தானே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, சட்டத்தை மீறிய காரியங்களில் ஈடுபடும் 'டிராஃபிக்’ ராமசாமி மீது நடவடிக்கை எடுப்பதற்குக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்து விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கும் அரசு இயந்திரத்துக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் 'டிராஃபிக்’ ராமசாமி. அவர் மீது ஏன் வழக்கு? உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரை சந்தித்தோம்.
'சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ கட்டடத்தில் நீதிபதி
வி.ஆர்.கிருஷ்ணய்யர் பிறந்தநாளையொட்டி, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதுபற்றிய நிகழ்ச்சி நிரலை பேனரில் அச்சிட்டு, அந்தக் கட்டடத்துக்கு முன்பாக வைத்திருந்தோம். அங்கு வந்த 'டிராஃபிக்’ ராமசாமி, அந்த பேனரை அகற்றச் சொல்லி கூச்சல் போட்டார். அதையடுத்து, அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிலர், அந்த பேனர் உரிய விதிமுறைகளின்படி பொதுமக்கள் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் வைக்கப்பட்டுள்ளது என்றனர். அதை 'டிராஃபிக்’ ராமசாமி காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர், பேனரை கிழிக்கத் தொடங்கினார். இதையடுத்துப் பதறிப்போன வழக்கறிஞர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். உடனே, அவருடைய பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரரைப் பார்த்து, 'இவர்கள் என்னை அடிக்க வருகிறார்கள். நீ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறாயா?’ என்று சத்தம் போட்டு, 'நீ போய் அந்த பேனரை கிழி’ என்று அந்த போலீஸ்காரருக்கு உத்தரவிட்டார். அந்த நேரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், விழாவில் கலந்துகொள்வதற்கு வந்தனர். அதனால், பிரச்னை வேண்டாம் என்று நாங்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டோம்' என்கிறார் வழக்கறிஞர் ஜான் செல்வராஜ்.
இனிமேல் இதுபோன்ற ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்’ என்று 'டிராஃபிக்’ ராமசாமியை எச்சரித்து அனுப்பினார். ஆனால், அதன் பிறகும் இதுபோன்ற காரியங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்புக்கு இருக்கும் தைரியத்தில்தான் இதுபோன்ற வேலைகளைச் செய்கிறார். அவர்களை வைத்து மற்றவர்களை மிரட்டவும் செய்கிறார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பேனர்களை அகற்றுகிறேன் என்ற பெயரில் 'டிராஃபிக்’ ராமசாமி செய்யும் காரியங்களின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டும் என்றும் வழக்குத் தாக்கல் செய்துள்ளேன்' என்று சொல்கிறார்
'டிராஃபிக்’ ராமசாமி மீது இன்னொரு குற்றச்சாட்டும் கிளம்பி இருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்ற வாசலில் இருந்த கோயில் ஒன்று கடந்த வாரம் இடிக்கப்பட்டது. அந்தக் கோயிலை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்குப் போட்டவர் 'டிராஃபிக்’ ராமசாமி. 'என்னுடைய கோயிலை இடிக்க வழக்குத் தொடுத்த 'டிராஃபிக்’ ராமசாமி, ஆரம்பத்தில் இந்தக் கோயிலில் கூழ் ஊற்றும் விழாவுக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார். உயர் நீதிமன்றத்தின் உள்ளே இருக்கும் கேன்டீனை எனக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தவரும் அவர்தான். இந்தப் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளிடம் வசூல் செய்து கொடுக்கச் சொல்லி என்னை வற்புறுத்தினார். அதை நான் செய்யவில்லை. அதனால், எனக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போதுதான் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொன்னவர், என்னைப் பழிவாங்குவதற்காகவே கோயிலை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்' என்றார் இடிக்கப்பட்ட கோயிலின் தர்மகர்த்தாவான காந்தா.
இதுபற்றி நம்மிடம், 'நான் அந்த பேனரை கிழிக்கவில்லை. அது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். என் மீது அவர்கள் தொடுத்துள்ள வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன். இவர்கள் சட்டத்தை மீறி பேனர்கள் வைப்பார்கள். அதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றினால் அது சட்ட விரோதமா? சட்டம் படித்த வழக்கறிஞர்களே சட்டத்தை மீறினால் எப்படி? கோயில் விவகாரத்தில் காந்தா ஆயிரம் சொல்வார். அவரிடம் காசு வாங்கிப் பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை' என்று நிதானமாகச் சொன்னார் 'டிராஃபிக் ராமசாமி.
No comments:
Post a Comment