சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கடகம்

சீகரப் பேச்சும், வழிநடத்தும் திறனும் மிக்க கடகராசி நேயர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை 5ம் வீட்டில் அமர்கிறார், சனி பகவான்.
குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சொத்து தீர்ப்பு சாதகம் ஆகும். ப்ளான் அப்ரூவல், வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும். சனிபகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5ல் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பிள்ளைகளை அரவணைத்துப் போவது நல்லது. மகளின் திருமணத் துக்காக கடன் வாங்க வேண்டி வரும். கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனைப் பிரிய நேரிடலாம். கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங் களைத் தவிருங்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் சஷ்டம பாக்கியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 5ம் வீட்டில் சனி செல்வதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பண வரவு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. புது வேலை அமையும். 14.6.15 முதல் 5.9.15 வரை, உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக 4ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், தாய்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள், வீண் பழி வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்கிறார். சிலர், புதுத் தொழில் தொடங்குவார்கள். அடகில் இருந்த நகை மற்றும் வீட்டுப் பத்திரத்தை மீட்க வழி பிறக்கும். உங்கள் சப்தம அஷ்டமாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், செலவுகள் அதிகமாகும். மற்றவர் முன்னிலையில் மனைவியைக் குறைவாகப் பேச வேண்டாம். விமர்சனங் களைத் தவிர்க்கவும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். அரசு அதிகாரிகளை பகைக்காதீர்கள்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.08.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் திருதியாதிபதியும்விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் தன்னம்பிக்கை குறையும். கடந்த கால இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். இளைய சகோதர வகையில் பிணக்குகள், பயணங்களால் அலைச்சல் உண்டு. பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தி லேயே சனி வக்ரமாக்ச் செல்வதால், இந்த கால கட்டத்தில் தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
சனி 2ம் இடத்தைப் பார்ப்பதால்,  எவரையும் எடுத்தெறிந்துப் பேச வேண் டாம். அக்கம்பக்கத்தாரிடம் அளவுடன் பழகுங்கள். வாக்குறுதிகளை நிறை வேற்றப் போராட வேண்டி வரும். சனி 7ம் வீட்டைப் பார்ப்பதால் மனை வியுடன் வாக்குவாதம், அவருக்கு மருத் துவச் செலவுகள் வந்துபோகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு கூடும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார்.  
வியாபாரத்தில், புது யுக்திகளால் லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் வாய்ப்பு களும் வரும். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வுக்காக தேர்வெழுதிக் காத்திருந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்கள், பாதியிலேயே விட்ட கல்வியைத் தொடர்வார்கள். நினைத்தபடி திருமணம் முடியும். மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் பரிசுபாராட்டுகள் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், புதிய திட்டங்களை நிறைவேற்றும் வல்லமையையும், மன நிம்மதியையும் தரக்கூடியதாக அமையும்.
பரிகாரம்: பௌர்ணமி அல்லது தசமி திதி நாளில், திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை சென்று ஸ்ரீவக்ரகாளி அம்மனுக்கு நெய் தீபமேற்றி வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.No comments:

Post a Comment