சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Dec 2014

தொழில்முனைவோர் வெற்றிக்கான பாடங்கள்!

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது டெரிக் சிவர்ஸ்  எழுதிய 'எனிதிங் யு வான்ட்என்கிற புத்தகத்தை. தொழில் முனைவோர்களுக்குப் பயன்படும் நாற்பது பாடங்களை இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் டெரிக் சிவர்ஸ்.  ஒரே ஒருமுறை கிடைத்துள்ள இந்தப் பிறவியில் நினைத்தது அனைத்தையும் பெற என்ன செய்யவேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

பெரும்பாலான மனிதர்கள் எதற்காக அவர்கள் ஒரு தொழிலை செய்கிறார்கள் என்பது தெரியாமலே செய்கிறார்கள் என்று கூறும் ஆசிரியர், வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருக்க எதைச் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவதே சிறந்ததாக இருக்கும் என்கிறார்.
''1998 முதல் 2008 வரை நான் பொழுதுபோக்காக ஆரம்பித்த சிறுதொழில், பெரிதாக வளர்ந்து பின்னர் அதனை 22 மில்லியன் டாலருக்கு விற்றேன். அதன்பிறகுதான் மக்கள் என் கருத்துக்களையும் அனுபவத்தையும் சொல் லுங்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள்'' என சொல்லும் ஆசிரியர், பல பயனுள்ள அனுபவரீதியான கருத்துக்களை இந்தப் புத்தகத்தின் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

''வியாபாரம் என்பது பணம் என்பதை மனதில் வைத்தே செய்யும்  விஷயமாக இருக்கக் கூடாது. உங்களது கனவையும் மற்றவர்களது கனவையும் நனவாக்க உதவும் வகையில் இருக்க வேண்டும். ஒரு நல்ல தொழில் நிறுவனத்தை நடத்துவது என்பது தனிநபரான உங்களை மட்டுமல்ல, நீங்கள் சார்ந்திருக்கும் உலகத்தையும் முன்னேற்ற வழிவகுப்பதாகும். நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது இந்தமாதிரி நிறுவனம் சாத்தியமில்லை என்ற எண்ணத்தைத் தரும் ஐடியாக் களைச் செயல்படுத்த முனைய வேண்டும். அப்படி செயல்படுத்துவதன் மூலம்தான் உங்களால் உங்கள் கனவு உலகை நிர்ணயம் செய்ய முடியும்.

எந்த ஒரு நேரத்திலும் பணத்துக்காக எதையும் செய்யத் துணியாதீர்கள். பணத்தை மட்டுமே மனதில் வைத்து தேவைப்படாத நபர்களிடம் விற்பனை செய்ய முயலாதீர்கள். தொழிலில் வெற்றி என்பது தொடர்ந்து தயாரிப்பு களையும் சர்வீஸ்களையும் மெருகேற்றிக் கொள்வதில்தான் இருக்கிறதே தவிர, வேலைக்காகாத விஷயத்தை விளம்பரப்படுத்தி விற்பதன் மூலம் கிடைக்காது'' என்கிறார் ஆசிரியர்.
''உங்கள் பிசினஸ் பிளான் என்பது ஓர் ஆரம்பம் மட்டுமே. ஆரம்பித்த பின்னர்தான் உங்களிடம் இருந்து மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியும். நம்மிடம் பணம் இல்லையே, எப்படி தொழில் செய்வது என்று நினைக்காதீர்கள். பணம் கையில் இல்லாமல் இருக்கும் போது, தொழில் ஆரம்பிப்பதே சிறந்தது. ஏனென்றால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் தொழிலில் இறங்க பணம் தேவை இல்லையே'' என்று கேட்கிறார் ஆசிரியர்.

''அதேபோல், உங்களால் உங்களுடைய கஸ்டமர்கள் அனைவரை யும் திருப்திப்படுத்த முடியாது. எனவே, சில கஸ்டமர்களை முடிந்தவரை திருப்திப்படுத்த நினைப்பதையே தவிருங்கள். நீங்கள் இருந்தால்தான் உங்களுடைய தொழில் நடக்கும் என்ற நிலையை உருவாக்கவே செய்யாதீர்கள். நீங்கள் இல்லாதபோதும் தொழில் செவ்வனே நடக்கும் என்ற நிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் நம்முடைய சந்தோஷத் துக்காகவே செய்ய விரும்புவோம். தொழில் விஷயத்திலும் இதுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும்'' என்கிறார்.

தனிநபர் தொழில்முனைவோர்கள் செய்யும் பல தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர், அவர் செய்த சிறு தவறொன்று அவருக்கு 3.3 மில்லியன் டாலர் இழப்பை உண்டாக்கியது என்று சொல்கிறார். அவர் பிசினஸை ஆரம்பித்தபோது 20,000 டாலர் கடனாக அவருடைய தந்தையிடம் கேட்டாராம். அதற்கு அவரது தந்தை, Òஎதற்கு கடனெல்லாம் கேட்கிறாய். என் பிசினஸிலிருந்து 20,000 டாலரை முதலீடாகத் தருகிறேன்'' என்று தந்து அவருடைய பிசினஸில் முதலீடு செய்தாராம்.  

பத்து வருடத்துக்குப்பின் ஒரு புது பிசினஸ் ஆரம்பித்து, அதில் வந்த முதல் செக்கை வங்கியில் செலுத்தும்போது வங்கி அதிகாரி, ''நீங்கள் கொண்டு வந்திருக்கும் செக் உங்களுடைய புது பிசினஸின் பேரில் இருக்கிறது. பேசாமல் புது பிசினஸை பழைய பிசினஸின் அலைஸ் பெயராக வைத்துக் கொள்ளுங்கள்'' என்றாராம்.

ஆசிரியரும் புதிய பிசினஸின் பெயரில் வந்த செக்கை பழைய பிசினஸின் பெயரில் மாற்றி வாங்கிப் போட்டாராம். பின்னர் புது பிசினஸ் விஸ்வரூப அளவில் வளர்ந்ததாம். இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன் ஃபைல் பண்ண வரித் துறையிடம் போனால், எக்கசக்கமாக வரி கட்டச் சொல்ல, 'அட, நான் 20,000 டாலரை திருப்பித் தந்துவிடுகிறேன்என்றாராம்.

ஆனால்,  வருமான வரித் துறையோ, ''விஸ்வரூப வளர்ச்சி கண்ட பிசினஸை மீண்டும் 20,000 டாலருக்கு  நீங்கள் திரும்பி வாங்கிக்கொள்ள முடியாது. எங்கள் அளவீட்டின்படி பார்த்தால், நீங்கள் ஷேரை திரும்ப வாங்குவதற்கு 3.3 மில்லியன் டாலர் டாக்ஸ் கட்ட வேண்டும்'' என்றார்களாம். வேறு வழியில்லாமல் கட்டினேன் என்று சொல்லும் ஆசிரியர், பேங்கில் ஒரு கணக்கைப் புதிதாகத் திறக்க
சோம்பேறித்தனப்பட்டதற்கு தண்டனை 3.3 மில்லியன் டாலர் என்று சொல்கிறார்.

அதேபோல், புதிதாகத் தொழில் துவங்குபவர்கள் வேலையைப் பிரித்துக் கொடுக்க மனது ஒப்பாமல் எங்கும் எதிலும் தாங்களே முடிவெடுக்க வேண்டும் என நினைத்து, தங்கள் உடம்பைக் கெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே, அடுத்தவர்களுக்கு முடிவெடுக்கும் பொறுப்பைக் கொடுத்துவிடுங்கள். அப்படித் தரும்முன் திட்டவட்டமான கையேடு ஒன்றைத் தயார் செய்து தந்துவிடுங்கள். எந்தெந்த முடிவுகளில் எந்தெந்த தூரம் அவர்கள் செல்லலாம் என்பதை அது குறிப்பிட்டுச் சொல்லுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்

ஏனென்றால், முடிவு எடுப்பவர்கள் தைரியமாக எடுப்பதற்கு அது மிகவும் உதவும் என்கிறார் ஆசிரியர்.  இறுதியாக ஆசிரியர் சொல்வது, நீங்கள் எவ்வளவுதான் நல்ல விஷயங்கள் செய்தாலும், நல்ல லாபம் ஈட்டினாலுமே உங்களைக் குறைசொல்லும் கூட்டம் ஒன்று உலகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அதேபோல் நிறுவனம் பெரிதாகப் பெரிதாக முதலாளியின் மகிழ்ச்சி குறையவே செய்யும். ''நான் தனியாளாக வேலை பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சி, 86  பேரை வைத்து செய்தபோது கிடைக்கவில்லை'' என்று சொல்லும் ஆசிரியர், ''எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் சொந்தத் தொழில் செய்வதே சிறப்பு'' என்று முடிக்கிறார்.


தொழில்முனைவோர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது!


No comments:

Post a Comment