சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Dec 2014

இது நம்ம புத்தாண்டு சபதமுங்கோ...!

பிரசவ வைராக்கியம் மாதிரிதாங்க இந்த புத்தாண்டு சபதமும்! ஒவ்வொரு வருஷம் பிறக்கும்போதும் சபதத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. அதிலும் சிலரோட ஆழ்மனசுக்குள்ள எடுக்குற சபதம் இருக்கு பாருங்க... நம்ம தமிழ்ப் படங்களின் ஒட்டுமொத்த வில்லன்களும் தோத்தானுங்க! 

அப்படி என்னென்ன சபதங்களெல்லாம் எடுக்க நினைச்சிருப்பாங்க நம்ம ஆளுங்க........

ந்த வருஷமாவது கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி, மாடி வீட்டுல இருக்குற ஃபிகரை உஷார் பண்ணணும். குறைந்தபட்சம் அதோட முகத்தைப் பார்த்து ஸ்மைலாவது பண்ணணும்டா சாமி!

போ வருஷம் தத்திமுத்தி பாஸ் ஆன மாதிரி இல்லாமல், இந்த வருஷம் செம மார்க்கு எடுத்து பாஸாகணும். இந்த வருஷமும் பேப்பரை காட்ட மாட்டேன், பிட் அடிக்க விட மாட்டேன்னு எவனாவது வம்பு பண்ணினால் தக்காளி... சூனியம் வச்சிட வேண்டியது தான்!

மு கோழி பிசினஸ்ல ஆஹா ஓகோன்னு ஒரு வருஷத்தை ஓட்டியாச்சு! 18 வித பயனுள்ள டேபிள்ஷீட் பிஸினஸ்ல போன வருசத்தை சூப்பரா ஓட்டியாச்சு! இனி இந்த வருசத்துக்கு, மேக்னடிக் ஸ்டிக் பிஸினஸை கையில எடுக்கப் போறேன். 

இந்த ஸ்டிக்கால மண்டையில ரெண்டு தட்டு தட்டினால் இதிலிருக்குற ஆல்பா கதிர்கள் மண்டைக்குள்ள போயி, மெமரி பவரை தூண்டி விட்டு வளரவைக்கும்னு சொல்லப்போறேன். அமெரிக்காவிலுள்ள லிங்கன் யுனிவர்சிட்டியில இருக்குற ஆராய்ச்சியாளர்களே இந்த ஸ்டிக்கை டெஸ்ட் பண்ணி சர்டிபிகேட் கொடுத்ததா புருடா விடப்போறேன்! இந்த பினசும் சொதப்பிடாமல் வழக்கம் போல அமோக வருமானத்தை தரணும்! தர வைப்பேன்!

த்து வருஷம் பொறுத்தாச்சு... இனியும் பொறுக்க முடியாது. அப்பாவை வாலண்டியரா ரிட்டயர் ஆக வச்சு அந்த பதவிக்கு நாம வந்தே ஆகணும். வேணும்னா, நம்ம கட்சியோட மகளிர் அணித் தலைவியை கைய புடிச்சு இழுத்தாருன்னு புது பிரச்னையை கிளப்பி விட்டாவது அவரை ஓரங்கட்ட வைக்கணும்! இந்த ப்ளானுக்கு முதலில் அந்த தலைவியை சரிக்கட்டுற வேலையை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!

வீட்டு லோனு, நகை லோனு டூவீலர் லோனு, எஜுகேஷனல் லோனுன்னு எக்கச்சக்கமான லோனை வாங்கிப் போட்டுக்கிட்டு அதை கட்ட முடியாமல் லோ லோன்னு அலையற பொழப்பை இந்த வருஷமே மூட்டை கட்டியாகணும். நாலு பேங்க்ல விசாரிச்சாவது இந்த லோன்களையெல்லாம் கட்டி அடைக்கிறதுக்கு லோன் தருவாங்களான்னு விசாரிச்சு அதை வாங்கி அடைச்சே ஆகணும்!

தோ ஒரு ஆவேசத்துல புதுக் கட்சி புத்தியில்லாமல் தொடங்கிட்டோம்! நாம தான் அப்படின்னா, நம்மளை நம்பி வந்தவங்களுக்காவது அறிவு வேணாமா? பரவாயில்ல, ஆனது ஆச்சு, அப்படியே கோட்டையவோ செங்கோட்டையவோ பிடிக்கப்போற மாதிரி பீலா விட்டுக்கிட்டே, உசுப்பேத்திக்கிட்டே இந்த வருஷத்தையும் கடத்திட வேண்டியது தான்! ஆனால் இதுக்காக நம்ம் சொந்த பணத்தில் சல்லிக்காசைக்கூட செலவு பண்ணிடாமல் பக்குவமா இருந்துக்கணும்!

ம்ம சாதியை நம்பித்தான் நாம இருக்கோம்கறது உண்மைன்னாலும், நம்மள நம்பித்தான் நம்ம சாதி சனமே இருக்குங்கற மாதிரி பில்டப்பு கொடுத்தாகணும்! அடுத்த வருசமே தேர்தல் வரப்போறதால அதிகமா யோசிக்காமல், சட்டுபுட்டுன்னு இந்த வருஷமே ஒரு கட்சியை தொடங்கி கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இறங்கிடணும்! நம்ம கட்சிக்கு கொடி என்ன கலர்ல வைக்கிறதுங்கறது தான் இப்ப பிரச்னையே!

சுண்டல்காரன்ல இருந்து சேட்டுக்கடை வரை எல்லா இடத்திலும் கடன் வச்சாச்சு! இனியும் ஒரே நேரத்துல நாலு பிகரை லவ் பண்ணிகிட்டு திரியிற வேலையெல்லாம் வேலைக்காகாது! வீட்டுக்கு நல்ல பிள்ளையா, நீங்க பார்க்கற பொண்ணையே கட்டிக்கறேன்னு சரண்டர் ஆயிட வேண்டியதுதான்! அப்புறம் மாமனார் போட்ட மைனர் செயினை அடமானம் வச்சாவது அம்புட்டு கடனையும், பிகரையும் செட்டில் பண்ணிட்டு அட்டகத்தி ஹீரோ மாதிரி இந்த வருஷம் புது வாழ்க்கையை தொடங்கிட வேண்டியதுதான்!

கிழவி இந்த வருஷமாவது மண்டைய போட்டால் நிம்மதியா இருக்கும்! அந்த சீரியலில் இருக்குற கிழவியும் மண்டையப் போட மாட்டேங்கறா, நம்ம வீட்டுல இருக்குற கிழவியும் மண்டைய போட மாட்டேங்கறா. இந்த வருஷமாவது ரெண்டுல ஒண்ணு பார்த்துடணும்... அந்த சீரியலா இல்ல இதுவான்னு! சமயம் கிடைக்காமலா போகும்?!

டெய்லி விதவிதமா சிங்காரிக்கிறது என்ன, புசுபுசு முடியை ஆட்டிகிட்டு பந்தா பண்றது என்ன, வேளா வேளைக்கு வகைவகையா கொட்டிக்கிறதுன்னு என்னன்னு ராஜ வாழ்க்கையா வாழ்ந்துகிட்டிருக்குற?! 

இதுல ஆசைஆசையா அன்னைக்கு ஒருநாள் உன் சாப்பாட்டுல கொஞ்சத்தை டேஸ்ட் பண்ணலாம்னு வந்தால், விரோதியை கண்ட மாதிரி கத்தி கூப்பாடா போடுற? இருடி இரு, இந்த வருஷத்துல என்னைக்காவது காம்பவுண்டு சுவரைத் தாண்டி வராமலா போற? அன்னைக்கு நீ பஞ்சர் தான் மவனே! (யார் யாரோ புத்தாண்டு சபதம் எடுக்குறப்ப, தெரு நாயி சபதம் எடுக்கக்கூடாதா பாஸ்?!) 

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஒவ்வொரு வருஷமும் புத்தாண்டு சபதம் எடுத்துட்டு அதில் ஒன்றைக்கூட நிறைவேத்தாதவங்க, ஏற்கனவே எடுத்த சபதத்தையே கன்டினியூ பண்றது பெட்டர்! :)


No comments:

Post a Comment