எல்லோர் மீதும் நம்பிக்கை கொண்ட சிம்மராசி நேயர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை சுக வீடான 4ம் வீட்டில் சனி அமர்கிறார். இந்த காலத்தில் வாழ்க்கை சற்று சவாலாகவே இருக்கும்.
உங்கள் ராசிக்கு 6 மற்றும் 7ம் வீட்டதிபதியாக சனி வருவதால் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். ஒப்பிடுதலைத் தவிர்க்கவும். எதிலும் முன்யோசனை யுடன் செயல்படவும். செலவுகள் துரத்தும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரங்களை சரிபார்ப்பதுடன், வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படவும். டிரைவிங் லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை உரியநேரத்தில் புதுப்பிக்கவும்; அபராதம் செலுத்த நேரிடலாம். சிலர், குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த முற்படுவர். அவர்களின் பேச்சைக் கேட்டு, வீண் சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளா தீர்கள். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் கட்ட வேண்டாம். சாட்சிக் கையொப்பமிட வேண்டாம்.
சனி பகவான் சஞ்சாரப் பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 4ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வழக்கு சாதகமாகும். மகளின் திருமணம் சிறப்புற நிகழும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேற்றுமொழி பேசுபவர் களால் திருப்புமுனை உண்டாகும்.
உங்கள் சஷ்டமசப்தமாதிபதியான சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், வந்து போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிக்கு வேலை கிடைக்கும்.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் தனாதிபதியும் லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் உங்களின் புகழ் உயரும். வேலை கிடைக்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புதுப் பதவி தேடிவரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால், சுபச் செலவுகள் அதிகரிக் கும். பூர்வீகச் சொத்தை செலவு செய்து சீர் செய்வீர்கள்.
சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் கடனாகக் கொடுத்ததை வசூலிப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சனி 10ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைப்பளு, விரும்பத் தகாத இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துசெல்லும்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டும். யாருக்கும் கடன் தரவேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவு களோ, முதலீடுகளோ வேண்டாம். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, துரித உணவகம், பெட்ரோகெமிக்கல் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். திடீர் இடமாற்றங்கள் வந்துபோகும். உங்களை வழக்கில் சிக்கவைக்க சிலர் முயற்சிப்பார்கள்.
கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தாயாரை அனுசரித்துப் போகவும். மாணவர்களே, விளையாடும்போது சிறு காயங்கள் ஏற்படக்கூடும்; கவனம்!
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி வேலைச்சுமை, இடமாற்றங்களை தந்தாலும், தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றிபெற வைக்கும்.
பரிகாரம்: உத்திராடம் நட்சத்திர நாள் அல்லது அமாவாசை தினங்களில், திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீகிருபாபுரீஸ்வரரை தீபமேற்றி வணங்கி வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
No comments:
Post a Comment