அமெரிக்கர்களில் பலர் தங்களுக்கு இதைவிட அருமையான கிறிஸ்துமஸ் அமைந்திருக்க முடியாது என மகிழ்ந்தும் நெகிழந்தும் போயிருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசுஅல்ல; மாறாக ஒரு நல்ல மனிதருக்கு பரிசளித்து அவருக்கு மிகழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தை அளிக்க முடிந்ததுதான்.
இந்த வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்த இணையம், வீடில்லாத மனிதர் ஒருவருக்கு முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் டாலர்களை அள்ளிக்கொடுத்து, ஒரு லட்சத்திற்கும் மேல் நன்கொடையை குவிய வைத்திருக்கிறது.
விதிவசத்தால் வீதியில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவருக்காக பலரும் உருகி தவித்து, உதவி செய்திருக்கும் இந்த நிகழ்வுக்கு ஒரு யூடியூப் வீடியோதான் காரணம் என்பது ஆச்சர்யமான விஷயம். அதைவிட ஆச்சர்யமான விஷயம் அந்த வீடியோ நையாண்டி நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்பதுதான்.

வீடில்லாத ஒருவரை பொறியில் சிக்க வைக்க எடுக்கப்பட்ட அந்த வீடியோ, அதை எடுத்தவருக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் சேர்த்தே மனிதநேய பாடத்தை புகட்டியிருக்கிறது.அதனால் தான் வீடியோ 2 கோடி முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
மனதை நெகிழ வைக்கும் அந்த ஆச்சர்யமான கதையை பார்ப்போம்;
அமெரிக்கா இளைஞரான ஜோஷ் பேலர் லின் (Josh Paler Lin ) யூடியூப் உலகில் வெகு பிரபலம். ஜோஷ் குறும்பும் நையாண்டியும் கலந்த வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு, யூடியூப் உலகில் தனக்கென ரசிகர்களை தேடிக்கொண்டிருப்பவர். நிஜ வாழ்க்கையில் நண்பர்களிடம், அவர்கள் அறியாமல் குறும்பு செய்து திகைப்பில் ஆழ்த்தி ரசிக்க வைக்கும் பழக்கம் பலரிடம் உண்டல்லவா? அத்தகைய குறும்புக்காரர் தான் ஜோஷ். அவரது வேலையே இப்படி ஏதேனும் குறும்பு செய்து அதில் சிக்குபவர்களை வீடியோவில் படம் பிடித்து தன்னுடையை யூடியூப் சேனலில் வெளியிடுவதுதான். இதற்காக என்றே பிரத்யேகமாக யோசித்து புத்துப்புது குறும்புகளாக உருவாக்கி இருக்கிறார்.
இப்படிதான் கடந்த வாரம் அவர் , வீதிகளில் வசிக்கும் வீடில்லாத மனிதர் ஒருவரை சோதித்துப்பார்க்க தீர்மானித்தார்.
வீடில்லாத மனிதர் ஒருவரிடம் 100 டாலரை கொடுத்து அவர் என்ன செய்கிறார் என ரகசியமாக படம் பிடித்து வெளியிட வேண்டும் என்னும் நோக்கத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கண்ணில் பட்ட வீடில்லாத மனிதர் ஒருவரை தேர்வு செய்தார். அவர் யார் என்றும் தெரியாது. அவரது பெயரும் தெரியாது. அவரிடம் ஜோஷ் 100 டாலர்களை கொடுத்தார். வீடில்லாத மனிதருக்கு முதலில் ஆச்சர்யம். 100 டாலர்களை திகைப்புடன் வாங்கியவர், பின்னர் அது மிக அதிகம் என திருப்பிக்கொடுக்க முயன்றார். ஜோஷ் உங்களுக்குதான் பணம் என்று வலியுறுத்துக்கொடுத்தார்.
வீடில்லாத மனிதர் பணத்தை வாங்கி கொண்டு விடைபெற்று சென்றார். ஜோஷ் சிறுது இடைவெளி விட்டு அவரை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றார். எதிர்பாராமல் 100 டாலர் கையில் கிடைத்ததும் வீடில்லாத மனிதர் என்ன செய்கிறார் என அவர் படம் பிடித்துக்காட்ட விரும்பியிருந்தார். வீடில்லாத மனிதர் கொஞ்ச தூரம் நடந்து மதுக்கடை ஒன்றுக்கு சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.
இது வரை ஜோஷ் மனதில் உருவாக்கி வைத்திருந்த திரைக்கதை படி எல்லாம் நடந்தது, ஆனால் இதன் பிறகு அந்த வீடில்லாத மனிதர் செய்தது தான் ஜோஷ் கொஞ்சமும் எதிர்பாரதது. அந்த மனிதர் அருகே இருந்த பூங்காவுக்கு சென்று, அங்கே இருந்த தன்னைப்போன்ற வீடில்லாத மனிதர்களுக்கு தான் வாங்கி வைத்திருந்த உணவு பொருட்களை விநியோகிக்க துவங்கினார்.( மதுக்கடையில் அவர் உணவு பொருட்களைதான் வாங்கி வந்திருக்கிறார்) .
இந்த காட்சியை பார்த்ததும் ஜோஷ் வியந்து போனார். வீடில்லாதவர் கையில் கிடைத்த பணத்தை குடித்து மகிழ்வார் என நினைத்தற்காக தன்னை தானே நொந்துகொண்டார்.

உடனே அந்த மனிதரிடம் சென்று தான் அவரைப்பற்றி தவறாக நினைத்ததற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரது செயலை படம் பிடிக்க திட்டமிட்டிருந்ததையும் ஒப்புக்கொண்டார்.
அப்போது அந்த மனிதர், "பணத்தை வாங்கி நான் குடித்து மகிழ்வேன் என நினைத்தீர்களா? பணத்தால் வாங்க முடியாத பல இருக்கின்றன, நான் செய்யும் செயல்கள் மூலம் மகிழ்ச்சியை பெற முயற்சிக்கிறேன் “ என்று பதில் சொல்லியிருக்கிறார். அதை கேட்டு நெகிழந்து போன ஜோஷ் அவரது பின்னணியை கேட்டிருக்கிறார்.
தாமஸ் எனும் பெயர் கொண்ட அந்த மனிதர் , நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது பெற்றோர்களை கவனித்துக்கொள்வதற்காக வேலையை விடும் நிலை ஏற்பட்டதாகவும், அதன் பிறகு பெற்றோர்கள் இறந்துவிட , பார்த்து கொண்டிருந்த வேலை, இருந்த வீடு இரண்டும் போய் வீதிக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
ஜோஷ் அவரிடம் மீண்டும் 100 டாலர் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு , தனது போன் நம்பரையும் தந்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
பின்னர் இந்த முழு சம்வத்தையும் வீடியோவாக தனது சேனலில் பகிர்ந்து கொண்டார்.
"இது போன்ற ஒரு காட்சியை நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வீடில்லாதவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இத்தகைய ஒரு அருமையான காட்சியை படம் பிடிக்க முடிந்தது எனக்கு மகிச்சியை தருகிறது . இந்த சேனலின் வரலாற்றில் இதுதான் அற்புதமான தருணம். ஒரு வீடில்லாதவருக்கு நான் உதவ முடிந்ததுடன் ,ஒரு மகத்தான் மனிதர் மற்றும் நண்பரையும் சந்தித்துள்ளேன்” எனும் அறிமுகத்துடன் இந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.
வீடில்லாமல் வசிக்கும் எல்லோரும் சோம்பேறிகள் அல்ல, வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோட்டு விடக்கூடாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த எல்லோருமே வீடில்லாத மனிதர் தாமசின் கருணையால் நெகிழ்ந்து போயினர். தன்னிடம் காசு இல்லாத நிலையிலும், தனக்கு கிடைத்த பணத்தை தன்னைப்போன்றவர்களுக்கு கொடுத்து மகிழந்த அவரது செயல் எல்லோரையும் உருக வைத்தது. அடுத்த சில நாட்களில் அந்த வீடியோ வைரலாக பரவியது. நான்கு நாட்களுக்குள் அந்த வீடியோ 2 கோடிக்கும் அதிமான முறை பார்க்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்’.
இதனிடையே ஜோஷ் அந்த மனிதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவருக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இணையம் மூலம் நிதி திரட்டுவதற்கான இண்டிகோ கோ இணையதளத்தில் தாம்சுக்காக ஒரு பக்கத்தை துவக்க, அவருக்கு நிதி அளிக்க கோரிக்கை வைத்தார்.

தாமஸ் புது வாழ்வு துவங்க கைகொடுங்கள் எனும் கோரிக்கையோடு , இந்த வீடியோவையும் அதன் பின்னே உள்ள கதையையும் குறிப்பிட்டு நிதி உதவி கேட்டிருந்தார்.
தன்னிடம் எதுவும் இல்லாத நிலையிலும் அடுத்தவருக்கு உதவிய தாமசுக்கு உதவுவோம் என அவர் குறிப்பிட்டிருந்ததை இணையவாசிகள் பலரும் ஏற்றுக்கொண்டு நிதி அளித்தனர். விளைவு.. வீடியோ நான்கு நாளில் ஹிட்டானது போல் நான்கே நாட்களில் தாமசுக்கு உதவுதற்காக ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் நிதி குவிந்திருக்கிறது. இன்னும் குவிகிறது.
நிதி அளித்த பலரும் இந்த பக்கத்தில் தாமஸ் பற்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்,
தாமசுக்கு பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் அவருக்கு உதவுதன் மூலம், இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் சிறப்புமிக்கதாக மாறியதாகவும் தெரிவித்திருந்தனர்.
” உங்கள் செயலால் அசந்து போனேன். உங்களைப்போல் மேலும் பலருக்கு கொடுக்கும் தன்மை வர வேண்டும். கிறிஸ்துமசின் உண்மையான அர்த்த்தை இது புரிய வைத்துள்ளது” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

ஏறக்குறைய எல்லோரும் அதை கருத்தைதான் கொண்டிருந்தனர். கூடவே மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
நெகிழ வைத்த அந்த வீடியோ;https://www.youtube.com/user/JoshPalerLin
தாமசுக்காக உருவாக்கப்பட்ட இணைய பக்கம்: https://www.indiegogo.com/projects/help-thomas-to-get-a-fresh-start

No comments:
Post a Comment