சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Dec 2014

சிகரெட், மது வாடையே தெரியாத கிராமம்!

"சில்லறை விலையில் சிகரெட் கிடையாது" என மத்திய அரசு விரைவில் சட்டம் கொண்டுவர உள்ளது. ’அடப்பாவமே... வீட்டுக்கு தெரியாம இனிமே சிங்கிள் தம் அடிக்க முடியாதாஎன வாலிப வட்டங்களும், ’சில்லறைக்கு விக்கலைன்னா சிரிப்பா சிரிச்சுடுவோமேஎன பொட்டிகடைக்காரர்களும் புலம்ப தொடங்கி விட்டனர்.
 

அடபோங்கப்பா... எங்க ஊர்ல எல்லாம் பல ஆண்டுகளாக இந்த வாசனையே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தண்ணி, தம்மு இது இரண்டுமே தப்பித்தவறி கூட இங்க விற்கவோ, வாங்கவோ கூடாது என கம்பீரமாக சொல்கிறார்கள் இவ்வூர் மக்கள். அப்படிபட்ட ஊரின் பெயர் என்னவென்று தெரியுமா? ஆம், உலகளவில் ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூர் அருகே 'புதுப்பட்டி'. மதுரையிலிருந்து 21 கி.மீட்டர் தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது இக்கிராமம். இதில் 2000 குடும்பங்கள் உள்ளன.

இது குறித்து டீக் கடைக்காரர் தவமணி கூறுகையில், "எங்கள் ஊரில் எந்த ஒரு தீய பழக்கமும் கிடையாது. இது இந்த காலத்திலிருந்து இல்லை எங்கள் முன்னோர்கள் கடைபிடித்தது. சுதந்திரத்துக்கு முன்பே எங்கள் ஊர் பெரியவர்கள் சேர்ந்து "நாங்களோ, எங்களின் சந்ததிகளோ சிகரெட், தண்ணி விற்றால் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து தண்டனை கொடுக்கலாம், அடிக்கலாம்" என பல சட்டங்கள் போட்டு அதனை ஒரு பத்திரத்தில் பதிவு செய்து ஊர் மக்கள் எல்லோரும் கையெழுத்திட்டனர். அந்த பத்திரத்தின் நகல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி விற்றாலோ அபராதம் விதிக்கப்படும். பொதுமக்களால் தண்டிக்கப்படுவர். தண்டனை பெற்றவர் காவல்துறையில் புகார் செய்தால் மனு ஏற்கப்படாது. தள்ளுபடியாகும். ஏனென்றால் முன்னால் அவர்கள் தவறு செய்ய மாட்டோம் என அளித்த ஊர்மக்கள் எல்லோரும் கையெழுத்திட்ட பத்திரம் இருக்கிறது. வருமானம் பெரிதல்ல, மானம்தான் பெரிது. உடல் நலனை விட வியாபாரம் பெரிதல்ல. வெளியூர் மக்கள் வந்து சிகரெட் கேப்பார்கள். இந்த ஊரில் விற்கமாட்டோம் என்று கூறுகையில் பெருமையாக உள்ளது" என்றார்.
 

ஊர் மக்கள் கூறுகையில், "எங்கள் முன்னோர்கள் செய்தது நல்லதுதான். இதனால் எங்கள் ஊர் மக்கள் பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் உள்ளனர். முன்னோர்கள் தீமைக்கு அடிமையாகியிருந்தால் நாங்களும் வீணாகிடு போவோம். இவர்களால் ஊருக்கும் பெருமை. பிள்ளைகளும் பயந்து தவறுகளையும் செய்வதில்லை. இதனால்தான் எங்கள் பிள்ளைகள் விளையாட்டில் சாதிக்கின்றனர். இந்தியன் வாலிபால் டீமில் எங்க ஊரை சேர்ந்த உக்குற பாண்டியன் விளையாடிக் கொண்டிருக்கிறார். இது எங்கள் ஊருக்கு பெருமை. இதுபோல் இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்கவேண்டும்" என்றனர்.

இளைஞர்கள் தெரிவிக்கையில், 50 கடைகள் இருக்கிறது. எங்குமே சிகரெட், தண்ணி விற்கமாட்டாங்க. மீறி விற்றால் 5 கி.மீட்டர் தொலைவில் செல்ல வேண்டும். ஆதனால் நாங்க இதை விரும்பமாட்டோம்" என்றனர்.

நல்ல விஷயம் தான். 



No comments:

Post a Comment