்து வாழ்ந்துகொல்கிறேன்!'

"
மன்னா! எங்காவது போய் தெரியாத வேலை செய்து கஷ்டப்படுவதை விட, நீ என்னிடமே வேலை செய் . உனக்கு தெரிந்தது அரசாட்சி புரியும் வேலைதான், ஏன் பிரதிநிதியாக சென்று நீயே நாட்டை ஆளு, அதற்க்கு நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நான் எப்போதாவது வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன் என்றார் மகான்.

மன்னர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார்.

ஓர் ஆண்டு சென்றது.

அந்த மகான் , அந்த அரசனின் அரண்மனைக்குச் சென்று மன்னரை சந்தித்தார்.

இப்போது மன்னர் சந்தோஷத்துடன் காணப்பட்டார். நல்ல சுறுசுறுப்பு, மகானை வரவேற்று உபசரித்தார். எல்லாம் முடிந்ததும் ஒரு வருடத்திற்கான வரவு, செலவு கணக்குப் புத்தகத்தை மகானிடம் காண்பித்தார்.

உடனே மகான், கணக்கு இருக்கட்டும், நீ இப்பொழுது எப்படி இருக்கிறாய்? என கேட்டார்.

மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன்!

நிம்மதி இல்லை என்றாயே?

'
அதுவும் கிடைத்துவிட்டது '

உன் இந்த ஓராண்டு பணியில் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தாயா?

நிச்சயமாக! முன்பு ஒரே மன அழுத்தத்துடன் நிம்மதி அற்று இருந்தேன், ஆனால் இப்போது முழு நிம்மதியுடன் இருக்கிறேன்!.

"
இந்த நிம்மது உனக்கு எப்படி கிடைத்தது?"

'
அது எப்படி என்று தெரியவில்லை பெருமானே?'

மகான் புன்னகைத்தார்.

"
மன்னா! முன்பு இது என்னுடைய ஆட்சி என்று எண்ணினாய், அதனால் எல்லா பொறுப்புகளும் உன்னைச் சூழ்ந்தன. அதனால் பல குழப்பங்கள் உனக்கு இருந்தது. எனவே உனக்கு நிம்மதி போய்விட்டது.

இப்போது இந்த ஆட்சி உன்னுடயதல்ல, நீ இதில் பிரதிநிதியாக பணியாற்றுகிறாய். இப்போது "நான்" உன்னைவிட்டு போய்விட்டது அதனால் நிம்மதியும் வந்தது .தொடர்ந்து இதே மனநிலையுடன் செயல்படு. நிம்மதி உன்னுள் நிரந்தரமாய் இருக்கும். இது உன் நாடு, இதை உன்னிடமே ஒப்படைக்கிறேன். சிறப்பாக ஆட்சி செய் என்றார் மகான்.

எனவே "நான்" என்ற அகந்தை ஒழிந்தால் மனதில் நிம்மதி நிரந்தரமாய் இருக்கும்

No comments:

Post a Comment