சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Dec 2014

தந்தையின் அறிவுரையே சச்சினின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கை! (சுயசரிதை- இறுதி பாகம்)

ச்சின் சுயசரிதை அறிமுகத்தின் நான்காவது மற்றும் இறுதி பாகம் இது. முதலிடத்தை டெஸ்ட் போட்டிகளில் தக்கவைத்துக் கொண்டது துவங்கி ஓய்வு பெற்றது வரை இந்த இறுதிப் பக்கங்களில் சச்சின் பேசியிருக்கிறார். 

முதலிடத்தை டெஸ்ட் போட்டிகளில் பெற்ற பிறகு தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை இந்தியாவிலேயே எதிர்கொள்ள வேண்டிய சவால் காத்துக்கொண்டு இருந்தது. அதற்கு முன்னதாக வங்க தேசத்துடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களைச் சச்சின் குவித்தார். 

தென் ஆப்பிரிக்கத் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் சரியாக ஆடவிட்டாலும், அடுத்த இன்னிங்சில் சதமடித்தது ஸ்டெயினை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைச் சச்சினுக்குக் கொடுத்தது. அடுத்தப் போட்டியில் சேவாக், லஷ்மண், தோனி மற்றும் சச்சின் சதமடிக்க அணி 600 ரன்களைக் கடந்து அசத்தியது. போட்டியை மழையோடு போராடி வென்ற பின்பு ஹர்பஜன் பாதி மைதானத்தைச் சுற்றி வருகிற அளவுக்கு வெற்றி உற்சாகம் தருவதாக அமைந்தது. 

ஒருநாள் தொடரில் நான்கு ரன்னில் ரன் அவுட் ஆனபொழுதும் இறுதி ஓவரில் பத்து ரன்களைச் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் லாங்க்வெல்ட் அடித்த அற்புதமான ஷாட்டைப் பவுண்டரி போகாமல் சச்சின் தடுத்தது இந்திய அணி ஒரு ரன்னில் வெல்ல உதவியது. 

பறந்தன வலிகள், பிறந்தது இரட்டைச் சதம்: குவாலியரில் நடக்கவிருந்த போட்டிக்கு முன்னர் சச்சினுக்கு உடம்பு முழுக்க வலி ஏற்பட்டது. போட்டி நடக்கவிருந்த காலை வேளையில் ஒன்றரை மணிநேரம் பிஸியோ சச்சினுக்குச் சிகிச்சை தந்தார். ஆனால், களத்துக்குள் புகுந்ததும் சச்சினின் எல்லா வலிகளும் பறந்து போயின. 175 ரன்களைத் தொடும் வரை இரட்டை சதம் பற்றிய எண்ணம் சச்சினுக்கு வரவில்லை. இறுதியில் முதலில் ஆடிய வேகத்தோடு ஆடமுடியாமல் போனாலும், இடைவெளிகள் பார்த்து அடித்தும், தோனியை ஆடவிட்டும் இறுதி ஓவரில் இரட்டை சதம் கடந்து சாதித்தார் அவர், அவருக்கு வாழ்த்திய வந்த குறுஞ்செய்திகள் அனைத்துக்கும் நன்றி சொல்லி முடிக்க இரண்டு நாட்கள் ஆயின! 

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்டில் கடைசி இரண்டு விக்கெட்களுடன் சேர்ந்து லஷ்மண் அணியைக் கரை சேர்த்தார். அடுத்தப் போட்டியில் சச்சின் சத்தத்தை நாதன் ஹாரிட்ஸ் பந்துவீச்சில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் அடித்துக் கடந்தார். 214 ரன்களை அடித்த சச்சினின் ஆட்டம் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. 

நியூசிலாந்து அணியுடனான போட்டியின்போது ஸ்கொயர் லெக் நோக்கி ஹைதராபாத்தில் நடந்த பொழுது எல்லாம் ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாகப்படுத்தியது ஆடுவதற்கு இடையூறாக இருந்தது என்று பதிகிறார். தென் ஆப்பிரிக்க அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொண்ட முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சுருண்டு இரண்டாவது இன்னிங்சில் போராடி ஆடிக்கொண்டிருந்த பொழுது வெளிச்சம் மங்கத்தொடங்கிய பொழுது ஸ்டெயின் சச்சினிடம், "அடித்து ஆடுங்கள்" என்றதும், "வெளிச்சம் இருந்த பொழுது இந்தப் பாய்ச்சலை காட்டியிருக்க வேண்டியது தானே?" என்று பதிலடி கொடுத்தார் சச்சின்.

டர்பனில் அடுத்தப் போட்டிக்கு சென்ற பொழுது மழை தூறியிருந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே இது சாதகம் என்று அணியில் பரவலாகப் பேசப்பட்ட பொழுது, "இல்லை! எல்லாமும் சமமாகவே இருக்கிறது. நாம் ஜெயிக்க முடியும்" என்று சச்சின் ஊக்கப்படுத்தினார். அதற்கேற்ப 131 ரன்களுக்குத் தென் ஆப்பிரிக்க அணியைச் சுருட்டி அணி வெற்றியை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டது. 

அடுத்தக் கேப் டவுன் போட்டியில் இரண்டாவதாக இந்திய அணி ஆடிய பொழுது க்ரீசுக்கு வெளியே நின்றே சச்சின் பந்துகளைத் துவம்சம் செய்து கொண்டிருந்தார். அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் வந்த கனவில் ஷார்ட் பிட்ச் பந்தை மார்னே மார்கல் வீசுவது போலவும், அதை கிரீஸுக்குள் இருந்து சிக்ஸருக்கு ஹூக் ஷாட் மூலம் அனுப்பிச் சதம் கடப்பது போலவும் கனவு வந்தது. அப்படியே நிஜத்திலும் நடக்கச் செய்தது. சிக்சர் மூலம் மார்கல் பந்தில் சதம் கடந்தவுடன் தோனியிடம், "இந்த ஷாட், சதம் இரண்டையும் ஏற்கனவே கனவில் அடித்துவிட்டேன்" என்றாராம். 

காயங்களோடு தயாரான கடைசிக்கனவு: பின் தொடையை உலகக்கோப்பைக்கு முந்தைய ஒருநாள் போட்டித்தொடரில் சச்சின் காயப்படுத்திக்கொண்டார். அணியின் ஒவ்வொரு வீரரும் உடல் எடையைத் தியாகம் செய்து அணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று சச்சின் உத்வேகப்படுத்தினார் தானே ஒரு மூன்று கிலோ இழந்து போட்டித் தொடருக்கு தயாரானார். 

2011
உலககோப்பை தன்னுடைய இறுதிக்கோப்பையாக இருக்கக் கூடும், இதை வென்றால் மட்டுமே உண்டு என்பதால் சச்சின் கவனமாக இருந்தார். யுவராஜ் சிங் இக்கட்டான மனக்குழப்பங்களில் இருந்த நிலையில் ஒரு டின்னருக்கு அவரை அழைத்து, "உனக்கு என்று இலக்குகளை வகுத்துக்கொண்டு அவற்றில் கவனம் செலுத்து. வெற்றி நமக்கே!" என்று உற்சாகப்படுத்தினார்.

வங்கதேச ஆட்டத்தில் சேவாக் நொறுக்க அணி வென்றது. பழைய மற்றும் புதிய மட்டைகளோடு ஆடிய இங்கிலாந்து போட்டியில் சச்சின் சதமடித்தாலும் ஆட்டம் டை ஆனது. தோனி தலைமையேற்று போட்டி டை ஆனால் அந்தத் தொடரின் கோப்பை அவருக்கே என்று ஆரூடங்கள் முளைக்க ஆரம்பித்தன. தென் ஆப்பிரிக்கப் போட்டியில் கடைசி ஓவரில் மண்ணைக் கவ்வியதும், "இவங்க தேற மாட்டாங்க" என்று முடிவுரை எழுதிவிட்டார்கள். 
 

கண்ணைமூடி பந்தை பார்த்த சச்சின்: மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிக்கு முன்னர் நெட்டில் பயிற்சி செய்கிற பொழுது சச்சின் ஒரு சோதனை செய்து பார்த்தார். பந்து வீச்சாளர் ஓடிவந்து பந்தை விடுவதற்குக் கையை மேலே கொண்டுவரும் வரை கவனித்துவிட்டுக் கண்ணை மூடி பந்தை ஆடுவது என்று ஆறு பந்துகளைக் கண் மூடி ஆடினார். கேரி கிறிஸ்டனிடம் இப்படிச் செய்ததைச் சச்சின் சொன்ன பொழுது, "அப்படியெல்லாம் எனக்குத் தூரத்தில் இருந்து பார்க்க தெரியவே இல்லையே சச்சின்" என ஆச்சரியப்பட்டார். சச்சின் தன்னுடைய இளம் வயதில் மழையில் ரப்பர் பந்துகளைக் கொண்டு தன்னைத் தாக்கும் வகையில் 18 யார்ட்களில் பந்து வீசச்சொல்லி பயிற்சி செய்வாராம். 

ஆஸ்திரேலியா அணியுடனான காலியிறுதியில் சச்சின் அரைச் சதம் கடந்த பின்பு கம்பீர்தோனி சீக்கிரம் அவுட்டாகி விடச் சச்சின் கண்களை மூடித் தரையில் படுத்தவாறு இறைவனை வெற்றிக்காக வேண்டிக்கொண்டிருந்தார். வெற்றி பெற்றுவிட்டோம் என்றதற்குப் பிறகே சச்சின் கண்களைத் திறந்தார். 

அடுத்துப் பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிக்குக் காத்திருந்தார்கள். அமித் குமார் பாடிய, ’படே அச்சே லக்தே ஹெய்ன்என்கிற பாடலை ஓயாமல் ஒருவாரம் கேட்டு மனதளவில் தன்னைச் சாந்தப்படுத்திக் கொண்டு ஆடப் புகுந்தார். 85 ரன்களைப் பல கேட்சுகள் விடப்பட்டதன் உதவியோடு அடித்த பின்னர்ப் பாகிஸ்தானின் விக்கெட்டுகளை அணியினர் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். அப்ரிதி ஹர்பஜன் வீசிய ஃபுல் டாஸ் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்ப முயன்று அவுட் ஆனார். அந்த ஷாட்டைப் பத்தில் ஒன்பது முறை சிக்சருக்கு அப்ரிதி அனுப்பிவிடுவார். அன்று தவறிவிட்டது என்பது சச்சினின் கவனிப்பு. உலகக்கோப்பை முழுக்க சச்சின் சைவ உணவையே சாப்பிட்டார். 

வெற்றிக்குப் பின்பு மூன்றாவது முறையாக உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது அவர் கைவசம் வந்திருந்தது. அமீர்கான், வெற்றி பெற்ற அந்த இரவில் சச்சினை நேரில் பார்த்து வாழ்த்திவிட்டு சில கணங்கள் பேசிவிட்டு சென்றார்.

இறுதிப்போட்டிக்கு முன்னர் கடந்த உலகக்கோப்பையில் சொதப்பிய மோசமான நினைவுகள் நிழலாடின. மைக் ஹார்ன் அனைவரையும் அழைத்து எப்படிப் பூமியை எந்த மோட்டார் வாகன உதவியும் இல்லாமல் சுற்றி வந்தார் என்பதையும், வட துருவத்தை இருண்ட காலங்களில் அச்சமில்லாமல் கடந்தார் என்பதையும் விறுவிறுப்பாக விளக்கி "அதிக அழுத்தத்தில் அற்புதமான சாதனைகளை அச்சப்படாமல் செய்யலாம்" என்று புதுத் தெம்பை தந்தார். எந்த அணியும் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை என்கிற வரலாறு சிரித்தது. 

இறுதிப்போட்டி ஆட்டத்தை பார்க்காத சச்சின், சேவாக்: ஸ்ரீசாந்த் உடல்நிலை முடியாமல், வெப்பத்தைத் தாங்க முடியாத நிலையிலும் ஹர்பஜன் மற்றும் சச்சின் உற்சாகத்தில் அன்று பந்து வீசினார். சேவாக் டக் அவுட்டாக, சச்சின் பதினெட்டு ரன்களில் ஸ்விங் ஆகாது என்று நினைத்து ஆடிய பந்தில் கேட்ச் கொடுத்து நகர அணி மீண்டும் தோற்றுவிடுமோ என்கிற அச்சம் சச்சினை ஆட்டிப்படைத்தது. அவரும், சேவாக்கும், தோனி, கம்பீர், கோலி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற காட்சியைக் காணவில்லை. 

ஓரமாக அறையில் அமர்ந்து இறைவனிடம், "எங்கள் அணிக்கு எது சிறந்ததோ அதைக்கொடு" என்று வேண்டிக்கொண்டு இருந்தார்கள். பெரிய கொடுமை சேவாக்கை அவர் இருந்த நிலையிலேயே ஆட்டம் முடியும்வரை சச்சின் அமர வைத்திருக்கிறார். "நீ வென்ற பிறகு போட்டியை திரையில் நூறு முறை பார்த்துக்கொள்ளலாம். இப்பொழுது அதே இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்" என்று சொல்லி அமரவைத்து விட்டாராம். 

காதில் பூ சூடி, கண்ணீர் சொரிந்து: யுவராஜை அழுது சச்சின் அனைத்துக்கொண்ட பின்பு அணியினர் சச்சினை தூக்கிக்கொண்டார்கள். "கீழே போட்டு விடாதீர்கள்" என்ற பொழுது பதான், "நாங்கள் கீழே விழுந்தாலும் உங்களை மேலேயே இருக்க வைப்போம்" என்றாராம். அஞ்சலி போட்டியை வீட்டிலேயே கண்டுவிட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்த மும்பை நெரிசலில் காரோட்டி வந்து சேர்ந்திருக்கிறார். 

அணியின் எல்லா வீரர்களிடமும் கையெழுத்தை ஷாம்பெயின் பாட்டிலில் சச்சின் வாங்கிக் கொண்டார். உடல்முழுக்கச் சாயம் பூசிக்கொண்டு சச்சினை ஊக்குவிக்கும் சுதீர் கௌதமை அந்த இரவில் அழைத்து அவருடன் படமெடுத்துக் கொண்டார் சச்சின். நள்ளிரவில் அஞ்சலி மற்றும் சச்சின் மதுவை ஊற்றி அருந்தியபடி இருவரின் காதுகளிலும் பொக்கேவில் இருந்த பூக்களைக் காதுகளில் சூடிக்கொண்டு இசைக்கு அந்த வெற்றி பொழிந்த இரவில் நடனமாடி தீர்த்திருக்கிறார்கள். 

ரப் னே பனாதே ஜோடி படத்தின் வரிகளான, "என்ன செய்வது என் நண்பனே! உன்னில் கடவுளைக் காண்கிறோம் நாங்கள்!" என்கிற வரியை கோலி, யுவராஜ், ஹர்பஜன் மூவரும் இணைந்து மண்டியிட்டு பாடி சச்சினை சங்கடப்பட வைத்தார்கள். அன்னையை அடுத்த நாள் காண வந்த பொழுது, வீட்டுக்குள் அவர் திலகமிட்டு வரவேற்றார். "இந்த முறை இறுதியாக உன்னை ஏமாற்றாமல் காப்பாற்றிவிட்டேன்" என்று சச்சின் உள்ளுக்குள் பூரித்தார். 

ஸாரி கேட்ட நடுவர்: இங்கிலாந்து தொடரில் ஜாகீர், யுவராஜ், ஹர்பஜன், சேவாக் ஆகியோர் காயத்தால் பெரும்பாலும் ஆடமுடியாமல் போனது ஒருபுறம் என்றால் இங்கிலாந்து அணி தொடர் முழுக்கச் சிறப்பாக ஆடியது. லார்ட்ஸ் மைதானத்தில் ஆடுவது எப்பொழுதுமே தனக்குச் சுலபமாக இருந்ததில்லை என்பதைச் சச்சின் ஒத்துக்கொள்கிறார். தான் உடல்நலமின்மைகளுக்கு நடுவே சச்சின் பார்மை மீட்டது போல ஆடிக்கொண்டிருந்த பொழுது தோனி அடித்த பந்து ஸ்வான் கையில் பட்டு சச்சின் நின்று கொண்டிருந்த பக்கமிருந்த ஸ்டம்ப்பை பெயர்த்தது, சச்சின் வெளியே நின்றிருந்தபடியால் அவுட் ஆனார். 

இறுதி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்த நிலையில் தவறான அம்பையர் முடிவால் சச்சின் நூறு சதங்களைத் தொட முடியாமல் தள்ளிப்போனது. நடுவர் ராட் டக்கர் சச்சினிடம் வந்து அந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு அவரின் நண்பர்கள் சச்சினை சதமடிக்க விடாமல் தான் தடுத்ததற்காகப் பெருங்கோபம் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட்டுப் போனார். 

சதமடிக்காமல் போனாலும் சுயநலம் தான்மேற்கிந்திய தீவுகளுடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 76 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற செய்த பின்னும் சச்சின் சதம் எங்கே என்று கேட்பதை விடுத்து, சச்சின் சுயநலத்துக்காக ஆடுகிறார் என்று எழுதினார்கள். "சதம் அடித்தால் தான் சுயநலம் என்கிறார்கள் என்றால் இங்கே அணியின் வெற்றிக்காக அரைச் சதம் அடித்த பொழுதும் விமர்சிக்கிறார்கள்" என்று புலம்புகிறார் லிட்டில் மாஸ்டர். 

கட்டைவிரல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த சூழலில் 94 ரன்களில் அவுட்டான டெஸ்ட் தொடரோடு ஓய்வெடுத்துக்கொள்ளச் சச்சின் சென்றார். ஆஸ்திரேலியா அணியுடனான தொடரில் அணியே சொதப்பிய நிலையில் சச்சின் 73, 32, 41, 80 என்று ஸ்கோர்கள் அடித்த பின்பும் சதம் தான் சச்சினுக்கு முக்கியமாகப் போனது என்று எழுதினார்கள். ஒருமுறை விக்கெட்டை பறிகொடுத்த பின்னர் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போய்க் கோபத்தை இரண்டு மெய்ன் கோர்ஸ் சாப்பிட்டு காட்டிய சச்சின் வருகிற வழியில் கிரெடிட் கார்டை வேறு தொலைத்துவிட்டார்!

ஐம்பது கிலோ குறைந்த சச்சின்நூறாவது சதத்தை ஆசியக்கோப்பையில் வங்கதேசத்துடன் போராடி அடித்த சச்சின் அந்தப் போட்டியில் மூன்று பவுண்டரிகள் தொடர்ந்து வங்கதேச அணியின் அபாரமான பீல்டிங்கால் தடுக்கப்பட்டதைச் சொல்லி, அன்று அவர்கள் சிறப்பாக ஆடி வெற்றியை பறித்தார்கள் என்று சொல்கிறார். அணியோ சச்சின் சதமடித்த கொண்டாட்டத்தில் மூழ்கிப் போயிருந்தது. அந்தச் சதத்தைச் சச்சினுக்காகத் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தியாகம் செய்த அண்ணன் அஜித்துக்கு அர்ப்பணித்தார். ரமீஸ் ராஜா, "இப்பொழுது எப்படி உணர்கிறீர்கள் சச்சின்?" என்று கேட்ட பொழுது, "ஐம்பது கிலோ குறைந்தது போல லைட்டாக உணர்கிறேன்!" என்றார் சச்சின்.

நியூசிலாந்து, இங்கிலாந்து அணியுடனான தொடரில் முழுக்கச் சரியாக ஆடாமல் போனதும் இப்பொழுது ஓய்வு பெற வேண்டுமா என்று சச்சின் தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். பின்னர், "இன்னமும் நன்றாக ஆடுவதாகவே உணர்கிறாய். அடுத்த உலகக்கோப்பை வரை ஆடும் அளவுக்கு உன்னால் போகமுடியாது. ஆகவே, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுக" என்று மனது சொன்னபடி செய்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா உடனான தொடரில் 81 ரன்களைச் சென்னையில் அடித்துச் சிறப்பாகத் துவங்கினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சச்சின் பெரிய ஸ்கோர்கள் அடிக்காமலே அவுட் ஆனார். 

தென் ஆப்பிரிக்கத் தொடரோடு 200வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் கிரிக்கெட் வாரியம் மேற்கிந்திய தீவுகளோடு அறிவித்தது. சச்சின் வாரியத்திடம் இரண்டாவது டெஸ்ட் போட்டியை மும்பையில் வைக்கக் கோரிக்கை வைத்தார். அவரின் அன்னை அதுவரை அவர் ஆடி நேரில் பார்த்ததே இல்லை என்பதால் அன்றாவது அதைச் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தால் அப்படிக் கேட்டுக்கொண்டார். 
 


அழைத்த தந்தை, அழுத மகன்: அர்ஜூன் அப்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இருந்தான், அவனுக்குப் போனில் அழைத்துத் தான் ஓய்வு பெறப் போவதை சச்சின் சொன்னார். சில நிமிடங்கள் கனத்த மவுனம். போன் வைக்கப்பட்டது. மகன் அழுது கொண்டிருக்கிறான் என்று தகப்பன் சச்சினுக்குத் தெரியும். மீண்டும் அர்ஜூனே அழைத்த பொழுது சச்சினுக்கு வார்த்தைகள் வரவில்லை. அர்ஜூன் தென் ஆப்பிரிக்காவில் தன்னுடைய நாட்கள் எப்படியிருக்கின்றன என்று மட்டும் பேசிவிட்டு அழைப்பை கட் செய்தான்.

ஓய்வு முடிவு தெரிந்த அன்று வீட்டைச் சுற்றி பலர் கூடிவிட்டார்கள். மும்பை கிரிக்கெட் அமைப்பின் மைதானத்தில் இருந்த எல்லாப் பணியாளர்களைச் சந்தித்து நன்றிகள் சொல்லி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அன்னை அமர வேண்டிய வசதிகளை எம்.சி.. அதிகாரிகளுடன் பேசி பெற்றுக்கொண்ட பின்பு இறுதியாக ரஞ்சிப் போட்டியில் ஆடினார் சச்சின். இறுதி இன்னிங்சில் 79 ரன்கள் அடித்து அணி வெற்றி பெறுவதை இறுதியாக ஒருமுறை உறுதி செய்தார்.

இறுதி முறையாக ஈடன் கார்டன்ஸ்அருமையாக இரண்டு ஷாட்கள் ஆடிய பின்பு தவறான எல்பிடபிள்யூ முடிவால் சச்சின் ஆட்டமிழந்த அந்தப் போட்டியை அவருக்குச் சொல்லாமலே அஞ்சலி காண வந்து சேர்ந்திருந்தார். மூன்றே நாட்களில் போட்டி முடிந்தது. கொல்கத்தா வாரியம் சச்சினின் மெழுகு சிலையை நிறுவியிருந்தது. கொல்கத்தாவில் இருந்து கிளம்பும் பொழுது விமானத்தில் தான் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்கிற பட்டியலை கைப்பட எழுதிக்கொண்டார். இன்னும் பத்தே நாளில் பலவருட பந்தம் முடிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டார். 

தாஜ்மகால் பேலஸ் ஹோட்டலின் எல்லா மாடியிலும் சச்சினின் போஸ்டர்கள், படங்கள் தொங்கிக்கொண்டு இருந்தன. சச்சின் படம் போட்ட டி-ஷர்ட்களை அணியே அணிந்து கொண்டது. இறுதி டெஸ்ட் நவம்பர் 14 அன்று துவங்கியது. அன்னை தெரசாவுக்குப் பிறகு உயிருடன் இருக்கும் பொழுதே அரசு அஞ்சல் தலை வெளியிட்டது அவருக்கு என்கிற செய்தி வந்து சேர்ந்ததும் பேச்சற்று நின்றார். 

அம்மாவால் ஆடமுடியாமல் திணறிய சச்சின்: அணியினரிடம் அணியை முன்னிறுத்தி ஆடுங்கள், தேசத்தின் கனவுகளைச் சுமக்கிறீர்கள் என்று நினைவில் கொள்ளுங்கள் என்று இறுதியாக ஒருமுறை உற்சாகப்படுத்தினார். மூன்றரையை மணி கடந்திருந்தது. இந்திய அணி 77-2 என்று ஸ்கோருடன் இருந்தது. சச்சின் ஆடப்புகுந்தார். உடல்நலமில்லாத அன்னை பார்த்துக்கொண்டு இருந்தார். எல்லாரும் சச்சின் சச்சின் என்று மந்திரம் போல உச்சரித்துக் கொண்டு நின்றார்கள். ஒவ்வொரு ரன்னிலும் சச்சின் திளைத்தார். ஆனால், அன்றைய தினத்தின் இறுதி ஓவரில் சச்சினின் அம்மாவை மைதானத்தின் பெரிய திரையில் காட்டினார்கள். அவரோ இப்படி மஞ்சள் வெளிச்சம் பட்டுக் கூச்சப்பட்டார். அவரின் நாக்குச் சங்கடத்தில் வெளியே வந்துவிட்டது. மைதானத்தில் இருந்த அனைவரும் அந்த அன்னைக்காக எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினார்கள். சச்சின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவுட்டாகாமல் நின்றார்.

அர்ஜூன் அண்டர் 14 போட்டியில் ஆடப் போக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. யுவராஜ் அவனுக்கு லிப்ட் கொடுத்து போட்டியைக்காண அழைத்து வந்திருந்தது சச்சினுக்கு இன்ப அதிர்ச்சி. ஆடிக்கொண்டிருக்கும் பொழுது தான் பால் பாயாக தன்னுடைய மகன் நிற்பதை அவர் கண்டார். அடுத்த நாள் பந்தை கட் செய்ய முயன்று சமியிடம் 74 ரன்களில் அற்புதமான கேட்ச்சில் அவுட்டாகி வெளியேறிய பின் என்ன தவறு செய்தார் என்பதை அர்ஜூனுடன் விவாதித்தார். 

சென்று வாருங்கள் சச்சின்: மூன்றாவது நாளில் அணியை வழிநடத்தும் பொறுப்பைச் சச்சினிடம் தோனி கொடுத்தார். "இந்த ஸ்டம்ப் எனக்கு வேண்டும்" என்று கடைசி விக்கெட் விழுந்ததும் சச்சின் சொன்னார். தோனி அவருக்கு நகர்கிற மரியாதையை அணியினரோடு இணைந்து கொடுத்தார். ஒரு பத்து நிமிடங்கள் சச்சின் கண்ணீர் விட்டு அழுதார். யார் கண்களையும் பார்க்காமல் அழுது கொண்டே கைகுலுக்கினார். லாரா சச்சினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள அறைக்கு வந்திருந்தார். 

மைக்கை வாங்கிக்கொண்டு சென்னையில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தை ஒருவர் அவருடைய பந்து வீச்சில் மூன்று பந்துகளை ஆடிய கணத்தை நெகிழ்வோடு சச்சின் பகிர்ந்து கொண்டு, எல்லாருக்கும் நன்றிகள் சொன்னார். பிட்ச்சுக்கு இறுதி முறையாக வணக்கம் செலுத்தினார் அவர். 
கோலி சச்சினின் அறைக்கு வந்தார்; அவர் கண் முழுக்கக் கண்ணீர், "என் அப்பா சிறப்பாக ஆடவேண்டும் என்று கட்டிவிட்ட கயிறுகள் இவை. மிகவும் நெருக்கமான யாருக்காவது அதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். நீங்கள் தான் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று சச்சினின் கையில் கட்டிவிட்டு காலைத் தொட்டு கும்பிட்டுவிட்டு சச்சின் அழக்கூடும் என்று முன்னரே விடைபெற்றார். 

மாலையில் அழைத்த மன்மோகன்மாலை மூன்று மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது. மன்மோகன் சிங் அழைத்திருந்தார். "இருபத்தி நான்கு வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள். உங்களுக்குத் தேசத்தின் மிக உயரிய பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கிறது" என்றார். சச்சின் எல்லாக் கடவுள்களையும் அஞ்சலி வைத்திருக்கும் இருக்கைக்கு அழைத்துப் போய்க் கைகளை இருக்கையின் மீது வைத்து, "நீ ஒரு பாரத ரத்னாவை பார்த்துக்கொண்டிருக்கிறாய்" என்றார்.

இறுதிவரை வெல்டன் என்று சொல்லாத அச்ரேக்கர் இறுதியில் பாரத ரத்னா வென்றதும் "வெல்டன் மை பாய்" என்றுவிட்டார். சச்சினின் தந்தையை அவரின் சொந்த வீட்டில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்கிற கனவு நினைவாகவே இல்லை. பதினொரு வயதில் ஆட ஆரம்பித்த சச்சினுக்கு அவரின் அப்பா சொன்ன அறிவுரை தான் எப்பொழுதும் செலுத்தியது, "உன் கனவுகளை விடாமல் துரத்து. வெற்றிக்கு குறுக்கு வழிகள் தேடாதே. பாதை கடினமானதாக இருக்கும், இருந்தும் துவளாதே". இதுதான் இருபத்தி இரண்டு "யார்ட்"களுக்கு நடுவே நிகழ்ந்த சச்சினின் இருபத்தி நான்கு வருட கிரிக்கெட் வாழ்க்கை. 


No comments:

Post a Comment