நேர்மையை நேசிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு 16.12.14 முதல் 17.12.17 வரை ஜென்மச்சனியாக அமர்கிறார் சனிபகவான். அதற்காகப் பதறவேண்டாம். அவர், உங்களுக்கு திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஓரளவு நல்லதையே செய்வார்.
சமயோசிதமான பேச்சாலும், செயலாலும் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள்.குடும்பத்தில் அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். எனினும் ஜென்மச் சனி என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்துபோகும். நேரம் தவறி உண்பதால், அல்சர் வரக் கூடும். சிலநேரம் சந்தேகம், மனக்கலக்கத்தால் நிம்மதி பறிபோகும். ஒரு சொத்தை விற்று, மற்றொரு சொத்தைக் காப்பாற்ற வேண்டி வரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர் கள். எவருக்காகவும் பரிந்துரை செய்ய வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங் களைச் சாதிப்பீர்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் தனபூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில், உங்கள் ராசிக்குள்ளேயே சனி செல்வதால் பணம், சொத்து சேரும். வழக்கில் வெற்றி உண்டு. ஆனால் மனஇறுக்கம், வீண் பிரச்னை வந்து போகும். கர்ப்பிணிகள் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. 14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு விரயச் சனியாக 12ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். பழைய கடனை நினைத்துக் கலங்குவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்தில் சனி வக்கரித்து செல்வ தால், திடீர் பணவரவு உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் திருதியாதிபதியும்சுகாதிபதியுமான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று, புதிதாக வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமா வதால், கூடாப் பழக்கவழக்கங்கள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் அஷ்டமலாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், வேலைகள் தடையின்றி முடிவடையும். வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 8.4.17 முதல் 5.8.17 வரை
புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்கிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிய நபரால் ஆதாயம் அடைவீர்கள்.
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால், சவால்களைச் சமாளிக்க வேண்டி வரும். வீடு மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வரும். 7ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.
10ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத் தில் வேலை அதிகமாகும். சுயதொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்களால் பிரச்னைகள் வரும். அரசு விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். கமிஷன், புரோக்கரேஜ், உணவு வகைகளால் லாபம் அடை வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.
கன்னிப்பெண்கள், இணையதளத் தில் கவனமுடன் செயல்படுங்கள்.பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். மாணவர்கள் தகாத நட்புகளைத் தவிர்க்கவும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி ஒருவித அச்சத்தைத் தந்தாலும், ஓரளவு பணவரவையும், அனுபவத்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரையும், ஸ்ரீசனிபகவானையும் சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment