சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கன்னி

லகலப்பான கன்னி ராசிக் காரர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்கிறார்.
பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்றுசேர்வார்கள். தோல்வி முகம் மாறும். குடும்பத்தில், உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பர். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். மகளுக்கு, நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

சிலர், கடன்பட்டாவது வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோனுக்காக பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்கவேண்டாம். அதற்கான வழி வகைகள் பிறக்கும். வீண் பழிகள் விலகும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவர்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் சுகசப்தமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 3ம் வீட்டில் சனி செல்வதால் தைரியம் கூடும்.அரசு காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் மன வருத்தம் நீங்கும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், பேச்சால் பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.  
30.4.15 முதல் 1.8.15 வரை குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். எனினும் பழைய கடனை நினைத்துக் குழம்புவீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும் சஷ்டியாதிபதியுமான சனி, சுயநட்சத் திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்கிறார். இக்கால கட்டத்தில் பூர்விகச் சொத்து கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் பெறுவீர்கள். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்புடன் செயல்படவும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனி அனுஷத்தில் வக்ரமாவதால், சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பண வரவு இருந்தாலும் செலவு களும் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். வீடு, வாகனம் அமையும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், சளி, இறுமல், கழுத்து வலி வந்துபோகும்.
சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்து வழக்கு சாதகமாகும். உயர்கல்வி, பணியின் நிமித்தம் பிள்ளைகளைப் பிரிய நேரிடும். சனி 9ம் வீட்டைப் பார்ப்பதால் செலவுகள் அதிகமாகும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், கனவுத் தொல்லை, வந்துபோகும்.

வியாபாரம் சூடுபிடிக்கும். சந்தை நிலவரம், வாடிக்கையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். உணவு, எரிபொருள், வாகனம், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்.
கன்னிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். உங்களுடைய ஆசைகளை பெற்றோர் நிறைவேற்றி வைப்பார்கள். திருமணம் விரைந்து முடியும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம் பதவியை அள்ளித் தருவதாக அமையும். 
பரிகாரம்: திருவோணம் மற்றும் ஏகாதசி தினங்களில், விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் அருளும் பூவராகவப் பெருமாளை வணங்கி வாருங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.



No comments:

Post a Comment