சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 துலாம்

ல்லோருக்கும் நல்லவர்களாகத் திகழும் துலாம் ராசிக்காரர்களே,
16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான், உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.

உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2ம் வீட்டுக்கு வந்து அமர்வதால், இனி உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவார்கள்.
என்றாலும், பாதச்சனியாக வருவதால், வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிலும் உணர்ச்சிவசப்படாமல், அறிவுபூர்வமான அணுகுவது நல்லது.  எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதிசஷ்டமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம் 2ம் வீட்டில் சனி செல்வதால்,  எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், இந்தக் காலகட்டத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.15 முதல் 29.04.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், குடும்ப வருமானம் உயரும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால், நம்பிக்கையின்மை, பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் பாக்யாதிபதியும், விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பணம் வரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகிச் செல்வதால், மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சனிபகவான் 4ம் வீட்டைப் பார்ப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் செய்யவேண்டி வரலாம். 8ம் வீட்டைப் பார்ப்பதால், வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். லாப வீட்டைப் பார்ப்பதால், திடீர் செல்வம், செல்வாக்கு கூடும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  

வியாபாரத்தில், கணிசமான லாபம் கிடைக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். கடையை விரிவுபடுத்தவோ, புதிய இடத்துக்கு மாற்றவோ செய்வீர்கள். ஸ்டேஷனரி, ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பா். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும்.
கன்னிப்பெண்களே! பாதச் சனி தொடர்வதால், எல்லோரையும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். திருமணம் நிச்சயமாகும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள், மொழி அறிவை வளர்த்துக்கொள்வார்கள். பேருந்து பயணம், விளையாட்டில் கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, முடங்கிக் கிடந்த உங்களை முடுக்கிவிடுவதுடன் செல்வம்  செல்வாக்கையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம்  திருபுவனத்தில் அருளும் கம்பகரேஸ்வரரையும் சரபேஸ்வரரையும் அஷ்டமி திதி அல்லது சனிக்கிழமைகளில் தரிசித்து வாருங்கள். அநாதைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்.No comments:

Post a Comment