சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 ரிஷபம்

டந்துவந்த பாதையை மறவாத ரிஷப ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரை உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் நுழைந்து பலன் தரப் போகிறார், சனிபகவான். '7வது வீடு எனில் கண்டகச் சனி ஆயிற்றே’ என்று பயம் வேண்டாம். அவர், உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் நல்லதே செய்வார்.
எனினும், களத்திர ஸ்தானமான 7ல் சனி அமர்வதால், சிலருக்குத் திருமணம் தள்ளிப்போகும்.தம்பதிக்குள் பிரிவு ஏற்படக்கூடும்.  விட்டுக்கொடுத்துப் போகவும். மனைவி சுட்டிக்காட்டும் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். புதியவர்களை வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம்.

முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறி ஞரை ஆலோசித்து  முடிவெடுங்கள்.அரசு வரிகள் செலுத்துவதில் தாமதம் வேண்டாம். தீய நட்பைத் தவிர்க்கவும். எவரிடமும் வரம்பு மீறி பேசவேண்டாம்.உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய நேரிடும்.
வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் அஷ்டம லாபாதிபதியான குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 7ம் வீட்டில் சனி செல்வதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவர்வழி உறவினருடன் பிணக்குகள், சிறு விபத்துகள், மூச்சுத் திணறல், வேலைப்பளு வந்துபோகும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீடான துலாம் ராசி விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், எவரை நம்புவது என்று  குழப்பம் ஏற்படும். ஒரு சொத்தை விற்று மறுசொத்தை காப்பாற்றுவீர்கள். காசோலை தரும்போது, வங்கி கையிருப்பை சரிபார்ப்பது நல்லது.
30.04.15 முதல் 01.08.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், எதிர்ப்பு கள் அடங்கும். பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலைக்கான முயற்சி பலன் தரும்.
உங்கள் பாதகாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். புறநகரில் வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை... சனி அனுஷத்திலேயே வக்ரம் ஆவதால், அக்கம் பக்கத்தாருடன் அனுசரித்து செல்லவும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் தனபூர்வ புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள்.எதிர்பார்த்த தொகை வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். பூர்வீகச் சொத்தை
புதுப்பிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டையிலேயே சனி வக்ரமாகி செல்கிறார். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் உண்டு.பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். புது பதவிகள் தேடி வரும்.
சனி ராசியைப் பார்க்கிறார். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். மறதி, பித்த மயக்கம் வந்து நீங்கும். சனி 4ம் வீட்டைப் பார்ப்பதால், அபராதம் செலுத்தும் சூழல் ஏற்படலாம்; வாகன லைசென்ஸ் விஷயத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சனி 9ம் வீட்டைப் பார்ப்ப தால் அதீத செலவுகள் இருக்கும்.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. கடனுதவியும் கிடைக்கும். புரோக்கரேஜ், கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் உண்டாகும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும்.

உத்தியோகத்தில், சிலர் உங்கள் ஐடியாக்களை தனதாக்கிக் கொள் வார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவார்கள். திருமணம் தாமதமாகி முடியும். மாணவர்கள், பாடங்களில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, அலைச்சலையும் தாமதத்தையும் தந்தாலும், கடின உழைப்பால் உங்களை முன்னேறவைக்கும்.
பரிகாரம்: உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் திருவிடைமருதூர் சென்று ஸ்ரீமகாலிங்கேஸ்வரருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.



No comments:

Post a Comment