சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Dec 2014

சட்டையை கழற்றி சுழற்றிய கங்குலி, ஷாம்பெயின் கேட்டு குடித்த சச்சின்! (சுயசரிதை பாகம்-2)


ச்சின் டெண்டுல்கர் சுயசரிதையான 'பிளேயிங் இட் மை வே' அறிமுகத்தின் இரண்டாம் பாகம் இது. இதில் முதல் முறை கேப்டன் ஆனது முதல் நாட்வெஸ்ட் தொடர் வெற்றி வரை அடக்கம்:

மேற்கு மண்டலம், மும்பை அணி ஆகியவற்றுக்கு ஏற்கனவே கேப்டனாக இருந்தபடியால், சச்சினுக்குக் கேப்டன் பொறுப்பு என்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்திய அணியின் தலைமைப்பொறுப்பு வித்தியாசமானது. கேப்டனின் ஒவ்வொரு நகர்வும் தலைப்புச்செய்தி ஆனது ஒருபுறம் என்றால், ஐந்து மண்டலங்களில் இருந்தும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இருந்தபடியால், தான் விரும்பிய அணி கிடைக்காமல் சச்சின் திண்டாடிய தருணங்கள் சில உண்டு.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளைத் தோற்கடித்து டைட்டன் கோப்பையைத் தூக்குவதில் சச்சினின் கணக்குத் துவங்கியது. அதிலும் இறுதிப்போட்டியில் 220 ரன்களைச் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்க அணியைக் கட்டுப்படுத்த ராபின் சிங்கை ஐந்தாவது பந்து வீச்சாளராக ஆக்கி ஸ்டம்ப்பை நோக்கி மட்டுமே பந்தை வீசச்செய்து சிங்கிள்களைத் தடுத்து வெற்றிக்கனியை பறித்தார் சச்சின்.
முதல் டெஸ்ட் போட்டியில், 170 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு அகமதாபாத்தில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஸ்பின்னர்களைக் கொண்டு தாக்குவார் என்கிற யூகத்தைப் பொய்யாக்கி, சுனில் ஜோஷியை ரன் எடுக்காத மாதிரி பந்து வீசச் செய்தார். இன்னொரு புறம் மற்றுமொரு மித வேகப்பந்து வீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத் பந்தை துல்லியமாக வீசி விக்கெட்டுகளைக் கழட்டினார். அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே அவரின் தலைமையின் உச்சப்புள்ளி. அதற்குப் பின்னர் நடந்தவை எல்லாம் பெரும்பாலும் சறுக்கல்களே.

மூணுல டிராவிட், அஞ்சுல கங்குலி - அமோகமான திட்டம்

கங்குலி அடித்து ஆடுகிற பண்பு கொண்டவர் என்பது மற்றும் டிராவிட் எப்பொழுதும் நிதானமான ஆட்டத்தை ஆடுவதோடு, பெரும்பாலும் ஆப் ஸ்டம்புக்கு போகும் பந்துகளை ஆரம்பத்தில் விட்டு ஆடும் பாணி கொண்டவர் என்பதால் அவர்களை முறையே ஐந்து மற்றும் மூன்றாம் இடத்தில் ஆடவைக்கும் பாணியை முதன்முதலில் துவங்கி வைத்தவர் சச்சினே. அடுத்த டெஸ்ட்டை தோற்றாலும், இறுதி டெஸ்டில் அஸார் சிறப்பாக ஆட அணி தொடரை வென்றது. 

தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு அடுத்து இந்தியா கிளம்பியது. அங்கே இருந்த சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள அணியினர் திணறினார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் டர்பனில் 66 ரன்களுக்கு அணி சுருண்டது. இரண்டாவது டெஸ்டில் கடுமையாகப் பயிற்சி செய்து சதமடித்த சச்சினை நேருக்கு நேராக எதிர்கொள்ளாமல் இன்னொரு புறம் ஆடிக்கொண்டிருந்த டோட்டா கணேஷ் என்கிற வீரரை ஆலன் டொனால்ட் வசைபாடிக்கொண்டே இருந்தார். ஆனால், கணேஷ் எந்த ரியாக் ஷனும் கொடுக்கவே இல்லை. சச்சின் ஆலனிடம், "அவரின் தாய்மொழி கன்னடா. நான் பேசுவதே அவருக்குப் புரியாது. நீங்கள் அவரைத்திட்டுவதைக் கன்னடத்தில் செய்தால் அவர் பதில் தருவார்" என்றார் கூலாக. இறுதி டெஸ்டில் டிராவிட், கங்குலி கலக்கி எடுக்க அணி வெற்றியின் விளிம்புக்கு வந்தபோது மழை வந்து கெடுத்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு டெஸ்ட் தொடரில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைச் சச்சின் கேட்டும் தேர்வுக்குழு உதட்டை பிதுக்கியது. ஜவகல் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆரம்பத்தில் விக்கெட்கள் எடுத்தாலும் அதற்குப் பின் பாடு திண்டாட்டம் ஆனது. இரண்டு போட்டிகளை டிரா செய்த நிலையில் மூன்றாவது போட்டியில் 120 ரன்கள் வெற்றிக்கு போதும் என்கிற சூழலில் அணி 81 ரன்னுக்கு அவுட்டாகியது. கேவலமாக 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. லக்ஷ்மனைத் தவிர யாரும் இரட்டை இலக்க ஸ்கோரை அடையவில்லை. சச்சினை நோக்கி விரல்கள் நீண்டன. அதற்கடுத்த ஒருநாள் போட்டித்தொடரையும் அணி இழந்தது. நல்ல அடித்தளம் அமைக்கப்பட்ட பிறகு கீழ் ஆர்டர் பேட்ஸ்மான்களை தூக்கி அடிக்காமல் சச்சின் ஆடச்சொல்லியும் அவர்கள் கேட்காமல் போய்த் தோல்வி வந்து சேர்ந்தது.

தொடர்ந்த தோல்விகள்... துவண்ட சச்சின்பாகிஸ்தானுடன் ஒரு தொடரை வென்றபோதும், இந்தியாவில் நடந்த தொடரில் தோற்றதோடு, இலங்கையுடனான தொடரை டிரா செய்தார்கள். மீண்டும் இலங்கை அணியை இந்தியாவில் சந்தித்தபோது முதல் இரு போட்டிகளில் சச்சின் சரியாக ஆடவில்லை, அணியும் சொதப்பிக் கொண்டிருந்தது.
நள்ளிரவில் மும்பையின் நெடுஞ்சாலையில் நண்பருடன் மில்க்ஷேக் சாப்பிட்டு மனதை திடப்படுத்திக் கொண்டு சச்சின் சதமடித்தும் அணி தோற்றது. நான்கு நாடுகள் தொடரில் எல்லாப் போட்டிகளிலும் அணி தோற்றது. அடுத்துப் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சச்சினை நான்காவது வீரராகத் தேர்வுக்குழு களமிறங்க சொல்லியிருந்தது. ராபின் சிங்கை சேஸ் செய்ய முன்னதாகச் சச்சின் அனுப்பி வைத்தார். அவர் டக் அவுட்டாகி வந்தது சச்சின் மீது விமர்சனத்தைக் கிளப்பியது. அதே ராபின் பாகிஸ்தான் அணியுடன் அதே வருடம் நடந்த போட்டியில் அஸாரூதினால் இதே மாதிரி களமிறக்கப்பட்டபோது அடித்துத் தூள் கிளப்பினார்.

சொல்லாமல் பறிக்கப்பட்ட கேப்டன் பதவி
மீண்டும் இலங்கையுடன் நடந்த தொடரில் ஒரு டெஸ்டில் வென்று, இறுதி டெஸ்டில் தோற்றதும் சச்சினிடம் எந்த முன் அறிவிப்பும் சொல்லாமல் கேப்டன் பதவியை விட்டு தூக்கினார்கள். செய்திகளின் மூலமே அந்த விஷயத்தைச் சச்சின் தெரிந்து கொண்டார். இப்படித் தனக்குள் சொல்லிக்கொண்டார். "என்னுடைய கேப்டன் பதவியைத் தான் நீங்கள் பறிக்க முடியும். எனக்குள் இருக்கும் கிரிக்கெட்டை அல்ல". நார்மலாகக் கூலாக இருக்கும் சச்சின், கேப்டன் பதவி இழந்த பின்பு சைட்ஸ்க்ரீன் சிக்கலால் அவுட்டானபோது தெரியாமல் வங்கதேச கிரிக்கெட் போர்ட் தலைவரை நோக்கி கத்தினார். பின்னர் அவர்கள் தோஸ்த் ஆகிவிட்டார்கள் என்பது தனிக்கதை.

வந்தாரு வார்னே! வெளுத்தாரு வீரன் 
1998இல் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தது. ஷேன் வார்னே சிறப்பான ஆயுதங்களோடு வருவார் என்று சச்சினுக்குத் தெரியும். ஷேன் வார்னேவுக்குப் பந்தை கூடுதலாகச் சுழற்றுவதால் அது மிதந்து சென்று பேட்ஸ்மேன் தொடமுடியாத அளவுக்கு விலகிச்செல்கிறது என்பதைச் சச்சின் உணர்ந்தார். ஆகவே, லெக் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே நின்றுகொண்டு பந்துகளை எதிர்கொள்வது என்று முடிவு செய்தார். கிரீஸை விட்டு பெரும்பாலும் வெளியேறாமல் ஆடுவது, லெக் ஸ்டம்ப் அல்லது அதற்கு வெளியே பந்து வீச முயன்றால் மிட்விக்கெட் நோக்கி நேராகப் பேட்டை பயன்படுத்தி அடிப்பதை சச்சின் முடிவு செய்தார்.

இதனால் பந்து எட்ஜ் வாங்க வாய்ப்பு இருந்தாலும் அடித்து ஆடுவது என்று களம் புகுந்தார். பயிற்சி போட்டியில் லெக் ஸ்டம் பகுதிக்கு வெளியே பந்து வீசாததைக் கவனித்துக்கொண்டார். சென்னை டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வார்னேவிடம் நான்கு ரன்னில் ஸ்லிப் கேட்ச் ஆகி சச்சின் அவுட் ஆனார். எதிரணி 71 ரன்கள் முன்னிலை பெற்றது. வெங்கட்ராகவன் இந்தியா அம்பேல் என்று கணித்து வீரர்களிடம் சொன்னார். ஒவ்வொரு வீரரும் 75 ரன்கள் அடிக்க வேண்டும் என்று சச்சின் இலக்கை சொன்னார். ஆனால், அவர் வரும்போது முன்னிலை 44 ரன்கள் மட்டுமே. வார்னேவை கிழித்துத் தொங்க விட்டார் சச்சின். 155 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறவைத்தார்.
அடுத்த டெஸ்டில் வார்னேவை விக்கெட்டே எடுக்காமல் 147 ரன்கள் விட்டுக்கொடுக்க வைத்தார்கள். எந்த அளவுக்கு வெறிகொண்டு சச்சின் அடித்தார் என்றால் தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் தடுப்பாட்டம் ஆடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவர், வார்னேவை ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது என்கிற எண்ணத்தில் அந்த ஓவரில் நினைவேயில்லாமல் சிக்சர் அடித்தார். அடுத்த டெஸ்டில் அணி தோற்றாலும் தொடர் இந்தியா வசம் வந்தது. சச்சினின் சராசரி 111!

சைலன்ஸ் பாஸ்! ஸ்டீவ் ஆடுறார்
ஸ்டீவ் வாக் உடன் சச்சினின் உறவு வெகு வேடிக்கையானதாக இருந்தது என்பதை நூலை வாசிக்கிற பொழுது தெரிகிறது. ஸ்டீவ் வாக் எதிரணி தீவிரமாகத் தாக்கும்போது இன்னமும் பலமாக ஆடுவார் என்பதால் அவரை மனதளவில் பாதிக்க அவர் ஆடும் போது இந்திய அணியில் ஒருவரும் பேசாமல் இருந்து அவரைச் சீக்கிரமாக அவுட் ஆக்கும் பாணியைப் பின்பற்றி இருக்கிறார்கள். பெப்சி கோப்பையின் போட்டியில் சச்சின் ஸ்டீவ் வாக்கை அவுட்டாக்கி அணியை வெற்றியை நோக்கி திருப்பினார். "என் பந்துகளை எதிர்கொள்ள ஸ்டீவ் திணறுகிறார் என்றே எண்ணுகிறேன். இதே மாதிரியான அனுபவம் எனக்கு ஹன்சி க்ரோன்ஜேவிடம் ஏற்பட்டது" என்று எழுதுகிறார் சச்சின்.

கோககோலா கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தேர்வாக வேண்டிய முக்கியமான போட்டியில் இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 138 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மணல் புயல் தாக்கியபடியால் சச்சின் திடகாத்திரமான ஆடம் கில்கிரிஸ்ட் பின்னால் ஒளிந்து கொண்டார். அதற்குப் பின் வெறும் 13 ஓவரில் 130 ரன்கள் என்று இலக்குச் சொல்லப்பட்டது. 100 ரன்கள் அடித்தால் தகுதி பெற்றுவிடும் அணி என்றார்கள். சச்சின் 130 ரன் இலக்கு என்று களம் புகுந்து மணல் புயல் போல ஆடினார். அம்பையர் தவறாக அவுட் கொடுத்து அனுப்பியும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. 272 ரன்கள் இலக்காக வந்தது. முதல் ஓவரில் சச்சின் 5 பந்துகளைத் தடுத்து ஆடினார். முதல் 5 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தன. அடுத்த ஓவரில் பவுண்டரி அடுத்து வந்த பவுன்சரில் சிக்சர் என்று சச்சின் ஆரம்பித்து வைத்தார். வார்னே, டாம் மூடி என்று போட்டவர்கள் பந்தெல்லாம் எல்லைக்கோட்டை மட்டுமே எட்டின. அணி கோககோலா கோப்பையை வென்றது. சச்சினின் 25 வது பிறந்தநாள் அன்று. ஒலங்கா ஒரு ஷார்ட் பந்தால் சச்சினை அவுட்டாக்க அடுத்தப் போட்டியில் கண்ணை மூடிக்கொண்டு சுற்றி சதம் அடித்தபோது தான் தனக்குத் தூக்கம் வந்தது என்கிறார் சச்சின். 

தரையில் படுத்து மகளை ஏந்திய தகப்பன் சச்சின்
டான் பிராட்மனை அவரின் அழைப்பின் பெயரில் வார்னே மற்றும் சச்சின் சந்தித்தபோது, "இன்றைய பீல்டிங் தரத்தில் நான் அவ்வளவு ரன்கள் அடிக்க முடியாது. ஆனாலும், இந்த வயதில் ஆடினால் ஒரு 70 என்கிற சராசரியை தொடுவேன்" என்று எண்ணுகிறேன் என்றாராம் பிராட்மன்.

சச்சினின் முதல் குழந்தை சாரா பிறந்தபோது மனைவியுடன் அதே அறையில் இருக்க வேண்டும் என்று சச்சின் கேட்டார். படுக்கை கிடையாது என்றவுடன் ஒரு விரிப்பை வாங்கிக்கொண்டு தன் மகளைத் தொட்டு சிலிர்த்தார் அவர். தன் இரு குழந்தைகள் பிறந்து அவரின் கைக்குக் கொண்டுவரப்பட்ட கணங்களை வீடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறார் சச்சின். 1999 இல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு நான்காவது இன்னிங்சில் 271 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. 6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்கள் விழுந்திருந்தன.
 

வலியோடு போராடிய சென்னை டெஸ்ட் 
சச்சின் வந்ததும் இரண்டு பவுன்சர்கள் அவரை வரவேற்றன. வக்கார் சச்சின் அவற்றைத் தொடாமல் போனதும், "பந்து உன் கண்ணுக்குத் தெரிகிறதா?" என்று கேட்டார். சச்சின் கூர்மையாக அவரைப் பார்த்தார். 20 ரன்களோடு அன்றைய பொழுது முடிந்தது. டிராவிட், நயன் மோங்கியா என்று எதிர்முனையில் ஓரளவுக்குக் கிடைத்த ஆதரவோடு சச்சின் 136 ரன்களை அடைந்தார். இதற்கு நடுவே முதுகு வலி அவரைப் பாடாய்ப் படுத்தியது. தேநீர் இடைவெளியில் முதுகு முழுக்கப் பனிக்கட்டிகளை வைத்து வலியை குறைத்துக்கொண்டு மீண்டும் ஆடவந்து வலி தாங்காமல் வேகமாக ஆட்டத்தை முடிக்கப்போய்க் கேட்ச் ஆனார். அணி 17 ரன்களை வெற்றிக்குப் பெறவேண்டும் என்கிற புள்ளியில் நான்கு விக்கெட்கள் இருந்தும் தோற்றது. சச்சின் மனதளவில் மற்றும் உடளவில் சோர்ந்து போயிருந்தார். அவர் தானாக நேரில் போய் வாங்கிக்கொள்ளாத ஒரே ஆட்ட நாயகன் விருது அது என்பதிலேயே எவ்வளவு அவர் காயப்பட்டுப் போனார் என்று உணரலாம்.
பாகிஸ்தான் அணியுடன் ஆசிய டெஸ்ட் சாம்பியன் போட்டியில் விளையாடியபோது 3வது ரன்னுக்கு ஓடிவரும்போது பாதையில் அக்தர் நிற்க ஓடுவது தாமதமாக அக்ரம் சச்சினை ரன் அவுட் ஆக்கினார். அதற்கு அப்பீல் செய்து அக்ரம் வென்றார். ஈடன் கார்டன் ரசிகர்கள் கொதித்தார்கள். இந்தப் பண்பற்ற செயலால் மனம் புண்பட்டாலும் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களைத் தானே நேரில் தோன்றி சமாதானம் செய்தார். "அக்தர் வேண்டும் என்று நிற்கவில்லை என்றே நான் நம்புகிறேன். அதே சமயம் அக்ரம் அப்பீலுக்குப் போயிருக்க வேண்டியதில்லை" என்பது அவரின் வாக்குமூலம். 

அப்பாவுக்காக இந்த சதம் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த தந்தைக்காக மது அருந்த சச்சின் அவரின் இறுதிக்காலத்தில் கம்பெனி கொடுத்தார். அவர் இறந்தபோது அப்பாவின் அம்மா அருகில் இருந்தபடியால் அவரை ஆறுதல் படுத்தி மவுனம் காத்தார். வெகுநாட்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கண்ணீர் வடிந்த, சிவந்த தன் முகத்தை மறைத்துக்கொண்டு உலகக்கோப்பையில் அடித்த சதம் அப்பாவுக்குச் சமர்ப்பணம் ஆனது.

மீண்டும் அணியின் கேப்டனாக ஆனார் சச்சின். அவர் அதற்குத் தயக்கம் தெரிவித்தாலும் தேர்வுக்குழு சச்சினோடு பேசிய அஜித் வடேகரோடு கலந்தாலோசித்து அந்த முடிவை எடுத்தது. அப்போது சச்சினின் மகன் அர்ஜூன் பிறந்திருந்தான். அந்தச் சுட்டி சச்சின் வெளிநாடுகளில் ஆடும் பொழுது போனில் பேசவே மாட்டானாம். சச்சின் வீட்டுக்கு வந்தால் மூன்று நாட்களுக்கு அவருடன் சுற்றி அந்த டூவை பழமாக மாற்றிக்கொள்வார் ஜூனியர் சச்சின்.

கேப்டனான முதல் போட்டியில் அணி 83 ரன்களுக்கு டோனி நாஷின் பந்த் வீச்சில் சுருண்டு சொதப்பியது. அதற்கு ஈடுகட்டும் வகையில் இரண்டாவது இன்னிங்ஸில் அணி 500 ரன்கள் அடித்தது. அதில் டிராவிட், சச்சின் கலக்கினார்கள். அவர்கள் ஒரு சாதுரியமான செயல் புரிந்தார்கள். கிறிஸ் கெயின்ஸ் அபாரமாகப் பந்து வீசிக்கொண்டு இருந்தார். பந்தின் ஷைன் வெளிப்பக்கம் இருந்தால் பந்து பேட்ஸ்மேனுக்கு வெளிப்பக்கமும், அது உள்பக்கம் இருந்தால் பந்து ஆடுபவரை நோக்கியும் வரும் என்பது பாலபாடம்.


கூட்டணி போட்டு ஏமாற்றிய சச்சின்-டிராவிட்
கிறிஸ் பந்தின் ஷைன் தெரியாமல் கையால் மறைத்து வீசிக்கொண்டிருந்தார். ஆகவே, நான்- ஸ்ட்ரைக்கராக நிற்கும் சச்சினோ, டிராவிடோ பந்து வெளியே போகும் என்றால் இடது கையில் பேட்டையும், உள்ளே வரும் என்றால் வலது கையிலும், சரியாகச் சொல்ல முடியாவிட்டால் இரண்டு கையிலும் பேட்டை பிடித்துக்கொள்வது என்று சிக்னல் வைத்துக்கொண்டார்கள். அப்படியே செய்து அவரைக் காயவிட்டார்கள். இவர்கள் எதோ சூழ்ச்சி செய்கிறார்கள் என்று உணர்ந்த கிறிஸ் பந்தை மாற்றி டிராவிடுக்கு வீசிவிட்டுச் சச்சினை நோக்கி திரும்பினார். ஏற்கனவே சிக்னல் கொடுத்துவிட்டு சச்சின் நல்ல பிள்ளையாக அமைதி காத்தார்.

இரண்டாவது முறை கேப்டனாக இருந்த காலத்தில் கபில் தேவ் அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவர் அணியை நடத்துவது கேப்டனின் வேலை என்று முக்கியமான முடிவுகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார் என்று ஒரு வரியில் சச்சின் சொல்லிவிட்டு கடந்து போகிறார். அதே சமயம் அதற்கு முன்னால் இந்தியா கண்ட மிகச்சிறந்த வீரர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களில் அவர் முதன்மையானவர் என்று சொல்லிவிட்டே இந்த வருத்தத்தைப் பதிகிறார். 

தேடிவந்த கேப்டன் பதவி, தெறித்து மறுத்த சச்சின்
ஆஸ்திரேலியா தொடரை அணியின் மோசமான ஆட்டம், தன்னுடைய தவறான அவுட்கள் மற்றும் ஆட்டம் ஆகியவற்றால் இழந்த பின்பு வென்றிருக்க வேண்டிய போட்டிகளில் அவரின் அறிவுரையை மீறி தங்களுக்குத் தோன்றியதை செய்த வீரர்கள் எல்லாமும் சேர்ந்து தோல்விகளைப் பரிசளிக்க (உதாரணமாக 195 ரன்களைச் சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 71/6 என்ற நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் இறுதியில் வென்றது. மிதவேகப்பந்து வீச்சாளர்களைத் தன்னிடம் கேட்காமல் மெதுவான பந்தை வீசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டும் அதைச் செய்து பீல்டர்கள் இல்லாத பவுண்டரி அடிக்கவிட்டு வெற்றியை கோட்டைவிட்டார்கள்).

கங்குலியிடம் பதவியைக் கொடுக்கச் சொல்லி சச்சின் சொன்னார். டிராவிட் பதவியை விட்டு விலகியதும், அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றதும் பதவி வந்த பொழுதும் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த சச்சின் அப்பொறுப்பை தோனிக்கு வழங்கச் செய்தார்.
 

தான் கண்ட கேப்டன்களில் சிறந்தவர் நாசர் ஹூசைன். ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் அணியை மீட்டெடுப்பதில் ஈடுபட்டிருக்கும் மைக்கேல் கிளார்க் சிறந்தவர் என்று பதிகிறார். முதல்முறை கேப்டனாக இருந்த பொழுது ஒவ்வொரு தொடரில் ஒரு தோல்வி ஏற்பட்டாலும் தன்னுடைய பதவி ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டது என்றும், ஒழுங்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் பதிகிறார். தன்னுடைய மகனிடம் ஏழு வயது வரை கிரிக்கெட் பற்றிப் பேசியதில்லை என்றும், உலகக்கோப்பையில் அவுட் ஆகி அணி தோற்க தானும் காரணமான பொழுது வகுப்பில் யாரேனும் வம்புக்கு இழுத்தால் அமைதியாக இரு; "அடுத்த முறை நன்றாக ஆடி வெற்றிவாகை சூடித்தருவார் என் அப்பா என்று சொல்" என்று மகனிடம் சொல்லியும் வம்புக்கு இழுத்த நண்பனின் முகத்தில் பன்ச் விட்டதை வருத்தத்தோடு பதிகிறார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு டெஸ்ட் ஆடவந்தபோது முதல் போட்டியில் தான் மெக்ராத் மற்றும் கில்லஸ்பியை டிராவிட் பிரித்துக்கொண்டு ஆடி தண்ணி காட்டியதை பதிகிறார். பதினைந்து யார்ட்கள் ஓடிப்போய்ச் சச்சினின் கேட்ச்சை ரிக்கி எடுக்க ஆஸ்திரேலிய ஒரே ஒரு போட்டியில் வென்றால் உலகச் சாதனை புரிய காத்திருந்தது. டிராவிட் மற்றும் லக்ஷ்மண் கொல்கத்தாவில் மோசமான முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்துக்குப் பிறகு அற்புதமாக அணியை மீட்க ஆஸ்திரேலியா அணி சேஸ் செய்ய வந்தது. தேநீர் இடைவெளியின் போது நான்காம் நாளில் மூன்றே விக்கெட்கள் போயிருக்கக் சச்சினிடம் பந்து தரப்பட்டது. கில்கிறிஸ்ட், ஹெய்டன் அவுட்டாக்கிய சச்சின் கூக்ளியை வார்னேவுக்குப் போடப்போய் அது நடுப் பிட்ச்சில் தவறிக்குத்தி வார்னேவை குழப்பி அவரை வீழ்த்தியது.

ஸ்டீவ் வாக் அடுத்த டெஸ்ட் போட்டியில் நன்றாக ஆடிக்கொண்டிருந்தபோது சில வார்த்தைகளைச் சொல்லி கவனத்தைத் திருப்பினார். ஒரு பந்தில் அடித்துவிட்ட ரன் ஓடிய ஸ்டீவ் வாக்கை நோக்கி பயந்து அந்தப் பக்கம் போகிறீர்களே என்கிற தொனியில் சச்சின் கிண்டலடிக்க வாக் கோபமுற ஆரம்பித்தார். ஹர்பஜன் வீசிய பந்து அவர் காலில் பட எல்பிடபிள்யூ  அப்பீலை ஹர்பஜன் செய்யக் கவனம் சிதறியிருந்த ஸ்டீவ் வாக் பந்தைக் கையால் தொட்டு நகர்த்தினார். பந்தை கையாண்ட குற்றத்தை சொல்லி அவரை அவுட்டாக்கினார்கள். அந்தப் போட்டியில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்பஜன் மற்றும் சமீர் திகே அணி வெற்றி பெறுவதைத் திக் திக் தருணங்களோடு உறுதி செய்தார்கள். உலகச் சாம்பியனை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி சாதித்த இந்திய அணிஅடுத்து நடந்த ஒருநாள் போட்டித்தொடரில் ஸ்டீவ் வாக் வந்தபோது மிட்விக்கெட் பீல்டரிடம் இங்குத் தான் ஸ்டீவ் வாக்கை நான் அவுட் ஆக்கி காண்பிப்பேன் என்று சச்சின் சவால் விட, "இது ஒன்றும் உன்னுடைய தோட்டமில்லை தம்பி" என்று வாக் பதில் சொன்னாலும் அவரின் பந்து வீச்சில் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஸ்டீவ் வாக்.

பெருவிரலில் மேற்கிந்திய தொடரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்தபோது ரன் ஓடுகையில் க்ளிக் என்று சத்தம் கேட்க சச்சின் கவலைப்படாமல் ஆடிய பின்னர்ப் பிஸியோவிடம் காலை காண்பித்தார். அப்பகுதி உடைந்திருந்தாலும் அங்கே சுற்றிக்கொண்டு இறுதிப்போட்டியில் ஆடும்வரை என் காலின் நிலவரம் என்னவென்று சொல்லவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார் சச்சின். அங்கே டக் அவுட் ஆனார். SESAMOID எலும்பு சேதமாகி இருந்ததால் அறுவை சிகிச்சை தேவை என்றார்கள், ஆனால், அது கிரிக்கெட் வாழ்க்கையையே பாதிக்கும் என்கிற சூழலில் டொலக்கியா என்கிற மருத்துவர் சச்சினை மீட்டார்.

சேதப்படுத்திய பந்து என்று சேதாரம் செய்யப் பார்த்த குற்றச்சாட்டு

தென் ஆப்ரிக்க அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொண்டபோது மகாயா நிட்டினி ஷார்ட் லென்த்தில் பந்தை ஆடுபவரை நோக்கி கொண்டுவரும் வேகத்தைக் கணித்து ஸ்லிப்பில் UPPER CUT ஆடும் பாணியைத் துவங்கினார். அது பவுண்டரி, சிக்ஸர் என்று பறந்து 155 ரன்களைப் பெற்றுத்தந்தது. பந்திலிருந்த புல்லை நீக்க போய்ப் பந்தை சேதப்படுத்தியதாக மற்றும் அணியினர் ஆக்ரோஷமாக அப்பீல் செய்ததாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அபாண்டமாக மைக் டென்னிஸ் கள நடுவர்கள் கூட அப்பீல் செய்யாத போது வைத்ததாகவும், .சி.சி. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போனாலும் தென் ஆப்பிரிகா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்கள் அவரை அடுத்தப் போட்டிக்கு நடுவராக இருக்கவிடவில்லை. .சி.சி. அப்படி நடந்த டெஸ்ட் போட்டி செல்லாது என்று அறிவித்தது. இப்படியொரு குற்றச்சாட்டை ஏன் அவர் விசாரிக்காமல் வைத்தார் என்பது புரியவேயில்லை. அதைத் தவிர்த்திருக்கலாம், இத்தனை கசப்பு உண்டாகியிருக்கிறது என்கிறார் சச்சின்.

இங்கிலாந்துடன் அடுத்து வந்த தொடரில் லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்தை வீசியும், விக்கெட்டை சுற்றி பந்தை செலுத்தியும் கைல்சை கொண்டு சச்சினை சாய்க்க நாசர் ஹூசைன் திட்டமிட்டார். சச்சின் முதலில் ஸ்டம்ப் ஆனாலும், அடுத்தடுத்து 76, 88, 103, 90 என்று அடித்துக் கலக்கினார். ஹாரி ராம்ஸ்டன் என்கிற ஹோட்டலில் பெரிய மீன், ப்ரெட், சிப்ஸ், வெண்ணெய் ஆகியவற்றை ஒரே மூச்சில் சாப்பிடுபவருக்குத் தலைமை செப்பே சான்றிதழில் ஹாரிஸ் செலஞ்ச் வெற்றியாளர் என்று கையெழுத்திடுவது வழக்கம். சச்சின் சிப்ஸை தவிர மற்ற அனைத்தையும் தின்று முடிக்கச் செப் கையெழுத்து போட்டுத் தந்திருக்கிறார்.

பிளின்ட்டாப் பந்து வீச்சை அடுத்த ஹெடிங்லி போட்டியில் தானே சமாளித்துக் கங்குலியை சச்சின் காப்பாற்ற, "நாம் ஒருவழியாகப் பிளின்டாப்பை சமாளித்தோம்" என்று கங்குலி சொல்ல, "ஆமாம்! நீ மட்டும் தான் சமாளித்தாய்" என்று சச்சின் சொல்ல ஒரே புன்னகை ட்ரஸ்ஸிங் அறையில். 

வீசுபவனின் விரலில் இருக்கிறது வித்தை
ஒவ்வொரு பந்து வீச்சாளரையும் எப்படிக் கணித்து வைத்திருந்தார் என்று எடுத்து வைக்கிறார். பழைய பந்தை சாய்வாக ஹில்பெனாஸ் போடவந்தால் அது பவுன்சர், பந்து வீசும் கரத்தை இருமுறை ஸ்விங் செய்து அக்தர் வீசினால் அது கூடுதல் வேகத்தோடு வரப்போகும் பந்து, முரளிதரனின் கடடைவிரல் மேலே இருந்தால் அது தூஸ்ரா பந்து! பிற்காலத்தில் ஹர்பஜன் எப்படி தூஸ்ரா வீசுவது என்று முரளிதரனிடம் கேட்டபோது சச்சின முன்னமே கணித்தது சரியாக இருந்தது!

சச்சினை சிரமப்படுத்திய பந்துவீச்சாளர்கள் என்று வரும் பெயர்கள் இரண்டும் அதிகம் அறிமுகமில்லாத நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளின் பந்து வீச்சாளர்கள் பெயர்களை நூலில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஏன் தொல்லை கொடுத்தார்கள் என்பதும் சுவையான அம்சம். 
 

கூச்சமா இருக்கே-கங்குலி
நாட்வெஸ்ட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுவிடும் என்கிற சூழலில் அவர்கள் ஷேம்பெயின் பாட்டில்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்திய அணி வென்றதும் அந்தப் பாட்டில்களைக் கேட்டு அனுப்பி சச்சின் உட்பட எல்லாரும் குடித்துத் தீர்த்திருக்கிறார்கள். அதே போல அன்று சட்டையைக் கங்குலி கழட்டி, சுழற்றி கலக்கினாலும் அதைப்பற்றி எப்பொழுது சச்சின் அவரிடம் பேச முயன்றாலும் கங்குலி கூச்சப்பட்டே விலகுவாராம்.




No comments:

Post a Comment