சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2014

'' 'கிட்ணா’ என்ன கதை?''

வெள்ளக்காரன் நாட்டைவிட்டு போனப்ப, 'உங்க நாட்ல உள்ள எல்லா வளத்தையும் நாங்க  சுரண்டிட்டோம். இனி சுதந்திரத்தை வாங்கி என்னய்யா பண்ணப்போறீங்க?’னு கேட்டானுங்களாம். 'எல்லாத்தையும் சுரண்டிட்டீங்கனு தெரியும். ஆனால் உங்க யாராலும் திருட முடியாத ஒரு சக்தி இங்க இருக்கு. ஒரு மனுஷன் தடுமாறி விழுந்தா தாங்கிப்பிடிக்க இன்னொரு மனுஷன் இருக்கான்கிற மனிதாபிமானம் அது. என் தேசத்தில் இருந்து அதை யாராலும் திருட முடியாதுனு சொன்னாராம் காந்திஜி. இன்னைக்கு அந்த மனிதாபிமானம் எங்கே இருக்குங்கிற கேள்வியும் அதுக்கான பதிலும்தான் இந்த 'கிட்ணா’!'' - குறிப்பு எடுத்த தாள்களும், விரித்துவைத்த புத்தகங் களுமாகச் சூழ்ந்திருக்கும் அறையில் அமர்ந்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. ''இது என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம்'' என்கிறார்.


'' 'கிட்ணாஎன்ன கதை?''
''எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதிய 'கீதாரிநாவல்தான் இதன் மூலக்கதை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 'நாடோடிகள்படப்பிடிப்பு சமயத்தில்தான் இந்த நாவலைப் படிச்சேன். இதுவரை எந்தவொரு நாவலைப் படிக்கும்போதும் அழுதது கிடையாது. ஆனால் இதைப் படிக்கும்போது என்னையறியாமல் அழுதேன். அதற்கு, அந்த நாவல் பேசிய மனிதாபிமானம்தான் காரணம். சகோதரி தமிழ்ச்செல்வியிடம் முறையாக அனுமதி வாங்கி, அதில் சினிமாவுக்கான விஷயங்களைச் சேர்த்தேன். 'கிட்ணாஉருவானான்.''

''அப்படி என்ன கதை இது?''
''காட்டுக்குள் வாழும் மனிதர்களிடம் இருக்கக்கூடிய ஈரம், ஊருக்குள் வாழும் மனிதர்களிடம் இருக்கிறதா? அப்படி என்றால், யார் ஊருக்குள் வாழ வேண்டியவர்கள், யார் காட்டுக்குள் வாழவேண்டியவர்கள் என்ற கேள்விகள்தான் கதை. கிட்ணா பேசும் வசனங்கள்ல இருந்து ஒண்ணே ஒண்ணு சொல்றேன். 'நீ செஞ்ச பாவமும் புண்ணியமும் உன் தலைக்கு மேல அடிச்சிட்டுக் கிடக்குது. பாவத்தை புண்ணியம் ஜெயிச்சிடுச்சுன்னா... நீ தப்பிச்ச. புண்ணியத்தை பாவம் ஜெயிச்சிடுச்சுன்னா... உனக்குள் சாத்தான் வந்துடுவான். அதனால முடிஞ்சவரைக்கும் நல்லது செஞ்சிடுங்கடா.’ இதை நீங்க சப்டைட்டில் பண்ணினா பைபிள் வாசகம் மாதிரியே இருக்கும். அதனால் 'கிட்ணாஎன்ற தலைப்புக்குக் கீழே 'குட் ஷெப்பர்டுனு சப் டைட்டில் போட்டிருக்கேன்.''

''நாவலை மையமாக வைத்தே மொத்த ஸ்கிரிப்டையும் எழுதிட்டீங்களா?''
''இல்லை, நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அந்த மனிதர்களைத் தேடிப் போனபோது, அவங்க இப்பவும் அப்படியே இருப்பது தெரிஞ்சது. 'சாப்பிட்டீங்களா, நீச்சத் தண்ணி குடிக்கிறீகளா?’னு கேக்குறாங்க. தங்கள்கிட்ட இருக்கிற கொஞ்சம் உணவையும் மத்தவங்களோடு பகிர்ந்துக்க நினைக்கிறாங்க. ஆடுகள்தான் அவர்களின் உலகம், சொத்து... எல்லாம். அதனால, புல், பூண்டைக்கூட மதிக்கிறாங்க. நமக்கு இந்த உலகில் வாழ எவ்வளவு உரிமை உண்டோ, அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டுனு சொல்றாங்க. அவங்க வெச்சிருக்கும் வேல்கம்பு பற்றி ஒரு தகவல் கிடைச்சது. அது, ஆடுகளுக்குத் தேவையான இலைதழைகளை வெட்ட, தங்களைப் பாதுகாக்க, ஆடுகளைக் காவல் காக்க என அவங்களுக்கு அந்த வேல்கம்புதான் சாமி. கல்யாணம் காட்சி என வரும்போது, 'ஆடுகளைப் பாத்துக்கப்பா, கல்யாணத்தை முடிச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போக முடியாது. அதனால, மாப்பிள்ளை கையில் உள்ள வேல்கம்பை வாங்கிட்டுப் போய் வெச்சு தாலி கட்டச் சொல்வாங்களாம். அதாவது அந்தக் கம்பு அவனுக்கு சமம். அதை பெண்ணின் அருகே வைத்து, கணவனாகப் பாவித்து, நெருங்கிய உறவுப் பெண் ஒருத்தி தாலி கட்டுவாங்களாம். இது ஐதீகம். இப்படியான பல தகவல்கள்.


'கிட்ணாவா நான். என் மனைவியா தன்ஷிகா. 'சாட்டைமஹிமா, அகிலா கிஷோர், சூரி, கஞ்சா கருப்புனு ஒன்பது கேரக்டர்ஸ். எல்லாமே கனமானவை. இதில் ஹீரோ என தனியாக யாரும் கிடையாது. கதை ஒரு சில நேரத்தில் சிலரை முன்னிறுத்தும். அந்த நேரத்தில் அவங்க ஸ்கோர் பண்ணிக்க வேண்டியதுதான்!''

''முக்கியமான பதிவு என்கிறீர்கள். அப்படி இருக்கையில் இயக்கி நடிப்பது சிரமமாகத் தெரியவில்லையா?''
''28 வயதில் தொடங்கி 68 வயதில் முடியும் 40 ஆண்டு கால வாழ்க்கையைப் பதிவு பண்றேன். எனக்குத் தெரிந்தவரை இதை எடுத்து முடிக்க ஒரு வருஷம் தேவைப்படும். ஒவ்வொரு பகுதியா எடுத்து, உடல், மனம் இரண்டை யும் மாற்றினால்தான், அடுத்த பகுதிக்குப் போக முடியும். சசி தந்த நடிப்பு வாய்ப்புகளும், சமீபத்தில் 'வேலையில்லா பட்டதாரிபடத்துக்கான வரவேற்பும்தான் 'நம்மால் இதைப் பண்ண முடியும்கிற நம்பிக்கையைத் தந்தது. 'கிட்ணாவா மாறுவதுனு முடிவு பண்ணி இறங்கிட்டேன்.''

''உங்கள் நண்பர் குருவின் குடும்பத்தைச் தேடிச்சென்று பார்த்தது, விகடனில் கட்டுரையா வந்தபோது செம ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதன் பிறகான நெகிழ்ச்சி சம்பவங்கள் உண்டா?''
''அந்தக் கட்டுரை இளைஞர்கள் நிறையப் பேரைத் தேடிப்போகவெச்ச அதே அளவு முதியவர்களையும் நிறையப் பாதிச்சிருக்கு. 'நான் ஏதோ ஒரு ஏக்கத்தில் போயிட்டு வந்துட்டேனே தவிர, அந்த வரவேற்பு எனக்கே பெரிய வியப்புதான். ஒரு சிக்னலில் நின்ன என் கார் கண்ணாடியை வயசான ஒரு அம்மா தட்டி, ரெண்டு கையாலும் என் தலையைத் தடவி நெட்டி முறிச்சு... 'விகடன் படிச்சேன்யா. எனக்கு தினமும் காலையில் அந்தம்மா முகம்தான் கண்ணு முன்னால் வருது. அவங்க நல்லா இருக்காங்கங்கிறதே சந்தோஷமா இருக்கு. நீ நல்லா இருக்கணும்யானு சொன்னாங்க. நம்ம ஆபீஸுக்குக் கீழ ஒரு பெரியவர் இருப்பார். தினமும் வழியில் பார்ப்பேன். அவர் சொன்னார்... 'நீ தினம் வருவ போவ... சினிமாக்காரன்தானேனு நினைச்சிட்டு இருந்தேன். விகடன்ல அந்தக் கட்டுரையைப் படிச்சப் பிறகு, ஒரே ஒரு தடவை இப்ப உனக்குக் கைகொடுக்கணும்னு தோணுதுப்பானு கண்கள் கலங்கிப்போய் எனக்குக் கைகொடுத்தார். இந்த மாதிரி நிறைய மனிதர்கள்... நிறைய அனுபவங்கள்!''


''இப்ப குரு குடும்பம் எப்படி இருக்கு?''
''நான் அவங்களைப் பார்க்கச் சென்றபோது, என் கையில் இருந்ததை அவங்க வாங்க மறுத்தாலும் திணிச்சுட்டு வந்தேன். ஆனா, அதன் பிறகு ஆடுகளும் பசுமாடுகளும் அந்த வீட்டை நோக்கிப் போனபோது, 'நீ வந்து பாத்ததே போதும்யா. நீயும் என் புள்ளைனு சொல்லிட்டீல, அதான் நீ இருக்கீல்ல. இதெல்லாம் எதுக்குயா? என்னையைக் கடங்காரன் ஆக்கிடாதனு சொன்னாங்க. அப்ப அவங்க வெச்ச ஒரே ஒரு கோரிக்கை, 'என் பேரனை மட்டும் எப்படியாச்சும் ..எஸ் ஆக்கிவிட்ருஎன்பதுதான். விகடன்ல கட்டுரை வந்த அடுத்த நாளே, சங்கர் ..எஸ் அகாடமியில் இருந்து போன். 'நண்பா, விகடன்ல படிச்சேன். அவருக்கான புத்தகங்கள், தங்குறதுக்கான விஷயங்களை நீங்க பாத்துக்கங்க. அவர் படிப்புக்கான ஃபீஸ் எதுவுமே கட்ட வேண்டாம். நான் சேர்த்துக்கிறேன்னு சொன்னார் சங்கர். இங்க எவ்வளவு நல்ல மனிதர்கள் இருக்காங்க. இப்ப அந்தத் தம்பி மூணு மாசமா படிச்சிட்டு இருக்கார். 'நீ குரூப்-4 பாஸ் பண்றியா, ..எஸ் ஆகுறியா?’ங்குறது உன் கையில்தான் இருக்கு. எவ்வளவு அவகாசம் வேணும்னாலும் எடுத்துக்க... படி. உனக்குத் தேவையானது எல்லாத்தையும் செஞ்சு தர்றேன்னு சொல்லியிருக்கேன். படிச்சிட்டு இருக்கார். குருவின் ஆசி அவரை ..எஸ் ஆக்கிடும்னு நம்பிக்கை இருக்கு!''No comments:

Post a Comment