சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Dec 2014

சீட்பெல்ட் - பல சுவாரஸ்ய சம்பவங்கள்

தீம் பார்க்கில் அமர்ந்திருப்பது போன்ற ஓர் உணர்வு. ஒரு ரேம்ப்பில் கார் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதன் சீட்டில் அமர்ந்ததும், சீட் பெல்ட் போட்டுவிட்டார்கள். கதவை மூடப்பட்ட பிறகு, நாம் உட்கார்ந்திருந்த கார், 360 டிகிரி கோணத்தில் ஒருமுறை சுழன்று நின்றது. இதைச் சுலபமாக சொல்லிவிட முடிகிறது. ஆனால், காருக்குள் உட்கார்ந்திருக்கும் நமக்கு, முழி பிதுங்கிவிடுகிறது. கார் தலைகீழாக கவிந்தபோதும் நாம் சீட்டைவிட்டு அகலவிடாமல் சீட் பெல்ட் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டதை உணர முடிந்தது. அதேபோல், வேறொரு ரேம்ப்பில் இருந்த சீட்டில் உட்காரவைக்கப்பட்டோம். வேகமாக செல்லும் அந்த வாகனம் ஒரு இடத்தில் முட்டி நம் தலை வேகமாக கார் ஸ்டீயரிங்கில் மீது மோதுகிறது கண்இமைக்கும் நேரத்தில் ஸ்டீயரிங்கில் இருந்து வெளிப்படும் அந்த ஏர்பேக் நம் தலையை காப்பாற்றுகிறது. சாலை பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அப்போது உணரமுடிந்தது.
 
நிஸான் குழுமம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் சீட்பெல்ட் அணியும் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களுக்காக சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் நடந்தது. மேற்கூறிய அனைத்து பிரமிப்பான நிகழ்வுகளும் அங்கு அனுபவப்பட்டதே.
வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் உள்ளிட்டவர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கிய அமசங்கள் பற்றிய நிகழ்ச்சியை நிஸானின் NSDF (NISSAN SAFETY DRIVING FORUM) இந்தியா முழுவதிலும் கடந்த சில ஆண்டுகளாக நடத்திவருகிறது. அந்நிலையில் ஜலந்தர், வதோதரா, நாக்பூர்,விசாகபட்டிணம், மங்களுர், கொச்சின் ஆகிய நகரங்கள் முடிந்து சென்னையில் நடந்து வருகிறது. இது வாகன ஓட்டுநர்கள் மற்கும் பயணியர் ஆகியோர் கடைபிடிக்கவேண்டிய முக்கிய அம்சமான சீட்பெல்ட் அணிவது, ஏர்பேக் குறித்த புரிதல், இருக்கையில் அமரும் முறை, விபத்தில் கடைபிடிக்கவேண்டிய அவசர முறைகள் உள்ளிட்ட பலவகையான சாலை பாதுகாப்பு அமசங்களை நேரடியாக அனுபவமுறையில் பொதுமக்கள் பயன்பெறும் அமைத்திருக்கிறார்கள்.
 
இந்த நிகழ்வுக்கு வருகை தரும் பலர் நிஸான் குழும கார்களையும் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களையும் பரிசோதித்து பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். அவற்றில் ஏபிஎஸ் எனும் ஆன்டி லாக் பிரேக் முறை, EBD எனும் எலக்ட்ரானிக் பிரேகிங் ஃபோர்ஸ் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களையும் பட்டியலிடுகின்றனர்.
நிஸானின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண்ணிடம் கேட்டோம். "நான் எப்பவுமே கார்ல போகும்போது சீட்பெல்ட் போடுவேன். ஆனால் சில நேரத்துல மறந்து ஓட்ட ஆரம்பிச்சுடுவேன். ஆனா முதல் தடவையா இங்க நிஸான் அறிமுகப்படுத்தின இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். ஆரம்பத்துல காரில் உட்கார்ந்தபோது பயம் இல்ல ஆனா 360 டிகிரி கோணத்துல அந்த சிமுலேட்டர் சுத்தினப்போ ரொம்ப பயந்துட்டேன் தலைகீழா நின்னப்போகூட ஒரு சின்ன அதிர்வு இல்லாம காப்பாத்துச்சு சீட்பெல்ட். பிறகு அஞ்சு கிலோமீட்டா; வேகத்துலேயே அவ்ளோ ஃபோர்ஸா தலை ஸ்டீயரிங்ல முட்டினப்போ தலை அவ்ளோதான்னு நினைச்சேன்..பட் கிரேட். ஏர்பேக் காப்பாத்திடுச்சு... ஆனா ஹேர்ஸ்டைல் கலைஞ்சதுதான் கவலையா இருக்கு” என்று முடித்தவர் நாம் முறைப்பது தெரிந்தவுடன் அப்படியே நழுவினார்.
 
மேலும் இந்த நிகழ்வில் பல குட்டீஸ்கள் சீட்பெல்ட் அணிந்தபடி காருக்குள் அமர்ந்து 360 டிகிரி சிமுலேட்டர் மூலம் அந்தரத்தில் சுற்றி பரவசமூட்டினர். ஆர்வமாக ஏர்பேக் ரைடில் ஏறியது ஒரு காதல் ஜோடி. ஸ்டீயரிங்கில் ஏர்பேக்குடன் மோதி தப்பித்ததை அனைவரும் பிரமிப்போடு பார்க்க, சிமுலேட்டரில் இருந்து இறங்கிய அந்த பெண் தன் காதலனை அடிக்க துரத்திக்கொண்டு ஓடியதை அனைவரும் உற்சாகத்துடன் பார்த்தனர். ஒரு குழந்தை தன் தந்தையிடன் இனி சீட்பெல்ட் அணிந்துதான் வருவேன் என கூறியது. இது போல் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இந்த நிகழ்வின் அவசியத்தையும், சாலை பாதுகாப்பின் விழிப்புணர்வையும் பதியவைத்துக்கொண்டிருந்தது.


No comments:

Post a Comment