சென்னை: 1965-ம் ஆண்டு புஹாரி ஹோட்டலில் தான் சிக்கன் 65 என்ற கோழி வறுவல் அறிமுகமானதாம். அதன் பிறகுதான் அது தமிழகம் முழுவதும் பரவியதாம். அந்த சிக்கனுக்குக் கிடைத்த
வரவேற்பு பலமாக
இருக்கவே குறுகிய
காலத்திலேயே இந்த பதார்த்தம் பிரபலமாகி
விட்டது.
தென் இந்திய உணவுத்துறையின்
முக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஏ.எம்.புஹாரிதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.
65 பிரபலமானதைத் தொடர்ந்து
1978ல் சிக்கன்
78, 82ல் சிக்கன்
82, 1990-ம் ஆண்டு
சிக்கன் 90 என அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நாளிதழ்களில் விளம்பரம் அதுவரை சிக்கன் 65 என்ற பதார்த்தமே இல்லை என்பதால் இதை தேசிய நாளிதழ்களில் விளம்பரமும் செய்து அமர்க்களப்படுத்தியுள்ளார் ஏ.எம். புஹாரி. இந்த உணவுப் பொருளுக்கு அவர் காப்புரிமை எதையும்
பெற விரும்பவில்லை. தான் கண்டுபிடித்து அறிமுகம்
செய்ததாக இருந்தாலும் கூட அனைவரும் இதை சாப்பிட்டு ருசிக்கட்டும் என்ற நோக்கில் காப்புரிமை
பெறாமலேயே விட்டு
விட்டாராம்.
இன்னொரு காரணம்..!
இன்னொரு காரணம்..!
சிக்கன்
65 என்ற பெயர்
வந்ததற்கு இன்னொரு
காரணமும் சொல்கிறார்கள். அதாவது சென்னையில் 1965ம் ஆண்டு இருந்த ராணுவ உணவகத்தில் விதம் விதமான உணவு வகைகளின் பெயர்களை உணவுப்
பட்டியல் கார்டில்
எழுதி வைத்திருப்பார்களாம். அதில் 65வது உணவாக இந்த சிக்கன் 65 இருந்துள்ளது.
தமிழ்
தெரியாததால் அப்போது
உணவகத்திற்கு வரும்
இந்தி மட்டுமே
பேசப் படிக்கத்
தெரிந்த வட மாநில ராணுவ வீரர்களுக்கு சிக்கன்
65 பெயரைச் சொல்லத்
தெரியாமல், நம்பர்
65 என்று சொல்லி
வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். காலப் போக்கில் அது சிக்கன் 65 என்று மாறி விட்டதாம்.
எது எப்படியோ புஹாரியிலிருந்து புறப்பட்டு இன்று முனியாண்டி விலாஸ்,இரவு நேர தள்ளு வண்டி கடைகள் வரை வரைக்கும் இந்த சிக்கன் 65 நீக்கமற நிறைந்திருக்கிறது
No comments:
Post a Comment