சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மகரம்

போராடி ஜெயிக்கும் மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதன் சனிபகவான், 16.12.14 முதல் 17.12.17 வரை, லாப வீட்டில் அமர்வதால், உங்கள் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.
கடினமான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். வருமானம் உயரும். கணவன்மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சேமிக்கத் துவங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில் 11ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீடான துலாம் ராசி விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், புது பொறுப்புகள், தேடி வரும். எனினும் உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால், குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று திரும்பக் கிடைக்கும்.
உங்கள் ராசிநாதன் சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், நீண்ட ஆசைகள் நிறைவேறும்.
15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், விரயம் உண்டு. ஆனால் உங்கள் வளர்ச்சி தடைப்படாது.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சஷ்டம பாக்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், இழுபறியான வேலைகள் அனைத்தும் இனி தடையின்றி முடியும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.  
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் நண்பர்கள், உறவினர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.  
சனி ராசியைப் பார்ப்பதால் ஒருவித படபடப்பு, பதற்றம் வந்து நீங்கும். சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் கல்வி, திருமணம் விஷயங்களில் சிற்சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பூர்வீகச் சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். சனிபகவான் 8ம் வீட்டைப் பார்ப்பதால் வாகனத்தில் செல்லும்போதும், சாலைகளைக் கடக்கும்போதும் கவனம் தேவை. அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும்.            
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். தொந்தரவு தந்த உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.  
கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைவார். தடைப்பட்ட கல்வியில் வெற்றியுண்டு. பெற்றோரின் ஆலோசனையை ஏற்றுச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு படிப்பு மேம்படும்.எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர் கல்வியைத் தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு, பாராட்டு உண்டு.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீரைப்போல், உங்களின் செயல் வேகத்தை அதிகரிப்பதுடன், பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சதுர்த்தி தினங்களில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள். பிள்ளைகள் இல்லாத முதியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.No comments:

Post a Comment